பரிசு - கருணாகரன்

Photo by Sajad Nori on Unsplash

மணல்வெளிக் கோயிலில்!
பாடுகளைச் சொல்லி!
மன்றாடும் பெண்ணிடம் !
வழிபாட்டின் ரகசியம் என்னவென்று !
கடவுள் கேட்டார்!
அந்த அதிகாலையில் !
கடவுளின் குரல் !
அவளுடைய செவிகளை அண்ட விடாது!
பெருகிய போரொலி!
கடவுளைத் தொடர்ந்து பேசவிடவில்லை!
கடவுள் ஏதேதா சொல்வதை !
அவதானித்த அவள்!
அவரை நெருங்கிப்போய் !
அருகிருந்து விவரம் கேட்க முனைகையில்!
பார்த்தாள் !
பதுங்கு குழிக்கருகில்!
கடவுளின் அங்க வஸ்திரம் தனியே கிடந்தது!
அவளதை தீண்டிட முன்னே !
அவளைச்சுற்றி!
ஒரு பாம்பாக வளைந்த தது!
பிறகு !
மேலெழுந்து போனது !
எங்கோ!
அவள் !
தேவாலயத்தின் சுவர்களில் !
தன்னுடைய தலையை மோதி அழுதாள்!
தனக்கும் கடவுளுக்கு மிடையிலான !
பந்தத்ததை சாட்சியாக வைத்து!
பிறகு !
மணல்வெளித் தேவாலயத்தில்!
கடவுள்!
நீண்ட நாட்களாக வர முடியாதிருந்தார்!
அவளுடைய குரலும் வேதனையும்!
அங்கிருக்கென்று!
தேவாலயத்தில் நிரம்பிய!
அவளுடைய குரல்!
மணல்வெளியில் சுவறிக் கொண்டிருக்கிறது
கருணாகரன்

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in

There are no comments yet.