தமிழ் கவிதைகள்

தமிழ் கவிதைகள்

வாசம் சுமக்கும்

கலைமகள் ஹிதாயா றிஸ்வி
மனங்களில்!
மலர்ச்சிப் பூக்கள்!
விரியும் போது!
மனசு மணக்கும்!
வாசம் சுமக்கும்.!
எதிர்பார்ப்புக்கள்!
உள்ளச் சுவரில்!
நிழலாடுகையில்!
பின் தொடர்கின்ற!
நினைவுகள்!
நிழல்ளாகும்!
நம்பிக்கை!
தொலைக்கப்படும் போது!
இதயம்!
தீக்குள் சுடரினைத் தேடும்!
உண்மைகள்!
போலியாகிப் போகையில்!
மனம்!
பொன்னாடைகள்!
போர்த்திக் கொள்ளும்!
கவிதைகளை!
விதைத்து விட்ட மண்ணில்!
விமர்சகர்களின்!
போலித் தூறல்கள் !
புனிதம்!
தீமைகளை புதைத்து விட்டு!
நல்லவர்களுக்கு !
வழிகாட்டுகிறது!
இறைவா!
இந்த சோதனையாளர்களுக்கு!
நல்வழி காட்டு!
மனங்களின் பிராத்தனை!
துளிகளில்!
பொறாமைகளை -!
போட்டிகளை -!
தாக்குதல்களை -!
வளரவிடாது தடுப்பதை!
எல்லாம் ஒன்று சேர்த்து!
கழுவிக் கொள்ளட்டும்!!
அல்லது சுத்தம் செய்யட்டும்

பார்வையின் புருவங்களாய்

கலைமகள் ஹிதாயா றிஸ்வி
பாசம் தொலைந்து விட்டது!
எம் உறவு!
புழுதி கெழம்பிய மணலாய்-ஈரமிழந்து!
வரண்ட நிலமாகிய பின்...!
பார்க்கும் இடமெல்லாம் கவி வரிகள் போல்!
நினைவுத் துளிகள்...!
வாசித்த நா மட்டுமல்ல!!
எந்த நட்புக்கும் அடிமைப்படாத நீ!
சந்தர்ப்பவாதியோடு இணைந்த காலங்கள்!
அதுவும்!
வேஷங்களோடு வேஷங்களாயிற்று!!
(தீயோடு-தீயாயிற்று)!
இன்று!
மனசு துடிக்க துடிக்க உணர்விழந்து...!
உறவிழந்து!
உன்னை பிரித்து வைத்து மகிழ்ந்தந்தவர்கள்,!
மெளனித்துள்ளனர்,பொறாமைகளோடு!!
உன் எழுத்தில்!
உன் பேச்சில்!
உன் அன்பின் ஆழம் கண்டு!!
நாம்-!
ஒவ்வொரு நிமிடமாய்!
சுவாசித்து...சுவாசித்து-!
மூச்சிடும் வேளை,!
அதில் உன் உருவம் இல்லை!!
இதயச் சுவடுகளின் ஞாபங்கள் நிறைந்து!
மறக்க முடியாத உன்னை நினைவுபடுத்தி!
உரிமையாக்கி விடுகின்றன...!
நீ!
கலக்கமில்லாத வெள்ளையுமாம்!!
நீ-!
இன்னுமின்னும் நேசிக்க விரும்பும் இதயத்துக்கு!
பார்வை புருவமாம்!!
பிரிக்க முடியாதாம்!!!
பிரிவை துயரங்களாக்கி வாடிய மனங்களோடு!
நிம்மதியிழந்து இருந்தோம்.!
உறவுக்கு இனி தொடர்புயிருக்காதென!
ஆறுதல்படுத்திச் சென்றனர்,!
உன் குழந்தைகள்..!
நட்புகள் என்று தான் மாறும்....?!
தூயவுள்ளங்களைத் தானே அது!
தேடியலைகிறது....!!

சோகம் சுரந்த கோபம்

கலைமகள் ஹிதாயா றிஸ்வி
வாழ்வில் !
பிரச்சினைகளை விட்டு மாறிச் செல்வதை விட , !
வேறு வழி புரியவில்லை ..!!
எல்லா விதமான தொல்லைகளையும் !
அகற்றி விட்டால்,!
வாழைப்பழத்தை விட மென்மையானது !
இதயம் ..!!
நீ-!
செய்வது தான் சரியென்று நடந்தால் ,!
நாயின்வாலை நிமிர்த்த முடியுமென்றசெயலாகும் ..! !
நான் -இனி !
விலகித்தான் போக வேண்டும் ..!!
வி!ளங்கித்தான் ஆக வேண்டும் ..!!
சோகம் சுரந்த கோபம் !
என்னுள்ளே நினைத்துப் பார்க்கலாம் .! !
உனக்காக மனம் திருந்தி வருவாளென்று !
நீ , !
நினைத்துப் பார்க்கலாம் .!!
பாசவுள்ளம்சாம்பலாகிப் போனது ..!!!
உன்,!
தொல்லைதரும் நிகழ்வுகள் ...!
எனக்குள் வந்து நிழலாடும் போது ....,!
தீயாய் எரியும் விறகுகளாய் !
என் ஆத்மா !
எரிந்து கொண்டிருக்கிறது ..!!
புகைந்து கொண்டிருக்கிறது

