தமிழ் கவிதைகள்

தமிழ் கவிதைகள்

இலையானும் காகமும் நாயும்

பொலிகையூர் சு. க சிந்துதாசன்
உயிரோடிருந்தபோது!
எவ்வாறெல்லாம் அவன்தன்னை!
அழகு பார்த்திருப்பான்!
இப்போதிவனை!
இலையானும் காகமும்!
புசித்து மகிழ்கிறது!
வெளியேறிவிட்ட குருதி!
கிரவல் வீதியின் சிறுகுழியில்!
குளமாய்.. நிரம்பி!
நாயொன்றின்!
தாகம் தீர்க்கிறது!
அலங்கோலப்பட்டுக் கிடக்குமிந்த!
பிணம்!
அடக்கம் செய்வதற்கானதா?!
அதுகூடத் தெரியவில்லை.!
அதிலொன்றேனும் செய்யப்படவுமில்லை.!
அவனுக்கு மட்டுமல்ல!
இக்கதியென!
மனம் இறுகிக் கொள்கிறது.!
அருகாக மிக அருகாக!
நரிகளின் ஊளை!
காதைக் கிழிக்கிறது.!
தாங்க முடியாமல் தலைமறைவாகிறேன்.!
நரிகளின் ஊளையைப் பொறுட்படுத்தாதபடி!
இலையான் காகம்!
நாய் என்பன!
விருந்துண்டு மகிழ்கின்றன

கிரகவாசியும் ஆதிவாசியும்

துவாரகன்
நெஞ்சடைத்து வரும் ஆற்றாமை!
வாய் திறந்து அழுதால் தீருமோ?!
கல்லோடு கட்டிக்!
கடலில் போட்ட கதையாக!
அச்சமும் அவலமும்!
எப்படி ஒன்றாய்ச் சேர்ந்தன?!
தந்திரமா தன்வினைப்பயனா வரலாறா!
தமக்குள் கேட்கிறார்கள்.!
எல்லாம் மாயை!
ஒரு சித்தனும் கூறுவான்!
பிரபஞ்சம் அறிந்து விரிந்தபோது!
மானிட வாழ்வு மட்டும்!
எப்படிப் பூச்சியமானது?!
பறித்துப் பிரித்தெடுத்து!
முழுவதும் விழுங்கும்!
குரங்குபோல்!
வந்த தூதர்களின் மூச்சொலி!
இன்னமும் கேட்கிறது.!
வழக்காட முடியாத தமிழ்ச்சாதியோ?!
என்றான் ஒரு கவிஞன்.!
பிரபஞ்சத்தின் வெற்றியில்!
தூசாக அடிபட்டுப் போன!
மானிட ஜாதி இதுதானா?!
வேரெது குரலெது!
மரத்தடிப் பிச்சைக்காரன்போல்!
கேட்டுக் கொண்டேயிரு!!
தட்டில் மட்டும்!
அப்பப்போ!
சில சில்லறைகள் மட்டும் விழக்கூடும்.!
2312201010

கடவுள்

கலியுகன்
கடவுள்கள் மீதான நம்பிக்கைகள்!
அற்றுப் போய்விடுகின்ற வேளைகளில்!
எம்மை மீறிய ஓர் சக்தி!
தன்னை கடவுள் என!
அடையாளப்படுத்திவிட்டுச் செல்கிறது!
அது இயற்கையின் உருவாய்!
சுனாமியாகவோ!
சூறாவளியாகவோ!
வெள்ளப்பெருக்காகவோ!
இருந்துவிடுகிறது!
சிலவேளைகளில் அது!
ஒளிப்படங்களாய்!
காணொலிகளாய்!
ஏன் சணல் 4 ஆகக் கூட தன்னை!
கடவுள் என…!
அடையாளப்படுத்திவிட்டுச் செல்கிறது!
அப்போது கடவுள்கள் மீதான நம்பிக்கை!
மீண்டும் மெல்ல துளிர்விட ஆரம்பிக்கிறது

