டிசம்பர் 26ம் மரணமுமாய் - மாலியன்

Photo by Patrick Perkins on Unsplash

ஓய்ந்த மழையும் - மௌனமாய் இரைமீட்ட திருப்தியில் !
வெள்ளமுமாய் அடங்கிக்கிடந்தது !
காற்றின் அசைவும் சலனமிட்ட ஓலையுமாய் தென்னை! !
ஓலைக் குடிசைகள் ஓட்டை அடைக்கப்பட்டு !
வாழ்தலின் சாயலை மெதுவாய் காட்டிக்கிடந்தன !
பண்டிகைகயின் வருகை ஏனோ மரணத்தின் !
அவலங்களை நிமிடமேனும் மறக்க வைக்கும் !
சோகம் சுமக்கையிலேனும் வாழ்வில் சிறு மகிழ்ச்சி இனி வரும் !
நாட்களேனும் வாழ்வு மலர்ந்திடும் !
என்பதாய் !
யாவும் பொய்த்தனவோ? !
வாழ்வே பொய்த்தனவோ? !
புதைகுளியா எம் தேசம்? !
சேற்றில் புதைக்கப்பட்ட பனங்கிழங்காய் மானிடம் !
மீண்டும் உயிர்ப்புறுமா? !
எதைத்தான் உன்னிடம் கேட்டனர் இம்மக்கள்! !
வலைவிரித்து உன்னிடம் தேசமா கேட்டார்! !
ஒருவாய் உணவிற்காய் உன்னிடம் மண்டியிட்டு !
மீன் பிடித்த இவர்களை ஏன் கொன்று நின்றாய்! !
சொல்வதற்காய் மீண்டும் உன்வாய் திறத்தல் வேண்டாம் !
கொடுப்பதற்கு எம்மிடம் ஏதுமில்லை! !
!
மீண்டும் காற்றின் அசைவும் சலனமிட்ட ஓலையுமாய் தென்னை.. !
குடிசைகள்தானில்லை........ !
!
மாலியன் !
27-12-04
மாலியன்

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in

There are no comments yet.