அற்புதத்தைக் காட்டு

கலைமகள் ஹிதாயா றிஸ்வி
மன சாட்சியே நீ யொருதரம் நல்லவனாய் மாறு !
கேவலமான செயல் தனை நன்மையாய் மாற்று !!
இப்புவியில் உன் பிறப்பின் தூய்மையைக் காட்டு .!
மக்கள் மனதில் மகிழ்ச்சியை ஏற்படுத்திப் பாரு !!
கன்னீயரை மிதித்து நிதம் மகிழ்வு கண்டு !
நேயமில்லா படுபாவி !உள்ளங் கொண்டு ,!
வாழுகின்ற காளையர் தம்மை !வாட்டு !
நொந்தழும் பெண்களுக்கு கருணை காட்டு !!
வெளிநாடுக்கு படித்தவரை அனுப்பி விட்டு .!
கொள்ளையருக்கு நாட்டில் இடமிட்டு !
உருமாறும் கொடுமைகளுக்கு அழிவை யூட்டு!
உலகெங்கும் இருளுக்கு ஒளியைக் கூட்டு !!
கண்ணீர்விட்டு கவலைப்பட்டு இந்த மண்ணில் !
வேதனைப் பட்டு வாழுகின்ற அப்பாவி மக்கள் !
நிம்மதி பெற்று உன்னாலே !ஆறுதல் பெற்று!
மகிழ்ச்சியாய் மூச்சிவிடவுன் அற்புதத்தைக் காட்டு !!

மிதக்கும் கனவுகள்

கலைமகள் ஹிதாயா றிஸ்வி
மனசு!
வெறிபிடித்த கணவரின் போராட்டத்தில்!
துடிக்கும்..!
கற்பனைகள்!
என் உள்ளத்தின் உணர்வுகளாய்!
பிம்பம் சேர்க்கும்...!
சுவாசத்தின்!
ஏக்கப் பெரு மூச்சு!
என் கவலைக்கு தீ மூட்டும்!
பிள்ளைப் பேறு நேரம்!
தாய் மடிக்கு வரும் சின்ன ஊற்று!
இதயத்துக்கு குளிர்ச்சியைச் சேர்க்கும்..!
சிசுவின் கதறல்களுக்கு பால்!
கொடுக்க!
என் நெஞ்சுச் சூட்டில் முகம் பதிய!
சின்னக் கரங்கள் விளையாடும்.!
பாசம் சுரந்து!
தாய்மையின் உணர்வுகளில்!
என் மன விழிகள்..!!!
ஆத்மாக்களின்!
பரிதாப அவலங்கள்!
காணாமல் போக!
சிசுக்களின் பிறப்புக்களில்!
இதயம் மகிழும்...!
இல்லற வாழ்விலே!
இணைந்து போக!
கனவுகள் மிதக்க!
என் தமிழைப் போல்!
எழுத்துக்கள் கவிதையாகும்!
கலையுலகில்

வெளிச்சத்துக்கு வந்து விடு

கலைமகள் ஹிதாயா றிஸ்வி
நீ!
வெளிச்சத்தின்!
விலாசத்தை!
விசாரிக்கிறாய்!
பிறரிடம்!
அது உன்!
விழி வாசல்களில்!
உட்கார்ந்திருப்பதை!
உணராமல்!
சமூக விலங்குகளுக்கு!
சத்தியம் செய்து கொடுத்தாய்!
சத்தியம் எது!
என்று உணராமல்!
இப்போது!
உன்!
உடல் காட்டுக்குள்!
உணர்ச்சித் தீ!
அடிக்கடி!
பற்றிக் கொள்ள!
நீ!
அவதிப்படுகிறாய்!
வெளியுலகத்திற்கு!
நீ தூய்மையானவள் தான்!
இருந்தாலும்!
உள்ளத் தூய்மைக்கு!
உணர்ச்சித் தூரிகை!
உரசி உரசி!
அடிக்கடி!
வண்ணம் தீட்டுகிறதே!
உணர்துக் கொள்!
இன்னும் உன்!
உணர்ச்சிக் கலை!
உறங்கவில்லை என்று!
இங்கே!
ஒரு சோலைவனம்!
உனக்காக காத்திருக்க!
நீ ஏன் இன்னும்!
பாலைவனத்துக்கு!
பல்லைக் காட்டுகிறாய்!
போலி வாழ்க்கைக்கு!
கட்டிய தாலியை!
கழற்றி எறி!
உனக்காக ஏற!
இன்னும் ஒரு தாலி!
இங்கே காத்திருக்கிறது!
உன்!
உணர்ச்சித் தொட்டாக்களே!
ஒரு நாள்!
சமூக விலங்குகளை!
சுட்டு வீழ்த்தும்!
அதற்கு முன்னே!
கழற்றி!
எரிந்து விட்டு!
நீயே வந்து விடு!
இருட்டுக்குள் நீ!
குருட்டுக் கண்!
கண்டது போதும்!
இனி!
வெளிச்சத்துக்கு வந்து விடு......!

