தமிழ் கவிதைகள்

தமிழ் கவிதைகள்

பத்மினி சாகுமளவிற்கு உன்னை

தக்ஷிலா ஸ்வர்ணமாலி
நேசித்தாள் சந்திரசோம!
----------------------------------------------------------!
சந்திரசோம!
நீ காலமானதும்!
பத்மினி அழவில்லை!
வேறு பெண்களென்றால்!
நிலத்து மண் தின்று!
உளறி உளறி ஓலமிட்டு!
ஒப்பாரி வைத்தழுது!
துயருறும் விதம் நினைவிலெழ!
பத்மினி உன்னை நேசிக்கவில்லையென!
கவலை கொண்டாயோ சந்திரசோம!
எனினும்!
நீயறியாய் சந்திரசோம!
மூன்று நான்கு மாத காலத்துக்குள்!
பேச்சு வார்த்தை குறைந்து!
நடக்கவும் முடியாமல் போய்!
திடீரெனச் செத்துப் போனாள்!
பத்மினி

அலைந்து திரியும் மரணம்

அ. விஜயபாரதி
நடுநிசிப் பொழுதில் !
கொல்லைப் புறக் கதவை !
திறந்து கொண்டு !
பூனை போல !
நடந்து சென்று !
எட்டிப் பார்த்தேன் !
கிணற்றாழத்தில் !
நீரின் விட்டத்திற்குள் !
பதுங்கியிருந்த நிலவு !
சற்று முன் !
எரிந்து வீழ்ந்த !
நட்சத்திரத்தை ஞாபகப்படுத்தி !
எச்சரித்துக் கொண்டிருந்தது !
இன்னும் !
மினுங்கும் நட்சத்திரங்களை !
அ. விஜயபாரதி

சுனாமியழித்த சினேகிதனுக்கு

எம்.ரிஷான் ஷெரீப்
எங்கிருக்கிறாய் !
எனதினிய நண்பனே?!
!
கறுப்பு,வெள்ளை ஓவியங்களாய்க்!
காட்சிகள் மறைய!
நிலவின் சாட்சியாக!
நீ வாழ்ந்த ஊருக்கு!
நிவாரணப் பொருட்களோடு!
நாமனைவரும்!
நள்ளிரவில் வந்தடைந்தோம் !!
!
உனது சுவடு பதித்த!
கடற்கரை,!
உனது சுவடு அழித்த!
கடல்!
அனைத்தையும் பார்த்து!
விக்கித்து நின்றோம் ! !
!
என்றாவதொருநாளில்!
என்னையும் - உனதூருக்கு!
அழைத்துச் சென்று,!
கடல் அழகு காட்டி,!
நடுநிசியில் - சுடச்சுட!
மீன் வறுத்த!
நிலாச்சோறுண்ணும் ஆசையை!
இறுதியாக என்னிடம்!
சொல்லிச் சென்றிருந்தாய் !!
!
புன்னகை தவறிய முகங்களையும்,!
விரக்தி தேங்கிய கண்களையும்!
பார்க்க நேரிட்டபோதெல்லாம்!
உன்னையும் உயிருடன்!
சந்திக்க வேண்டுமென!
இதயம் - ஏங்கித் தவித்திற்று !!
!
உனது இறுதி மூச்சை!
ஏந்திய காற்று,!
உனது சுவாசப்பைகளை!
நிரப்பிய சமுத்திரம்,!
உனது தேகத்தை!
விழுங்கியிருக்கும் பூமி!
அனைத்தும்,!
உனது ஞாபகங்களைத் திரட்டி!
என்னிடம் தந்தன !!
!
கொடிய கனவொன்றினால்!
திடுக்கிட்டெழுதல் போல!
கொடியில் உலரும்!
உனதாடைகளைக் காண!
நேரிடும் கணங்களிலெல்லாம்!
நெஞ்சு நடுங்கி,!
விம்மித் தடுமாறுகின்றேன்!
உனது வெறுமையுணர்ந்து!
திகைத்து நிற்கின்றேன் !!
!
உனது தொழுகைகளும்,!
நோற்ற நோன்புகளும்,!
வாய்மொழிந்த திக்ருகளும்!
ஓதிய ஒவ்வொரு ஆயத்களும்!
நீ பற்றிக்கொள்ள!
பெரும் தூணாக அமைந்திருக்குமென!
உறுதியாக நம்புகிறேன் !!
!
எனது அறையில்!
என்னுடன் வசித்த!
என்னினிய நண்பனே;!
மஹ்ஷரில்!
மறுபடியும் கரம் கோர்ப்போம்,!
நீண்ட நடை பயில்வோம் - அங்கே!
சுனாமி வராது !!
- எம். ரிஷான் ஷெரீப்,!
மாவனல்லை ,!
இலங்கை

