ஓங்கி உயர்ந்த தென்னை மரம் - நிர்வாணி

Photo by Pat Whelen on Unsplash

ஓங்கி உயர்ந்த தென்னை மரம் !
பரந்து கிடக்கும் முற்றத்தில் சாக்குக்கட்டில் !
அண்ணாந்து படுத்தால் வானமும் !
பரந்து கிடக்கும் !
இரவு !
மௌனத்தை எங்கும் விதைத்திருக்கும் !
நட்சத்திரம் பார்த்ததும் !
பள்ளிப் படிப்பு ஞாபகம் வரும் !
பழைய வாழ்க்கை அப்படியே இழையோடி !
கண்கள் பனித்திருக்கும் !
பக்கத்தில் நாய் முன்னங்கால்களில் !
முகம் புதைத்து !
கண் மூடிக் கனவு காணும் !
படலை அசையும் சத்தம் கேட்டு !
நிஜத்திற்குள் நானும் நாயும்
நிர்வாணி

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in

There are no comments yet.