தமிழ் கவிதைகள்

தமிழ் கவிதைகள்

மழை உதிர்த்த

செந்தமிழ், சென்னை
மழை உதிர்த்த !
காலைப்பொழுதொன்றில்!
திடீரெனத் தோன்றினாய்!
உன்னைக்கொல்ல ஆயத்தமாகிறார்கள்!
உடலைத் துளைத்துச் செல்ல!
துப்பாக்கியும் குண்டுகளும் தேவைப்படவில்லை!
அறுபட்டுக் கூறுகளாக்க!
கூர்கத்தியும்...!
எரித்துச் சாம்பலாக்கத் !
ஒரு குச்சி நெருப்பும்...!
அணுஅணுவாய் உயிரெடுக்க!
துளி விஷமும்...!
தேவைப்படாமல்!
சமையறைச் சம்புடத்தில்!
துளி உப்பெடுத்து...!
தரையைக் கெட்டியாகப் பிடித்திருந்த !
கால்களற்ற உன் (அட்டை) உடல்!
ஒரு பிசிறும் மிஞ்சாமல் !
கரைந்துபோகிறது காற்றோடு!
அவர்களின் மனசாட்சியைப்போல!

நிறுத்துங்க

செந்தமிழ், சென்னை
நிறுத்துங்க!
நிறுத்தத்தை தவறவிட்டவளின் !
இயலாமைக் குரல் !
அடுத்த நிறுத்தம் வரை !
காத்திரு!!
அலட்சியத்துடன் நடத்துனர்!
திடீரெனத் தாக்கும் காற்றில் !
அலைவுற்றுத் திரியும் !
ஒற்றைத் திரிபோல !
கிடந்து தவிக்கிறது மனம்!
மூதாட்டி இறங்கும்வரை!

தற்கொலை

ராம்ப்ரசாத், சென்னை
அஸ்தமனத்திற்கு பின்பான‌!
விடியல்கள்,!
ஒரு விருப்பத்துடனோ அல்லது!
ஒரு நிர்பந்தத்துடனோ!
நிராகரிக்கப்படவே செய்கின்றன....!
உயிரை விட‌வும்!
பெரிய‌தாகிவிடுகிறது!
ஏதோ ஒன்று...!
முட்டுச்ச‌ந்துக‌ளில்!
முட்டிக்கொள்ளுகின்ற‌ வாழ்க்கையை!
பெருந்துணிச்ச‌லொன்று!
இட்டுச் செல்லுகிற‌து!
அஸ்த‌ம‌ன‌த்தை நோக்கி...!
இட்டுச் செல்லும்!
வ‌ழியெங்கும் அது!
விடிய‌ல்க‌ளைப் ப‌ற்றி!
அவ‌தூராக‌வே பேசுகிற‌து‌...!
விடிய‌ல்க‌ளின் வெம்மையை!
தாங்காத‌ ம‌ன‌ம்!
அஸ்த‌ம‌ன‌ இருளில்!
புதைவ‌தை வேறு வ‌ழியின்றி!
ஏற்கிற‌து...!
பாதையைப் பொறுத்தே!
அமைந்து தொலைகின்றன‌!
இந்த முட்டுச்ச‌ந்துக‌ள்...!
புதிய‌ பாதைக‌ளில்!
முட்டுச்ச‌ந்துக‌ளை!
அவ‌தானிக்க‌ முடிவ‌தில்லை

புதுமை

ராம்ப்ரசாத், சென்னை
கடவுள் என்றும்,!
அதன் மீது பயம் கொள் என்றும்,!
கலாச்சாரம் என்றும்,!
அதைப் புரிந்துகொள் என்றும்,!
நாகரீகம் என்றும்,!
அதை தெரிந்து கொள் என்றும்,!
பண்பாடு என்றும்,!
அதை உணர்ந்து பண்படு என்றும்,!
இலக்கியங்கள் வாயிலாக‌!
இயக்கங்களை உபதேசித்தது!
இப்படி வாழவேண்டாம் என்றும்!
இப்படி வாழ்ந்தால் சிறப்பு என்றும்!
ஏற்கனவே கண்டுகொள்ளப்பட்ட‌!
வாழ்வியல் முறைகளை!
மீண்டும் கண்டுபிடிக்க‌!
வேண்டாம் என்றுதான்...!
அவைகளைப் புறந்தள்ளி!
புர‌ட்சி, புதுமை என்று!
பெயர்கள் சொல்லி!
அதே இல‌க்கிய‌த்தைப்!
பொருள் விளங்காமல்!
மொழி மாற்றுவ‌தில்,!
மானுட‌ப்ப‌த‌ரே, நீ!
என்ன‌ விடை க‌ண்டாய்...!
இப்ப‌டி கால‌த்தை!
விர‌ய‌ம் செய்து!
என்னென்ன விலை கொடுத்தாய்...!
புதுமை என்ப‌து!
கால‌ மாற்ற‌த்தில்!
சிதில‌ம‌டைந்த பூந்தொட்டிகளை!
அக‌ற்றிவிட்டு பூச்செடிக‌ளைப்!
பாதுகாப்ப‌து...!
பூச்செடிகளைக் களைந்துவிட்டு!
காகிதப்பூக்களால் பூந்தொட்டிகளை!
நிரப்புவது அல்ல...!
புதுமை என்ப‌து!
வேங்கையின் பாதுகாப்பில்!
புள்ளிமானைத் துள்ளவிடுவது ...!
வேங்கையின் வேகத்தைக்!
காரணம் காட்டி!
புள்ளிமான் கொல்லப்படுவதை!
நியாயப்படுத்துவதல்ல

