தமிழ் கவிதைகள்

தமிழ் கவிதைகள்

தூக்கத்தில் நான்

முகமது ஃபயாஸ் ஃபுர்கான்
தாகம் அடித்தது,
தண்ணீர் குடித்தேன்,
குடித்ததால் வந்தது,
தூக்கம் கலைந்தது.

கவலையில் நான்

முகமது ஃபயாஸ் ஃபுர்கான்
கவலையை மறக்க,
உறங்கினேன்.
அதில் வந்த கனவும்,
கவலையாய்!

விதி

தென்றல்.இரா.சம்பத்
விதியால்.........!
என்று சொல்வதைத் தவிர!
வேறு என்ன சொல்லி!
எழுதிட முடியும்!
உன் பிரிவை....!
இந்த காகிதங்களில்

காதல்

தென்றல்.இரா.சம்பத்
சகியே........!
நின்று பார்க்கையில்!
நடந்து போகையில்!
படுத்துக் கிடக்கையில்!
படித்துச் சுவைக்கையில்!
சுகப்படும் வேளையில்!
சோகப்படும் சூழலில்!
நீ வேண்டும் என்னருகில்....!
வேறெப்படிச் சொல்ல!
என் காதலை..உன்னிடம்....!

காதல்!

தென்றல்.இரா.சம்பத்
சகியே...!
பக்கத்தில் நீயில்லை!
பந்தயக்குதிரையாய்!
விடாமல் துரத்தும்!
உன் நினைவுகள்!
என் ஒவ்வொரு நாழியையும்!
வார்த்தைகளுக்குள்!
வளைக்கமுடியாத வலியோடு!
நகர்த்துகிறதடி....!
எப்படியோ!
நடந்ததைச் சொன்னேன் உன்னிடம்!
சரியாகிவிடுமென்கிறாய் சாதாரணமாக!
நானும் திரும்பக்கேட்டேன்!
நீ மௌனிக்கிறாய்....!
எனைப்போலத்தானே !
உனக்குமிருக்கும் அவஷ்தைகள்!
இருக்கவேண்டுமென்கிறது!
என் மனமென்றேன்!
ஒருவருக்கு வலித்தால்!
காதலில்லையென்கிறாய்!
நான் மௌனிக்கிறேன்!
என் அறியாமையையும்!
உன் காதலையும் நினைத்து.!

கறுப்பு நிற ஆப்பிள் கனிகள்

ஸமான்
ஆப்பிள் கனி ஒன்றை!
புசித்து கொண்டிருந்தேன்!
நறுக்கிய துண்டுகள்!
ஒவ்வொன்றிலும்!
அவமானத்தால் கூனி குறுகி!
நின்று கொண்டிருந்தார்கள்!
ஆதாமும் ஏவாளும்!
அவர்களது கைகளில் இருக்கும்!
கறுப்பு நிற ஆப்பிள் கனிகளை!
எப்படிப் புசிப்பதென்று!
இருவருக்கும்!
தெரிந்திருக்கவில்லை

எனக்குள் ஓடும் நதி

ஸமான்
எனக்குள்!
ஒரு நதி ஓடுகின்றது!
அந்த நதியை நான் விரும்புகிறேன்!
என் கண்ணீர் தீர்ந்து!
நதி வறறி!
இறுதி இரங்கலோடு!
மீன்கள் எனக்குள் துடிக்கும் போது!
நான் மீண்டும் அழுவேன்!
எப்போதும் வற்றாத என் நதியை!
நீங்கள் என்றாலும்!
கடந்து செல்லுங்கள்!
அதுவரை என் அறையின் கதவுகளை!
அடைத்துக் கொள்கிறேன்!
நீங்கள் ஓசை எழாமல்!
கால்களில் ஈரம் படாமல்!
என் இதயத்தின் மீது!
நடந்து செல்லலாம்!
தயவு செய்து என் நதியில் ஓடும்!
மீன்களை உங்கள் கண்களுக்குள்!
நிரப்பிச் செல்ல முடியுமா!
இந்த மீன்களின் உயிர்!
என் கண்ணீரில்தான் இருக்கிறது!
கண்ணீரை இந்த மீன்களுக்காக!
விரும்பி ஏத்றுக் கொண்டிருக்கிறேன்!
இல்லை என்றால்!
எனக்குள் ஓடும் இந்த நதி!
எப்போதோ வற்றியிருக்கும்!

கொடுக்கு நீர்

ஸமான்
செத்த அகாலம்!
அழுக்கு போர்வை உள் வியர்க்கும்!
நிர்வான இரவு!
ஈரமூறிய சிவப்பு விளக்கின்!
மெல் ஒளியில் நிழல் தின்று நீர் விழுந்து நெளிகிறது நச்சு பாம்புகள் யோனி உள்!
போதி மரங்கள் சரிந்து!
மண் கெளவின!
குறி விறைத்த குதிரையின் பசி தீர்ந்து!
பிணி வந்து அழுந்தி செத்தன!
போதி மர உளுத்த கிளை ஒன்றில்!
குந்தி அமர்ந்து சீலை அவிழ்க்கிறாள்!
விலை மாது ஒருத்தி!
புழுத்த அவள் யோனி உள் கொம்பு உயர்த்தின கருந் தேள்கள்!
காளான்கள் உள் நசுங்கி நாறின!
ஆண் உறைக்குள் குழந்தைகள் வளர்ந்தன!
யோனி தின்ற எறும்பின் பச்சையம் கருகி!
பிணியோடு வாழ்கிறது நிலா..!
வெள்ளி பிஞ்சுகளில்!
நோய் குறி கண்டு செத்தன!
முது மரமும் முளை செடிகளும்..!!!
( இக் கலவியில வழியும் சொட்டு ஈரமும்!
விஷ தேள்களின் கொடுக்கு நீர்தான்)

வீடு

ஸமான்
சப்பாத்தை களற்றி விட்டு!
உள் நுழைகிறேன்!
நகர்ந்து செல்கிறது வீடு!
செருப்பிழந்த கால்களோடு!
வீட்டை பின் தொடர்கிறேன்!
ஒரு கோப்பையின் அடிச் சொட்டு தேநீரின் கசப்பினுள்!
மூழ்கிய வீடு!
கசப்பான காய்கள் காய்க்கும்!
மரமாக வளர்ந்து நிற்கிறது!
செருப்பை களற்றிவிட்ட இடத்தில்!
வீட்டின் கதவுகள்!
இருந்ததாக ஞாபகம்!
திரும்பி வருகிறேன்!
சிறகு முளைத்த சப்பாத்துகள்!
கூடுகட்ட பழகிக்கொண்டிருந்தது!

அன்பின் மீதான பயங்கரத்தைக் கடத்தல்

ஸமான்
இரு விழிகளுக்கும் மத்தியில்!
கத்தியின் கூர் முனையை!
அழுத்தி வைத்திருக்கிறாய்!
விழித்துப் பார்க்கும் போதே!
உன் அன்பின் மீதான!
நீளப் பயங்கரம்!
என்னை ஆட் கொண்டு விட்டது!
நீ கத்தியின் பிடியில்!
அழகான ஒரு மாளிகையை!
அமைத்துக் கொண்டு அமர்ந்திருந்தாய்!
உன்னுடைய கைகள் என்னை!
வா வா என்று அழைத்தன!
மிகப் பயங்கரமான உன் அன்பின் மீது!
ஏறி நடக்க ஆரம்பித்துவிட்டேன்!
நீண்ட தூரப் பயணத்தின் முடிவில்!
நீயும் இருக்கவில்லை!
நீ அமைத்த மாளிகையும் இருக்கவில்லை!