தமிழ் கவிதைகள்

தமிழ் கவிதைகள்

தமிழின்பம்

சத்தி சக்திதாசன்
சத்தி சக்திதாசன் !
யான் பெற்ற நற்றவப் பயன் இங்கு !
யாத்தெடுத்த தமிழ் கோர்க்கும் !
நூற்தொடுக்கும் மனமுடைத்து எனை !
நூறாண்டு நிலையாக்கும் வகை செய்தான் !
கவியெந்தன் கருத்தினில் பொழிய - என்றும் !
கற்றுணர்ந்த தமிழென் கைகொடுத்து உயர்க்கும் !
சிற்றறிவேயெ ந்தன் சிரசில் கொண்டாலும் !
சிந்தனையொ ப்ப வழியும் நினைவலையே !
பலர் ரசிக்க தமிழ்கூறி மகிழ்ந்திருந்து !
பண்பாடி யென்றும் இசையினில் மூழ்கி !
தாய்மொழியின் அழகில் அமிழ்ந்தெந்தன் !
தந்தை நாட்டின் கனவில் மிதந்திருப்பேன் !
சப்தத்தின் ஸ்வரங்கள் மெருகேற்றி !
சங்கீத மழைபொழிந்து கண்ணயர்க்கும் !
சொற்றுணை கொண்டு யானிங்கு உம்முடனே !
செந்தமிழ் புகழ்பாடி சிறந்திருப்பேன்

இறந்து போவது மேலாகும்

அஸ்மின், ஈழநிலா, இலங்கை
சோரும் போது ''சொறிந்து'' கொடுத்தால்!
சோகம் எமக்கு காலாகும்!!
பாலைக் கறந்து படுத்துக் கிடந்தால்!
பாலும் கூட பாழாகும்!!
துணிவை உனக்குள் வளர்த்துப்பாரு!
துயரம் யாவும் தூளாகும்!!
''இரந்து வாழும் வாழ்வைக் காட்டிலும்!
இறந்து போவது மேலாகும்''!
உணர்ச்சியற்று கிடக்கும் நெஞ்சை!
உசுப்பும் கவிதை வாளாகும்!
வீரம்மறந்து வீழ்ந்து கிடந்தால்!
விடியல் தோன்ற நாளாகும்!
''பயந்து வாயை பொத்தியிருந்தால்!
பழைய சோறும் கிடைக்காது!''!
துணிந்து எதிர்த்து கேட்கும் நெஞ்சை!
தோட்டாக் கூட துளைக்காது!!
நாய்கள் போடும் கூச்சல் கேட்டால்!
நாளை உனக்கு விடியாது!!
உறுதிநெஞ்சில் இருந்தால் உந்தன்!
உயர்வை தடுக்க முடியாது

ஓம் முருகா

v.கண்ணன் - மகிபை
ஊர் நெடுக உன் பாட்டை!
என் உளமுருக பாடுகையில்!
ஓர் துயரம் எனக்கில்லை ஓம் முருகா!!
உணர்ந்தேனே உன் அருளை!
உருவான செந்தமிழே!
உனை வேண்டிப் பாடுகிறேன் ஓம் முருகா!
சிவஞானம் பெற்ற மகன்!
இந்த சிங்கையிலே குடிகொண்டு செந்தூரமாய் நீ!
காவடியும் தேர்வடிவும் கால் நடையாய்!
பக்தர் கூட்டம் ஓம் முருகா!!
திருவாளும் மலர் கொண்டு!
பூமாலை கட்டி அதை!
உன் பூ பாதம் வணங்கிடவே!
உன் திரு நாமம் போற்றுகிறேன்!
உன் திருவருள் கிடைத்திடவேஓம் முருகா!
நெற்றியிலே நீ பிறந்தாய்!
நெறி தவறா குமரனே!!
தமிழ் செப்புடையோர் வாழ்கின்ற!
இந்த சிங்கையும் ஒரு படைவீடே ஓம் முருகா!!
நூறு படை வந்தாலும்!
ஆறு படை போதுமடா!
ஆறுமுகம் வேலெடுத்தால்!
நூறு முகம் வீழுமடா ஓம் முருகா!!
மலர் கொண்டு தூவிட்டு!
மனமுருகி வேண்டுகிறேன் ஓம் முருகா!!
!
-v.கண்ணன் - மகிபை