என்னைப்போல் காதலில்

தமிழ் ராஜா
காதலிக்க பழகலாம் என்றேன்!
பழகிப் பார்த்து காதலிக்கலாம் என்றாய்!
காதலால் பழக்கம் உண்டு!
பழக்கத்தால் காதலுண்டோ?!
கேள்விக்குறி மனதில்!
குழந்தையின் கண்ணாடி பருவம் போல்!
உன்னில் என்னை பார்த்து உணர்ந்த!
காதல் பருவத்தில் இனி ஒரு முறை!
அந்த அரிதான நொடிகள்!
நிகழப் போவதில்லை!
சிரித்துப் பழகும் குழந்தை போலே!
நான் காதலிக்க பழகும் குழந்தை!
அழுது அடம் பிடிக்கும் என்!
அகபாவத்தை புறத்தில் பாவனை!
செய்வது குழந்தைப் போல்!
என்னால் இயலாது!
நீ சொல்லும் பழக்கம்!
என் காதலுக்கு இல்லை!
நான் உணர்த்தும் காதல்!
உன் பழக்கத்தில் இல்லை!
எனக்கான காதலும் உனக்கான பழக்கமும்!
ஒரே வழித் தடத்தில்!
நிகழப் போகும் நொடிகள்!
நீ குழந்தையாய் இருப்பாய்!
என்னைப்போல் காதலில்

செக்குமாடு... திரௌபதை

கவிதா. நோர்வே
1.செக்குமாடு!
உன் மடியில் தலைசாய்த்த!
என் பௌணமிப்பொழுதுகளை!
இரைமீட்கும்!
செக்குமாடாய்!
திருப்தி கொண்டன!
என் விடியாத இரவுகள்.!
உன் மடியிலிருந்து!
விலக்கி வைத்தாய்!
உன் அருகிருப்பதில்!
திருப்தி கண்டேன்..!
அருகிருந்து எழுந்து போனாய்!
கூரை வேய்ந்த - உன்!
அறையைச் சுற்றி வருவதில்!
ஆறுதல் அடைந்தேன்.!
தேய் நிலவாய்த் தெரிந்த!
எனது நிலவை!
கூரை மறைத்தது!
அறையில் இருந்து!
அகன்று போனாய்!
பழக்கபட்ட!
செக்குமாடு!
இரைமீட்டுக் கொண்டது!
அந்தப் பௌர்ணமி நிலவை.!
நான் வரைந்த வட்டங்கள்!
எனக்குப் பிடித்தே இருந்தது.!
அது நேர்தியானதும்!
என்று அயலவர் கூறினார்.!
சிலர்!
பாதுகாப்பென்று பறைசாற்றினர்.!
பலர்!
செக்குமாட்டுத் தத்துவம்!
பேசினர்!
இன்று!
அமாவாசை!
எங்கும் இருட்டு!
எங்கும் கறுப்பு!
பௌர்ணமி தொலைந்தது.!
ஒளி தேடி உள்ளம் உலர்ந்தது!
எனக்கு நிலவும் மறந்து போனது.!
புதியாய் சில கதிர்கள்!
சுகமான ஊசிகளாய்!
கூரை பிரித்து!
என் உயிர், மெய்!
துளைத்து!
என்னை மீட்டுக்கொண்டது!
செக்குமாடும் கயிறறுத்தது.!
2.திரௌபதை!
உடுத்தல்!
---------------!
புடவை என்று சொல்வார்கள்.!
பண்பாடென்று சொல்வார்கள்.!
மற்றாடைகளை விமர்சிப்பர்.!
இறுக்கமென்பர், இடையென்பர்!
சரிதான்...!
என்னைக்கேட்டால்!
சுடிதார் போட்டிருக்கலாம்!
திரௌபதையும் அன்று!!
வாழ்க்கை!
----------------!
வாழ்க்கையின் வேகத்தில்!
கிள்ளி கிள்ளி சேகரித்த!
வினாடித்துளிகளை சேர்த்தெடுத்துக்!
கோர்த்து எழுதிய கவிதைக்காவே..!
இன்றும் விடிந்தது போல உணர்வேன்.!
!
- கவிதா. நோர்வே

