பார்வையின் புருவங்களாய் - கலைமகள் ஹிதாயா றிஸ்வி

பார்வையின் புருவங்களாய் - Tamil Poem (தமிழ் கவிதை) by கலைமகள் ஹிதாயா றிஸ்வி

Photo by Gabriel Izgi on Unsplash

பாசம் தொலைந்து விட்டது!
எம் உறவு!
புழுதி கெழம்பிய மணலாய்-ஈரமிழந்து!
வரண்ட நிலமாகிய பின்...!
பார்க்கும் இடமெல்லாம் கவி வரிகள் போல்!
நினைவுத் துளிகள்...!
வாசித்த நா மட்டுமல்ல!!
எந்த நட்புக்கும் அடிமைப்படாத நீ!
சந்தர்ப்பவாதியோடு இணைந்த காலங்கள்!
அதுவும்!
வேஷங்களோடு வேஷங்களாயிற்று!!
(தீயோடு-தீயாயிற்று)!
இன்று!
மனசு துடிக்க துடிக்க உணர்விழந்து...!
உறவிழந்து!
உன்னை பிரித்து வைத்து மகிழ்ந்தந்தவர்கள்,!
மெளனித்துள்ளனர்,பொறாமைகளோடு!!
உன் எழுத்தில்!
உன் பேச்சில்!
உன் அன்பின் ஆழம் கண்டு!!
நாம்-!
ஒவ்வொரு நிமிடமாய்!
சுவாசித்து...சுவாசித்து-!
மூச்சிடும் வேளை,!
அதில் உன் உருவம் இல்லை!!
இதயச் சுவடுகளின் ஞாபங்கள் நிறைந்து!
மறக்க முடியாத உன்னை நினைவுபடுத்தி!
உரிமையாக்கி விடுகின்றன...!
நீ!
கலக்கமில்லாத வெள்ளையுமாம்!!
நீ-!
இன்னுமின்னும் நேசிக்க விரும்பும் இதயத்துக்கு!
பார்வை புருவமாம்!!
பிரிக்க முடியாதாம்!!!
பிரிவை துயரங்களாக்கி வாடிய மனங்களோடு!
நிம்மதியிழந்து இருந்தோம்.!
உறவுக்கு இனி தொடர்புயிருக்காதென!
ஆறுதல்படுத்திச் சென்றனர்,!
உன் குழந்தைகள்..!
நட்புகள் என்று தான் மாறும்....?!
தூயவுள்ளங்களைத் தானே அது!
தேடியலைகிறது....!!

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in

There are no comments yet.