நிம்மதி என்ன விலை போகுது???

தமிழ்ப்பொடியன்
ஊரில் இருக்கும் நண்பா நலமா?!
நீயும் “வெளிநாட்டுக்கு “ வரப்போகிறாய் என்று சொன்னாய்...!!!!
காசு கொடுத்து சந்தோசங்களை விலைக்கு வாங்கும் நான்!
சந்தோசங்களை விற்று காசை விலைக்கு வாங்க ஆசைப்படும் நீ!
எனக்கு சம்பளம் டொலர்களில்!
உனக்கு வெறும் ரூபாய்களில்!
ஆனால்....!
உனது சந்தோசங்களின் பெறுமதி டொலர்களில்!
எனது சந்தோசங்களின் பெறுமதி ரூபாய்களில்....!
உண்மையாக நேர்மையாக உழைத்தால் !
உனது மாத சம்பளம் தான்!
எனது மாத இறுதி சேமிப்பு!
இதுதாண்டா உனக்கும் எனக்கும் இப்போது வித்தியாசம்.. !
ஆனால் உனக்கும் எனக்கும் ஒரு ஒற்றுமை இருக்கு!
நீ ஊரில இருந்தும் அகதி!
நான் சிற்றிசன் கிடைச்ச அகதி....!!!!
நண்பா....!
குச்சு ஒழுங்கைகளிலும் வெண் மணல் வெளியிலும்!
தொலைத்த சந்தோசங்களை!
இங்கே அதிவேக வீதிகளிலும் !
சீமெந்து காடுகளிலும் தேடுகிறோம்.!
நான் நேரத்துக்கு நித்திரை கொண்டு நான்கு வருடங்கள்....!
நிம்மதியாய் நித்திரை கொண்டு ஆறு வருடங்கள்...!!!!
இதையே வைரமுத்து பாட்டில் சொன்னால்!
மண்டையை மண்டையை ஆட்டிக் கேள்!
சங்கர் படமாய் எடுத்தால் விசிலடித்து கைதட்டு!
உன் ”நண்பன்” நான் சொன்னால் மட்டும்!
கொடுப்புக்குள் சிரித்து நக்கல் அடி..!!!!
கனவுகளை விற்று நித்திரைகளை விலைக்கு வாங்காதே!
விரல்களை அடைவு வைத்து தூரிகைகளை!
வட்டிக்கு வாங்காதே....!!!!!
நண்பா!
டொலர்களை அனுப்புகிறேன்!
சில்லறைகளாய் தொலைந்து போன என் சந்தோசங்களை!
வாங்கி அனுப்பு