இரத்தத்தால் நிரம்பிக் கொள்ளும்

சித்திராங்கன்
மதுக்கிண்ணங்கள்!
-------------------------------------------------------------------!
உங்கள் உயர்ந்தரக மதுக்கிண்ணங்கள்!
இரத்தால் நிரம்பியுள்ளன.!
சிதைந்துபோன !
குழந்தைகளின் பிஞ்சுக் கைகளிலிருந்தும் !
தாய்மாரின் மார்புகளிலிருந்தும் !
பிழிந்தெடுக்கப்பட்ட இரத்தத்தால் !
உங்கள் மதுக்கிண்ணங்கள் !
நிரம்பியுள்ளன.!
ஏற்கனவே காலியான மதுக்கிண்ணங்களை !
கவிழ்ந்து விடாதீர்கள்!
உங்கள் சேவகர் !
எப்போதும் காலியான கிண்ணங்களை நிரப்புவதற்கு !
தயாராக உள்ளனர்.!
முடியுமானால் !
குழந்கைளின் விலா எலும்புகளில் இருந்தும் !
சிசுக்களின் மூளையிலிருந்தும் !
எப்படி ‘சூப்’ வைப்பதென்று !
உங்கள் தலைமைச் சமையற்காரனைக் கேளுங்கள் !
தாய்மாரின் மார்புகளிலிருந்தும் !
பிருஷ்டங்களிலிருந்தும் !
எப்படிக் கறிவைப்பது என்றும் !
உங்கள் உதவியாளனைக் கேளுங்கள்.!
இருபுறமும் பரிவாரங்கள் புடைசூழ !
பஞ்சணைக் கதிரைகளில் இருந்து !
கண்ணாடி மேசைகளில் !
நிரப்பி வைக்கப்பட்டிருக்கும் !
இரத்தம் நிரம்பிய மதுக்கிண்ணங்களையும் !
சூப்புகளையும்!
உங்கள் அயலூர் நண்பர்களோடு கொண்டாடுங்கள்.!
அவர்கள் !
இன்னமும் நன்றாகவே ‘சியஸ்’ சொல்லி !
பானம் அருந்தும் வழி சொல்வார்கள் !
காலியாகும் கிண்ணங்களை !
அவ்வப்போது இடைவிடாது நிரப்பிக் கொள்ளுங்கள் !
பிஞ்சுக் குழந்தைகளும் !
எங்கள் தாய்மாரும் !
தங்கள் தங்கள் இரத்தத்துடன் !
இன்னமும்… !
உங்களுக்காகக் காத்திருக்கிறார்கள். !
!
-சித்திராங்கன்!
19012009

மீண்டும் கோடை

ரா.கணேஷ்
பிசுபிசுத்துப் போகும்!
ஆடை!
சாட்டையாய்!
நம் மேல் பாயும்!
வெயில்!
இரவுகள் சுருங்கி!
பகல் பொழுதுகள் பெருத்து!
நிழல்கள் நீண்டு!
இஞ்சியாய்!
உரைக்கும்!
இனி வரும் நாட்கள்!
இளனீர் !
வெள்ளரிப் பிஞ்சு!
பழரசம்!
போன்றவை!
குவிந்த வண்ணம்!
தினமும்!
குளிர்ந்து போன!
அலுவலகங்கள்!
தொடர்ந்து வரும்!
மின்வெட்டு!
வெளியில் வராத!
ஓய்ந்தவர்கள்!
வெளியிலே இருக்கும்!
சிறுவர்கள்!
ஓயாமல் ஓடும்!
உழைக்கும் வர்க்கம்!
வருடா வருடம்!
உயரம் போல!
உக்கிரம் கூடும்!
பளிங்கு வெயில்!
எதுவும் !
பெரிதாய்!
மாறுவதில்லை!
சென்னையின்!
கோடையில்!
என் வயதைத்தவிர !!
-ரா.கணேஷ்

பூக்கள் முளைத்த பாதைகள்

அரிஷ்டநேமி
மாலைச் சூரியன்!
செந் நெருப்பாகிக்!
கொண்டிருக்கிறது.!
முடிவற்ற ஒரு பயணத்திற்கான!
தொடக்கத்தில் நீயும் நானும்.!
உனக்கான மௌனத்தில் நீயும்!
எனக்கான மௌனத்தில் நீயும்.!
வார்த்தைகளை உடைத்து!
கடைசியான ஒரு கவிதை கேட்கிறாய்.!
'அஸ்தமனத்திற்கான பின் விடியல் ஏது' என்கிறேன்.!
உடைப்பட்ட வார்தைகளில் வலி!
உன் கண்களில்.!
என்றோ ஒரு நாளின் பயணத்தில்!
உனக்கான சூரிய அஸ்தமனம் தெரியலாம்.!
எனக்கான சூரிய அஸ்தமனம் தெரியலாம்.!
அந்த நாளில் நம் இருவருக்கும்!
மௌனம் பொதுவாக இருக்கலாம்!
அழகிய கனவுகளையும்!
சலனம் கொண்ட நிஜங்களையும்!
தனித்தனியே சுமந்து

