அப்பா தோளில் அமர்ந்தபடி!
அவர் தலையை!
இறுகப்பிடித்துக் கொண்டு!
நான்!
பள்ளிக்கூடம் போய்க்கொண்டிருந்தேன்!!
உயிரெழுத்து மெய்யெழுத்து!
மட்டுமே எழுத்தாணியால் எழுதப்பட்ட!
மஞ்சள் தடவிய!
பனை ஓலைச் சுவடி!
அப்பா கையில்..!
சென்ற வாரம்தான்!
என்னைப் பள்ளிக்கூடத்தில் சேர்த்தார்கள்!
வாழையிலையில் நெல் பரப்பி!
மாணவர்கள் ஆசிரியர்கள் சூழ!
ஸ்ரீநிவாச ஐயர்!
என் விரல் பிடித்து!
'அ' எழுத!
என் கவனம் எதிரில்!
பித்தளைத் தாம்பாளத்தில்!
பொட்டுக் கடலை - நாட்டுச்சர்க்கரைக்!
கலவையில் இருந்தது!!
ஒரு வாரம் முழுவதும்!
மனம் வீட்டில் இருக்க!
உடம்பு மட்டும்!
பள்ளிக்கூடம் போய் வந்தது!
பதினோரு மணிக்கு!
சிறுநீர் கழிக்க அனுமதித்த நேரத்தில்!
நான் வீட்டில்
ஸ்ரீரங்கம் சௌரிராஜன்