சத்தி சக்திதாசன் !
!
இன்றுவரை அமைதி காத்துக் !
கண்டதென்ன !
இதயம் பேசட்டுமே ! !
அன்னையவள் கைகளிலே !
தவழ்ந்தபோது !
அமைதியைக் கண்டதவள் !
கண்களிலே !
தந்தையின் பின்னோடு !
சென்றபோது !
பாதுகாப்புக் கண்டது !
அவர் நிழல்தனிலே !
இதயம் பேசட்டுமே !
இல்லாததையா பேசிவிடும் ? !
இன்று மட்டும் பேசட்டுமே ! !
நண்பனுடன் !
நாளெல்லாம் அலைந்தபோது !
பாசத்தைக் கண்டதும் !
பாசியாய்ப் படிந்ததுமே ! !
கல்லூரி நாட்களில் !
கற்காத சாத்திரங்கள் !
கனவுதான் மிஞ்சியது !
கண்களிலே ! !
கன்னியவள் மனதினிலே !
ஊஞ்சலாட்டம் !
காதலென்னும் கற்பனைத் !
தேரோட்டம் ! !
கடல் கடந்த பயணங்கள் !
கலைந்தோடும் மேகங்கள் !
கானல் நீரை நோக்கிப் !
படகோடு யாத்திரை ! !
இதயம் பேசட்டுமே !
இயங்கும் வரை !
இனியும் ஏன் மௌனம் ! !
இயல்பான வாழ்க்கையில் !
இணைந்து கொண்டதும் !
இனிமைகள் சில !
இழைந்து கொண்டதும் !
இன்னமும் நெஞ்சில் தென்றலாய் ! !
குடும்பம் எனும் கோவிலில் !
குலவிளக்காய் குணவிளக்கு !
குழந்தை எனும் செல்வமாய் !
குழைந்து வந்த குளிர் மேகம் !
இன்பம் பாதி இங்கே !
துன்பமும் பாதி கண்டேன் !
இதயத்தை பேச விட்டு !
இறுக்கம் கொஞ்சம் !
இழந்து விட்டேன்
சத்தி சக்திதாசன்