இன்னொரு கரை... கவிதையை முன்வைத்து

செல்வராஜ் ஜெகதீசன் - அபுதாபி
01.!
இன்னொரு கரை !
---------------------------!
அக்கா கொடுக்கச் சொன்னதாய்!
தம்பி கொடுத்துப் போன!
புத்தகத்தின் அட்டைப் பகுதியில்!
வைக்கப்பட்டிருந்தது!
எட்டாவது படிக்கும் பெண்!
ஹெட்மாஸ்டருக்கு!
எழுதிய காதல் கடிதம்.!
ஆறேழு வருடங்களுக்குப் பின்!
அவர்கள் இருவரையும்!
அவரவர் துணைகளோடு!
வைத்துப் பார்க்க நேர்ந்தது!
வேறு வேறு ஊர்களில்.!
காதலியின் பெயரைக்!
இடதுகை மணிக்கட்டில்!
தீக்கம்பி கொண்டு !
திரும்பத் திரும்ப எழுதி!
தீவிரமாய் காதலித்தவன்!
திருச்சி பக்கம் எங்கேயோ!
டிக்கெட் கிழிக்கும் பணிசெய்ய!
புதுக்கருக்கு மாறாத!
பொன்மஞ்சள் தாலியுடன்!
இன்னொருவன் மனைவியாக!
பெண்ணவளைப் பார்க்க நேர்ந்தது!
பேருந்துப் பயணமொன்றில்.!
மாதொருத்தியின்!
மனசைத் தெரிந்து கொள்ள!
மாத்திரைகள் உட்கொண்டு!
மரணத்தோடு போராடி!
உருத்தெரியாமல் இளைத்து!
உலவிக் கொண்டிருந்தவன்!
அனைவரும் வியக்கும்படி!
ஆகிப் பெருகி வந்தது!
அயல் தேசமொன்றில்.!
நாலைந்து வருடங்கள்!
நங்கை ஒருத்தியின் பால்!
ஒருதலை காதல் கொண்டு!
ஒருவாறு சலித்து தெளிந்து!
மற்றொரு பெண்ணோடு!
மணவாழ்க்கை மேற்கொள்ளும்!
நண்பன் இருப்ப தந்த!
நங்கையின் எதிர் வீடொன்றில்.!
இன்னொரு கரை என்பதுண்டு!
எல்லா ஓடங்களுக்கும்..!
!
02.!
கவிதையை முன்வைத்து...!
----------------------------------!
நர்சரி படிக்கும் மகன்!
இன்று விளையாட தேர்ந்து கொண்டது!
நான் வாசிக்க வைத்திருந்த!
கவிதைப் புத்தகங்களில் ஒன்றை.!
தொலைதூர பயணமொன்றில்!
டேப் ரெகார்டரில் ஒலித்த!
பாடலின் வரிகள்!
எங்கோ படித்த கவிதை வரிகளின்!
இன்னொரு வடிவம்.!
முதல் முதல் பார்த்த!
தோழியின் கணவரிடம்!
சகஜமாக உரையாட முடிந்தது!
என் முதல் கவிதைத் தொகுதியை!
முன்வைத்து.!
மகன் பிறந்த நாள்!
கொண்டாண்டத்தின் இடையில்!
நண்பனின் மனைவி ஒருவர்!
நான் எழுதிய கவிதை ஒன்றை!
வரி மாறாமல் சொல்லி!
வாழ்த்தியது பாராட்டுமுகமாய்.!
நிகழ் கணங்கள் யாவிலும்!
நிறைந்து நடை பயிலும்!
கவிதையின் கால்தடங்கள்

மின்னல் இளவரசன் கவிதைகள் 21-10-07

மின்னல் இளவரசன்
செந்தாமரை !
வண்டு உனைக் கண்டு கொண்டது!
மதுவிலக்கு இல்லாத மாளிகையாக!
மொட்டிலிருந்து மலராக!
சூரியனுக்கு நீ சொந்தமானாய்!
மொட்டாக இருந்தபோது!
உனைச் சுற்றாத வண்டு!
மலர்ந்தபோது மயங்கி விழுந்தது. (தேன் மதுவருந்தி) !
---------------------------------!
காக்கை !
ஐந்தறிவு பெற்ற காக்கையிடம் உள்ளது!
ஆறறிவு படைத்த மனிதனிடம் இல்லாதது!
பகிர்ந்துண்ணும் பண்பு!
ஒற்றுமையை உன்னிடமும்!
உழைப்பை எறும்பிடமும்!
இன்னமும் மனிதன் கற்க மறுக்கிறான். !
-------------------------------!
ரயில் சிநேகம் !
தாமரை இலையும்!
தண்ணீரும்!
ஒன்றோடு ஒன்று!
ஒட்டாமல், சிநேகமாய்!
ரயில் சிநேகமாய்!
உன்னை நான்!
உயிர் சிநேகிததியாய் நினைத்திருந்தேன்!
நீயோ என்னை!
ரயில் சிநேகிதனாய்!
மறந்துவிட்டாய். !
-------------------------------!
புலவர் !
தாலாட்டு பாட்டுதனில்!
தவப் புதல்வன் தூங்குகிறான்!
தாய் பாடும் பாடலுக்கு!
எப்-புலவன் ஈடுசெய்வார்.!
சேற்று வயல்!
கால் புதைத்து!
நாற்று நடும் பெண்களுக்கு!
பாட்டு தரும் புலவர் யார்.!
-------------------------------!
ஈகை !
உன்னிடம் யாசிப்பவனுக்கு!
யோசிக்காமல் கொடு!
குறைந்த பட்சம் அன்பையும்!
ஆறுதலையுமாவது.!
இருப்பவர்க்கும்!
இல்லார்க்கும்!
இடையில் பகை!
இருக்கவேண்டியதோ ஈகை.!
-------------------------------!
புன்னகை !
பொன் நகை !
இல்லையென்றால்!
பரவாயில்லை!
உன் புன்னகை!
போதும் வாழ்ந்திடுவோம்!
-------------------------------!
நெம்புகோல் !
நீர் இறைக்கும்!
நெம்புகோல்தான்!
ஏற்றமாகும் !
வியர்வையெனும் நீர்!
இறைத்தால்!
உன் வாழ்வும் ஏற்றமாகும். !
-------------------------------!
நேர்மை !
இனி வருங்காலங்களில்!
அகராதியில் மட்டும்!
அர்த்தத்தை தேடலாம்!
அங்கும் கூட!
அதற்கு இடமின்றி போகலாம். !
-மின்னல் இளவரசன்