வற்றாத நேசத்தின் துளி

விசித்ரா
அந்தி சாயும் பொழுதொன்றில்!
நீ என்னோடு பேசி!
விடைபெற்றுச் சென்ற பின்னரான தனிமை!
துயருடைத்து வார்த்தைகளாயின!
உதடு கிழிந்து வலிகள் பெருகலாயிற்று!
பின்வந்த நாட்களில்!
காற்றலையோ……..!
முகில் கூட்டங்களோ………!
அல்லது ஒரு பட்சியோ…….!
உனைப்பற்றி எதுவுமே சொல்லிச் செல்வதாயில்லை.!
அந்தரித்தலைகிறது எனதாத்மா !
உனைப்பற்றியதான!
நினைவலைகளைக் கிழித்து!
உறக்கப் புதைகுழிக்குள் புதைந்து விடமுடியாதபடி!
நினைவின் எல்லா வாசல்களையும்!
நீயே அடைத்து நிற்கிறாய்!
இந்நேரம் நீ !
வெடிகுண்டுகளின் சத்தங்களுக்கிடையில்!
உறக்கமின்றியிருக்கக்கூடும்!
ஆனாலும்!
என்மீதான உனது முற்றிய நேசம்!
சற்றும் விடுபட்டு போகாதிருக்குமென நம்புகிறேன்.!
துப்பாக்கி ரவையோ……..!
பீரங்கிக் குண்டுகளின் சன்னங்களோ…..!
நம்மிருவரில் ஒருவரின் உடல்களை துளைக்கமுன்பு!
ஒரு தடவையாயினும்!
நாம் சந்தித்திட வேண்டும்.!
அப்போது!
வற்றாத நேசத்தின் ஒரு துளியையேனும்!
பகிர்ந்து கொள்வோம். !
- விசித்ரா

என் காதலி வருவது போல்

வி. பிச்சுமணி
மறியல் செய்யும்!
மாற்று கட்சியினரை!
காலையில் கைது செய்து!
மாலையில் விடுவிப்பது போல்!
பரிதியை பகல் எல்லாம்!
பிடித்து வைத்து கொண்டு!
மாலையில் விடுவித்தது !
மழை மேக மூட்டம் !
வானம் வெள்ளைஒளி!
லிட்மஸ் தாளை!
மழையில் முக்கியது!
கிழக்கே அது வானவில்லானது!
நிலா வானவில்லை!
வண்ண பென்சில் பெட்டிஎன மருவி!
வண்ணம் கேட்டு அழுதது !
அதன் கண்ணீரில் கடல் உருவாயிற்று !
ஞாயிறு சிவப்பு வண்ணம்!
எடுத்து கொண்டு!
மஞ்சள் வண்ணத்தை!
நிலவுக்கு கொடுத்தது!
சிதறிய சிவப்பு வண்ணங்கள்!
செல்போன் கோபுர சிவப்பு விளக்கானது!
சிதறிய மஞ்சள் வண்ணங்கள்!
தெருவெங்கும் சோடியம் விளக்கானது !
மஞ்சள் முழுநிலா!
நட்சத்திர கூட்டத்தில் வருவது!
மின்மின்மினி பூச்சி அலையும்!
ஒற்றை அடி பாதையில்!
என் காதலி வருவது போல்!
மகிழ்ச்சி உருவாக்கியது !

நன்றி சொல்வோம்

மணி சரவணன்
“மணி சரவணன்.”!
!
அநியாயம் பண்ணாதே!
ஆசையை மூடாதே!
இன்பத்தை கெடுக்காதே!
ஈகை மறுக்காதே!
உம்மென்று இருக்காதே!
ஊமையாய் பேசாதே!
எப்படியும் என்னை!
ஏமாற்ற மாட்டாய்!
ஜயமின்றி சொல்!
ஒருத்தி நானுனக்கு ஒருவன் நீ எனக்கு!
ஓலை விட்ட கடவுளுக்கு!
ஓளவ்வப்போது நன்றி சொல்வோம்!
ஃகனமே

கடவுளை நீ….?