நீரோடை குறிப்புக‌ள்

ராம்ப்ரசாத், சென்னை
நினைவுகளின் ஆழ்ந்த கடலுக்குள்!
ஒரு நீரோடையாய்!
நினைத்துப்பார்க்கவும்!
விரும்பாத சில நிகழ்வுகள்...!
தொட‌ர்ந்து ஓடிக்கொண்டே!
இருக்கின்ற‌ன‌...!
நீரோடையின் க‌ரைக‌ளை!
நிக‌ழ்கால‌த்தின் ஏதோவொரு முனை!
எப்போதும் தொட்டுக்கொண்டே!
இருக்கிற‌து...!
தூக்க‌ம் தொலைந்த‌!
அட‌ர்ந்த‌ இர‌வுக‌ளில்!
த‌லைய‌ணைக்குள் புதையும்!
விசும்ப‌ல்க‌ள்!
நீரோடை ப‌ற்றிய‌ குறிப்புக‌ளை!
வாசித்த‌ப‌டி இருக்கின்ற‌ன‌...!
காலப்புத்தகத்தில்!
அந்த‌ இர‌வுக்குரிய‌!
ப‌க்க‌த்தின் வ‌ரிக‌ளை!
க‌ட்டாய‌மாய் ப‌டிக்க‌ வேண்டிய‌!
நிர்ப‌ந்த‌ம் அந்த‌ கண்விழிப்பிற்கு

அவ‌ளின் பிர‌ம்ம‌ன்

ராம்ப்ரசாத், சென்னை
பிறந்த நாள்முதலாய்!
பெயரறியாப் பழமொன்றைக்!
கையில் பிடித்தபடி நிற்கிறாள்!
முந்தானை நழுவிய!
பெண்ணொருத்தி,!
என் அறை சுவற்றில்...!
பெய‌ர‌றியா ப‌ழ‌மோ,!
ந‌ழுவிய‌ முந்தானையோ!
அள்ளிக்கொள்ளாத‌ என் க‌வ‌ன‌ங்க‌ளை!
மிக‌க் க‌வ‌ன‌மாய் சேக‌ரிக்கின்ற‌!
அவ‌ளின் க‌ண்க‌ளில்!
என்னை பார்த்துச் சிரிக்கிறான்!
அவ‌ளின் பிர‌ம்ம‌ன்

கோல‌மும் அவ‌ளும்

ராம்ப்ரசாத், சென்னை
அதிகாலைகளில் நீ குனிந்து!
கோலமிடுகையில்!
கருமேகங்களெல்லாம்!
நீர்வீழ்ச்சியாய் வீழ்கின்றன‌!
உன் கருங்கூந்தலாய்...!
உன் கூந்தல் !
சூடும் மல்லிகையில்!
பிரதிபலிக்கும் அதிகாலைச்சூரியனின் !
பேரொளி...!
உன் விரல்கள்!
உதிர்க்கும் கோலப்பொடியில்!
நீரின்றி நீந்துகின்றன‌!
அழகான வெள்ளை மீன்கள்

எச்சில் மனிதர்கள்

கிளியனூர் இஸ்மத் துபாய்
சேற்று மனிதர்கள்!
வீட்டின் வாசல்வரை!
நேற்றைய்ய துளசி!
பூஜையறை வரை!
உண்டதுபோக!
மிச்சத்தை கொடுப்பதிற்கில்லை!
அவர்கள்!
எச்சத்தைக் கொடுக்கும்!
எச்சில் மனிதர்கள்!
இடுப்பில் துண்டு!
அடுப்பில் கஞ்சி!
உழைப்பில்லா சோம்பேறிகளா!
இல்லை!
இல்லை!
இவர்கள் இயந்திர மனிதர்கள்…!
உற்பத்தியாகும் பொருளுக்கு!
முகவரி கொடுத்துக் கொள்வது!
முதலாழித்துவம்!
இயந்திரமல்ல!
சுயத்தை அறியாத சுப்பிகள்!
மனிதநேயம் பேசுவது!
மேடையில்சோடா குப்பிகள்!
சமத்துவம் பேசும்!
அவத்தம்வாதிகள்!
இன்னும் தேவைப்படுகிறது!
ஜாதிச் சான்றிதல்கள்!
எத்தனை மாற்றங்கள் நிகழ்ந்தாலும்!
விழுக்காடுகள் கூடலாம்!
மாறாது சுடுக்காட்டுக் குடிசைகள்!
கருவறிந்த மனிதர்கள்!
அருவறிந்த புனிதர்கள்!
அரசியல் களம் காணும்போது!
சுயமறிந்த சூரிய்ய வாழ்க்கை!
தலித்க்களுக்கு மட்டுமல்ல!
தன்னையறிந்த!
மனிதர்களுக்கு…!!
-கிளியனூர் இஸ்மத்

கடவுள்

முருகு கார்தி
சித்தர்களால் சிந்திக்க முடியாமலும்!
புத்தர்களால் வர்ணிக்க முடியாமலும்!
உள்ள ஓர் உருவம்!
சிற்பியால் செதுக்கப்படுகிறது

தனி மரமாய்

கலைமகள் ஹிதாயா றிஸ்வி
துயரினைக் கண்டால்!
இதயம் நோவும்!
வேதனை தொடரும் ..!!
மனப் பூ வை!
நுகர ...!
சுவாசம் தேவை ..!!
தேடிய செல்வமெல்லாம்!
இயற்கை அழிவுகளில்!
தொலைந்து போகும் ..!!
தனி மரமாய் ..,!
மணம் _!
தலை நிமிர்ந்து நிற்கும் ...!!
உற்றோர் .,.!
உறவினரெலலாம்!
எனக்கு!
துரத்து உறவுகளாகும்!
எழுத்து மட்டும்!
எனக்கு _!
மன ஆறுதல் கொடுக்கும்