வெள்ளாடுகளின் பயணம்

துவாரகன்
ஆட்டுக் கட்டையை விட்டு!
எல்லா வெள்ளாடுகளும்!
வெளியேறி விட்டன.!
கண்ட இடமெல்லாம் வாய்வைக்கும் என்று!
என் அம்மா!
ஒரு போதும்!
வெள்ளாடுகளை வாங்கி வளர்ப்பதில்லை.!
இப்போ அவை!
பட்டுப்பீதாம்பரம் போர்த்திக் கொண்டு!
ஊர் சுற்றுகின்றன.!
சிதைந்துபோன கொட்டில்களில்!
தூங்கி வழிவனவெல்லாம்!
பறட்டைகளும் கறுப்புகளும்!
கொம்பு முளைக்காத குட்டிகளும்!
எனக் கூறிக்கொள்கின்றன.!
தம்மைச் சுற்றிய!
எல்லாவற்றையும் கண்காணிப்பதற்கும்!
விடுப்புப் பார்ப்பதற்கும்!
தம் வீட்டுத்தாயரின் தாவணிகளைப்!
பங்குபோட்டுக் கொண்டு!
எஜமானன் போல் வருகின்றன.!
பட்டுப்பீதாம்பரமும்!
ஆரவாரமும்!
நிலையானது என்று!
இதுவரை யாரும் சொல்லவில்லையே!!
ஒருவாய்ச் சோற்றுக்கு அல்லாடுபவன்!
கம்பிமீது நின்றாடும் நிலையில்!
எங்கள் ஆடுகள்

அறுந்து விழும் வேகத்தோடு

ப்ரியன்
நீளும் கரிய இரவில்!
கண்சிமிட்டி சிமிட்டிப் பேசுகிறாய்!!
இருளோடு பேசும்!
மின்மினிகள் போல்!!
- ப்ரியன்.!
உனது கிளைகளில்!
எப்போதும்!
இசைச் சொல்லித் திரியும்!
குயில் நான்!!
- ப்ரியன்.!
உன் அலங்கார அறையை!
முன் அனுமதியின்றி எட்டிப்பார்த்தேன்;!
ஒரு காதில் சூரியனையும்!
மறு காதில் சந்திரனையும்!
அணிந்து அழகுப் பார்த்திருந்தாய் நீ!!
- ப்ரியன்.!
காதல் அகராதியில்!
உன் பெயருக்கு நேராய்!
என் பெயர்!!
- ப்ரியன்.!
வலையோடு காத்திருக்கிறேன்!
விண்மீனான உனைப்!
பிடித்துவிடும் ஆசையோடு!!
- ப்ரியன்.!
* அறுந்து விழும் வேகத்தோடு *!
நன்கு சாற்றி தாளிடப்பட்ட!
கதவின் பின்னால்,!
துக்கமும்!
கவிதையும் இல்லா!
பின்னிரவு கழிகிறது!
அறுந்து விழும் வேகத்தோடு சுழலும்!
மின்விசிறியின் சப்தத்தினோடு!!
- ப்ரியன்