எங்கள் குழந்தை மீதான வல்லுறவு

நிந்தவூர் ஷிப்லி
எங்கள் ரோஜா ஒன்று!
தீயிடப்பட்டு விட்டது...!
அந்தப்பிஞ்சு இன்னும் பிறக்கவேயில்லையே!
எப்படி சிதைந்து போனது...???!
அவளுக்கு முலைகளுமில்லை!
யோனியுமில்லை..!
ஏன் எல்லோரும் கற்பழிக்கப்பட்டுவிட்டாள்!
என்கிறார்கள்..?!
அந்தக்காமுகன்!
தனது சகோதரியின் நிர்வாணத்தையும்!
ஒளிந்திருந்து ரசித்திருப்பான்..!
அவள் தூங்கிக்கொண்டிருந்தபோது!
அவளது அந்தரங்களை தீண்டியுமிருப்பான்...!
ச்சீ கேடு கெட்டவன்..!
எனக்கு இன்னுமொரு சந்தேகம்..!
இவன் வீட்டுத்தெருநாயைக்கூட!
இவன் விட்டு வைத்திருக்க மாட்டான்...!
அன்னையின் மென் முத்தமே!
எங்கள் குழந்தைக்கு வலித்திருக்கும்..!
அப்படியிருக்க!
கதறக்கதற..!
எப்படித்தாங்கியிருக்கும்!
அந்தச்சின்னஞ்சிறு மொட்டு...!
களங்கமற்ற வெண்ணிலவு அவள்...!
விந்துக்கறைகள் அவளுடம்பில் !
என்கையில்!
என் கண்களில் நீர்வீழ்ச்சி...!
தேடிப்பிடியுங்கள் அவனை...!
மார்ச்சுவரியில் அடையாளம் காணப்பபடாத!
இறந்து போன பெண் சடலங்களை!
இரண்டு வாரம் கொடுத்து வெறி தீர்க்கச்சொல்லுங்கள்!
அதைக்கூட அவன் விட்டு வைக்கமாட்டான்..!
பிறகு அவன் ஆணுறுப்பை!
துப்பாக்கிகளால் சல்லடையாக்குங்கள்..!
இன்னும் கத்தி கோடரி!
குறுவாள் அரிவாள்!
எல்லாம் கொண்டு வெட்டித்தீருங்கள்...!
இரத்த வெள்ளத்தில் நீந்திக்கிடக்கும்!
அவன் ஆணுறுப்பை நாய்களுக்கும்!
தின்னக்கொடுக்காதீர்கள்...!
அவனைத்தண்டித்தாயிற்று!
என்று திருப்திப்படுகிறீர்களா...????!
சரி!
அப்படியாயின்!
எங்கள் ரோஜா... ????!
!
-நிந்தவூர் ஷிப்லி !
!
(2008.08.05 ம் திகதி இலங்கை அங்குறெஸ்ஸ எனும் சிங்கள கிராமம் ஒன்றில் 5 வயது நிரம்பிய குழந்தையை முச்சக்கர வண்டி சாரதி ஒருவன் பாலியல் வல்லுறவுக்குட்படுத்தப்பட்டதை எதிர்த்து என்னால் முடிந்த கண்டனக்கவிதை....)

வாழ்க்கை அழைக்கிறது

நளினி
நானோ !
இன்னும் இறந்த காலங்களில் !
இருக்கிறேன் !
எல்லோர் கண்களிலும் !
கலர் கலராய்க் கனவுகள் !
நானோ !
பழைய கறுப்பு வெள்ளை !
கனவுகளுக்குள்ளேயே !
பதுங்கிக் கொண்டிருக்கிறேன் !
மறக்கத்தான் நினைக்கிறேன் !
ஆனால் மறக்க !
முடியவில்லை