அழ. பகீரதன்
கடவுளை நீ ?!
----------------------!
நானுழுத நிலத்தை!
உனதென்றாய்!
எனது வீட்டை!
உனதென்றாய்!
நான் மிதித்த தெருவை!
உனதென்றாய்!
பொது மண்டபங்கள்!
நூலகம்!
யாவும்!
உனதாழுமை என்றாய்!
மீதமிருந்த!
ஆலயத்தை!
அழித்தாய்!
எனது இருப்பை!
எனது வாழ்வை!
நிர்மூலமாக்கும் உன்னை!
அழிக்க நினைத்தேன்!
உற்றதுணையென!
எனக்கிருந்த!
மாட்டை அனுப்பினேன்!
உனைச் சிதைக்க…!
மாடோ உனக்கு!
சேவகம் செய்தது!
நானனுப்பிய மாடு!
என்னையே!
கொல்ல முனைந்தது.!
வேறு வழியின்றி!
நானே உன்னைக்!
கொல்ல விளைந்தேன்!
நீதிஇ நியாயம்!
நான் படித்த புத்தகங்கள்!
எல்லாவற்றுக்கும் மேல்!
எனது மாட்டுக்கே!
நான் அஞ்சினேன்.!
கடவுளின் ஆசீர்வாதம் வேண்டி!
நான் சென்றபோது!
கடவுளை நீ!
ஆசீர்வதிக்க கண்டேன்

சொடக்கு

சிவப்பிரகாஷ், திண்டுக்கல்
சவாலின் சங்கேத மொழி !
சொடக்கு! !
அழைப்பின் அதிகார தொனி !
சொடக்கு! !
தாளத்தின் ரசிப்பும் கூட !
சொடக்கு! !
ஆனாலும் !
சுகம் தான் - உன்னால் !
விரல் வருடி எடுக்கப்படும் !
சொடக்கு

தேவனின் திருக்கரம் .. நடைவண்டி

ப.மதியழகன்
தேவனின் திருக்கரம்.. !
01.!
தேவனின் திருக்கரம் !
-------------------------------!
அடர்ந்த கருமை சூழ்ந்த வனாந்திரம்!
விறகுவெட்ட வந்தவனின் கால்கள்!
புதைகுழியில் சிக்கியது!
கொஞ்சம் கொஞ்சமாக!
மண்குழம்பு அவன் உடலை!
விழுங்கிக் கொண்டிருந்தது!
எத்தனையோ கோடி மனிதர்களை!
உண்டு செரித்த வயிறல்லவோ!
அதற்கு!!
அவனது வாய் இறைவனின்!
நாமங்களை உச்சரித்து அழைத்தது!
அவனது கண்களும் மண்ணுக்குள்!
புதைந்தன!
மேலே நீட்டிக் கொண்டிருந்த!
அவனது கைகளை!
ஒரு உருவம் பற்றியது!
சேற்றிலிருந்து மேலே வந்த அவன்!
கண்களால் அவ்வுருவத்தைப் பார்த்தான்!
வேதத்தையும், சடங்குகளையும்!
மறுத்துப் பேசியதால்!
தன்னுடைய கிராமத்தினரால்!
கல்வீசித் துரத்தப்பட்ட!
புத்தரல்லவோ இவர்!
எனது கையினால் வீசப்பட்ட கற்களால்!
காயமடைந்த கரங்களா!
என் உயிரைக் காப்பாற்றியது!
என்றெண்ணி வெட்கித் தலைகுனிந்தான்!
உயிரற்ற ஓலைச் சுவடிகளில்!
இறைவனைத் தேடினோம்!
உயிர்களின் மேல் காட்டும் கருணையே!
கடவுளெனப் போதித்த!
கண்ணெதிரே நிற்கும்!
ஜீவனுள்ள மனிதனை மறந்து! !
02.!
நடைவண்டி !
-----------------------!
அவன் நடக்கப்பழகிய!
நடைவண்டி கூட!
வீட்டில் பாதுகாப்பாக இருக்கிறது!
அவனை ஈரைந்து மாதங்கள்!
சுமந்து!
பெற்றெடுத்த அம்மா!
முதியோர் காப்பகத்தில்