நினைவுச்சிறை ... கா(த)னல்

T.சுபந்தினி
நினைவுச்சிறை!
உன் நினைவுச்சிறையில்!
தினமும் கைதியாகின்ற!
நான்!
விரும்பவில்லை!
விடுதலையை மட்டும்!
ஏன் தெரியுமா?!
சிறையில் மட்டுமே!
நீ என்னை!
சந்திப்பதால்!
!
கா(த)னல்!
என் கனவு!
என் காதல்!
என் காத்திருப்பு!
எல்லாமே !
இன்று கானல்!
நீராகிவிட்டது!
ஆனாலும் !
செத்துவிட!
நான் பாலைவனத்தில்!
நடக்கவில்லை!
நான் இருப்பது!
நந்தவனச்சோலையில்!
திரும்புமிடமெல்லாம்!
நீர்தான்!
ஆனால் அவை!
அத்தனையிலும்!
உன் விம்பத்தின்!
பிரதிபலிப்பு!
இருந்தும் இல்லாதது!
போல!
-- T.சுபந்தினி

எதிர்பார்ப்புக்கள் ஏமாற்றங்களாய்

சுந்தரன்
தர்மம் தலைகுனிந்ததாய் !
சரித்திரம் இன்று வரையும் !
எழுதவில்லை. !
ஆனால் !
காலத்தோடு கை கோர்த்து !
கணக்கு எழுத வேண்டிய !
தேவை எமக்கு !
இத்தனை நாள் போயிற்று !
இனியும் காலத்தைக் கடத்தாதே ! !
இப்போது சொல் !
இன்னமும் உனக்கு இலட்சங்கள் !
வாங்க ஆசையா? !
வேண்டாம் !
தர்மம் என்றும் தாழ்ந்ததும் இல்லை !
அதர்மம் தலை எடுத்ததும் இல்லை !
அதனால் !
அநியாயமாய் அழிந்து போகாதே ! !
உன் துரோகத்திற்குக் கட்டளை இட்டவன் !
உல்லாசமாய் வாழுகின்றான் !
நீ மட்டும் ஏமாளியாகி.. !
நிலத்தில் புதையப் போவதாய் !
ஆடம்பிடிக்ககின்றாய். !
ஒரு கணம் நில் ! !
உன் துரோகத்தனத்திற்குக் கட்டளையிட்டவ¬(ள)ன !
களத்திற்கு வரச் சொல்லிக் கட்டாயப் படுத்து !
தன் இடம் விட்டு அவன் !
தன்னுயிர் போக்க !
நிச்சயம் வரமாட்டான். !
புத்தியற்றவனே !
இப்போதாவது புரிந்து கொள் ! !
புதுவழி உருவாக்கு !
போ! போய் அவளை(ன)யும் !
அவர்கள் பின்னால் நிற்பவர்களையும் !
களத்தில் சந்திக்கச் சொல்லு !
கதை முடிகிறதா அல்லது !
தொடர்கிறதா என்று !
தெற்கே நின்று கொண்டு !
கவனித்துப்பார். !
சா¤த்திரம் !
சந்தோசமான முடிவை !
விரைவில் உனக்கும் அறிவிக்கும். !
நீ இனி எம்மோடு இல்லை !
என்றபின் இன்னுமொரு ஏற்பாட்டிற்கு !
இடமேயில்லை !
களைகள் இன்னும் உள்ளதால் !
காக்கை வன்னியர் கதை தொடர்கிறது !
களையெடுப்புக்களிற்காய் !
காலம் காத்துக்கிடக்கிறது !
தர்மம் தலைவன் பெயா¤ல் !
எம்மோடு வாழ்ந்து கொண்டேயிருக்கும் !
தமிழீழம் மலரும் !
!
- சுந்தரன் - !
கனடா

இலையானும் காகமும் நாயும்

பொலிகையூர் சு. க சிந்துதாசன்
உயிரோடிருந்தபோது!
எவ்வாறெல்லாம் அவன்தன்னை!
அழகு பார்த்திருப்பான்!
இப்போதிவனை!
இலையானும் காகமும்!
புசித்து மகிழ்கிறது!
வெளியேறிவிட்ட குருதி!
கிரவல் வீதியின் சிறுகுழியில்!
குளமாய்.. நிரம்பி!
நாயொன்றின்!
தாகம் தீர்க்கிறது!
அலங்கோலப்பட்டுக் கிடக்குமிந்த!
பிணம்!
அடக்கம் செய்வதற்கானதா?!
அதுகூடத் தெரியவில்லை.!
அதிலொன்றேனும் செய்யப்படவுமில்லை.!
அவனுக்கு மட்டுமல்ல!
இக்கதியென!
மனம் இறுகிக் கொள்கிறது.!
அருகாக மிக அருகாக!
நரிகளின் ஊளை!
காதைக் கிழிக்கிறது.!
தாங்க முடியாமல் தலைமறைவாகிறேன்.!
நரிகளின் ஊளையைப் பொறுட்படுத்தாதபடி!
இலையான் காகம்!
நாய் என்பன!
விருந்துண்டு மகிழ்கின்றன