ஊர்திகளின் ஓய்வற்ற அணிவகுப்பால்!
ஊமையாய் கண்ணீர் விட்டு,!
வாடி வதங்கி போய் விட்ட நெடுஞ்சாலை...!!!
நெருக்கடியும், நெரிசலுமாய்!
நெளிகின்றது எம் தேசம்...!!!
செப்பனிடப்படாத வீதிகள்..!
செத்து பிழைக்கின்றன..!!
புது புது இன வரவுகளால்,!
புத்துயிர் பெற்று விட்ட வீதியோர!
புல்பூண்டுகள்...!!!
பதரோடு, மிதிவெடியும்!
பதுங்கி கிடக்கும் என்று, எம்மவர்!
கைவிட்டு காடாகி போன!
வீதியோரமெங்கும்...!
கல் வைத்து தீ மூட்டி,!
கதிரை போட்டமர்ந்து,!
கை நனைக்கும் வேற்றின மக்கள் தொகை..!
குடியிருக்கும் தமிழனை விட அதிகமாய்...!!!
பூர்விகமாய் காலங்காலமாய்..!
குடியிருந்த எம்முறவுகளை...!
காணவில்லை...!
எம்மண்ணிலே....!
சுற்றுலா என்று..!
சுற்றி பார்க்க வருபவர்கள்...!
அநாதரவான நிலத்திலே...!
அத்து மீறி நிரந்தரமாய் !
குந்தி விட்டாலும்...!
ஆச்சரியப்படுவதற்கில்லை...!!!
ஆக்கிரமிப்பையும்!
அடிமைத்தனத்தையும் !
ஆசைப்பட்டு ஏற்றுக்கொண்ட இனம்!
அல்லவோ எம்மினம்..!!!!
அதனால் - இந்த!
அத்துமீறலையும்!
அன்போடு ஏற்றுக்கொள்ளட்டும்
அரசி