அதிகாலை கண்விழிப்பில்

ராம்ப்ரசாத், சென்னை
நீல வானத்தில்!
இமை, குடை விரித்து,!
இரவு உறங்க சென்ற!
இனிய காலையில்,!
கண்விழித்தேன் கண்மணி!
உன் நினைவுகளுடன் ...!
ஆச்சர்யங்களையும் அதிர்ச்சிகளையும்!
நொடிப் பொழுதுகளில் மறைத்து வைத்து!
சலனமின்றி சீராய் பயணிக்கும்!
காலத்தின் வழித்தடத்தில்!
என் காதலுக்கும் சிறிதளவேனும்!
இடம் இருக்கும் என்ற நம்பிக்கையுடன்!
இன்றைய பொழுதை துவக்க!
ஆயத்தமாகிறேன் ...!
ஆச்சர்யமோ அதிர்ச்சியோ!
எதுவாக இருந்தாலும்!
ஆண்டவன் விட்ட வழி என்று!
கடந்து போவதும்!
அடுத்து வருவதை எதிர்கொள்வதுமே!
நிதர்சனம் என்றானபிறகு!
அதிகாலை கண்விழிப்புகளில்!
அவ்வளவாக சுவாரஸ்யம்!
கூடியதாக தோன்றவில்லைதான் ......!

அட்சராப்பியாசம்!

ஸ்ரீரங்கம் சௌரிராஜன்
அப்பா தோளில் அமர்ந்தபடி!
அவர் தலையை!
இறுகப்பிடித்துக் கொண்டு!
நான்!
பள்ளிக்கூடம் போய்க்கொண்டிருந்தேன்!!
உயிரெழுத்து மெய்யெழுத்து!
மட்டுமே எழுத்தாணியால் எழுதப்பட்ட!
மஞ்சள் தடவிய!
பனை ஓலைச் சுவடி!
அப்பா கையில்..!
சென்ற வாரம்தான்!
என்னைப் பள்ளிக்கூடத்தில் சேர்த்தார்கள்!
வாழையிலையில் நெல் பரப்பி!
மாணவர்கள் ஆசிரியர்கள் சூழ!
ஸ்ரீநிவாச ஐயர்!
என் விரல் பிடித்து!
'அ' எழுத!
என் கவனம் எதிரில்!
பித்தளைத் தாம்பாளத்தில்!
பொட்டுக் கடலை - நாட்டுச்சர்க்கரைக்!
கலவையில் இருந்தது!!
ஒரு வாரம் முழுவதும்!
மனம் வீட்டில் இருக்க!
உடம்பு மட்டும்!
பள்ளிக்கூடம் போய் வந்தது!
பதினோரு மணிக்கு!
சிறுநீர் கழிக்க அனுமதித்த நேரத்தில்!
நான் வீட்டில்

முத்துமழை!

ஸ்ரீரங்கம் சௌரிராஜன்
உன்னிடம் சொல்ல நினைத்து!
நான் சொல்லாத ஒன்று!
கணந்தோறும்!
மனத்தில் உறுத்தி உறுத்தி!
நெடுநாட்கள்!
புதைந்தே கிடந்ததால்!
ஒன்று ஆயிரமாகி!
சிறகுகள் முளைத்து!
பூமி கிழித்து மேலே வந்த விதைகள் போல்!
என்னை மையப்படுத்தி!
மனப்பிரந்தியம் முழுவதும்!
சுற்றிச்சுற்றி அலைகின்றன!
காலூன்ற நிலம் தேடும்!
தவிப்பிலான என்முன்!
உன் வலிய கரம்!
என் மென்கரத்தை யாசித்துப்பெற!
நீ முத்தமிடுகிறாய்!
அப்போது என்னுள் பறந்த !
முத்துகள் எல்லாம் சிறகிழந்து!
மழையாய்ப் பொழிந்து!
நம்மை ஆசீர்வதிக்கின்றன!
முத்துமழை!
தொடர் முத்தமழைக்கான!
இனிய சமிக்ஞை போல்...!

விளக்கு

வித்யாசாகர்
உள்ளே !
ஒரு விளக்கு எரிவது !
தெரிகிறது..!
இப்போதெல்லாம் !
அந்த விளக்கு இங்குமங்குமாய் !
அசைகிறது!
சட்டென !
அணைந்துவிடுமோ !
என்றொரு பயம்கூடஎனக்கு !
பயத்தை அகற்றி !
இங்கொன்றுமாய் !
அங்கொன்றுமாய் வந்து சில கைகள் !
விளக்கை மூடிக்கொள்கின்றன !
மூடிய கைகளின் அன்பில்!
அணையாது எரிகிறது !
அந்த விளக்கு!
அது எரியும்!
எரியும் !
யாரும் கல்லெறிந்து விடாதவரை!
அது எரியும்..!
அதற்குப் பெயர் நான்