தமிழ் கவிதைகள்

தமிழ் கவிதைகள்

மழை நீர்

பிரசாத்
பூமித் தாயின் மடியில் தவழும்
மேகத் தாயின் குழந்தை
~மழைநீர்

இன்று மட்டும்

செண்பக ஜெகதீசன்
சென்ற ஆண்டுகள் !
சென்றது எங்கே, !
இனி !
வரும் ஆண்டுகள் !
இருப்பது எங்கே !
தெரியவில்லை எவர்க்கும், !
தெரிந்தது இதுதான்- !
இன்று, !
இன்று மட்டும்.. !
இருக்கிறது அது !
இப்போது நம்முடன், !
தப்பாது செய்திடு கடமையை,!
இன்றுபோல் இருக்கும் !
என்றும் இனிதாக…!!

முற்றுப் புள்ளி

செண்பக ஜெகதீசன்
இரவின் பயணத்திற்கு !
இவள் வைக்கிறாள் !
முற்றுப்புள்ளி- !
முற்றத்தில் புள்ளிவைத்து !
முறையாய்க் கோலமிட…!!

நாடகமாய்

செண்பக ஜெகதீசன்
முன் அனுபவங்களை !
மேலுக்குத் தெரியாமல் மறைத்து, !
நாலு சுவர்களுக்குள் நடக்கும் !
நாடகம்தான்- !
முதலிரவு என்பது…!!

வழியில்

செண்பக ஜெகதீசன்
வாழ்க்கை !
வழிப்போக்கன் நான், !
வழியில் பார்த்தேன் -!
காலம் என்னைக் !
கடந்து சென்றது, !
கண்ணாடியில் பார்த்தபோது !
கண்டது -!
களவாடப்பட்டது !
என் !
இளமைதான்...!!

முடித்திடு

செண்பக ஜெகதீசன்
இனிமேல் வராது !
இந்த இளமை, !
வந்த முதுமை !
வழி திரும்பாது, !
பழியைப் போடாதே !
பரமன் மீது, !
இருக்கும் வரையில் !
இயன்ற வரையில் !
முயன்று முடித்திடு கடமையை, !
வந்திடும் !
வெற்றி உந்தன் உடமையாய்....!!

சிகரம் தொட்டவர்கள்

அட்டாளைச்சேனை அபாம்
அற்பமான விடயங்களையும்
நுட்பமாக கையாண்ட
சொற்பமான சிலரே
சிற்பமாக்கப்பட்டுள்ளனர்.

மரங்கொத்தி

டீன்கபூர்
வரலாம் இனி!
தென்னையைப் போல வெறும் ஈர்க்குக் குடல்…!
இவனிலிருந்து வராது!
இதயம், ஈரல், குடலோடு சேர்ந்த உறுப்புக்கள்!
உன் சொண்டில் வரும்!
நரம்புகளும் அதில் சிக்கும்.!
உலாவப் பிறந்தவன் மனிதன்!
தென்றலை உடலுக்குள் குடில் கட்டிக் கொடுப்பவன்!
இயற்கையை கண்ணுக்கு விருந்தாளியாய் அழைப்பவன்!
ஆயினும் இவன் ஓரிடத்தில் நின்று!
வளரும் மரம் போல நகராமல்!
அடியைப் பதி;க்கவும் அஞ்சிக்கிடக்கின்றான்!
தன் கிராமத்து வேரை இறுகப்பிடித்தபடி.!
கடல் சார்ந்த இடம்!
வயல் சார்ந்த இடம்!
யுத்தம் மேய்கின்ற பூமியாகக் கிடக்கின்றது.!
மொத்தத்தில் இவன் ஜடம்!
மரங்கொத்திக் குருவியே நீ வரலாம்!
கண்ணிகள் இவனில் புதைக்கப்படவில்லை!
தென்னையைக் கொத்திக் காயப்படுத்தி !
அதன் உடம்பில் ஓவியம் வரைந்து!
‘போர்’ ஒன்றைச் செய்து!
இல்லறம் நடத்திய போதும் குருவி….!
மரங்கொத்திக் குருவியே நீ வரலாம்!
நம்பி!
துப்பாக்கி உன்னை நோக்கி இல்லை!
இவன் உடம்பில் வந்து தங்கு!
தோளில் நின்று எச்சில் அடி…!
ஒரு போரை வடிவமைக்க!
இவன் நெஞ்சிலோ!
முதுகிலோ நின்று கொத்து!
மரமான இம்மனிதனின்.!

நீர்க்குமிழி

ஷம்மி முத்துவேல்
ஆழ்ந்தமனப்பரப்பில்!
விட்டு எறிந்த!
நினைவு கல் ஒன்று....!
செதுக்கியபடி உள்செல்ல ....!
வட்ட சக்கரவியூகம் !
ஒன்றுக்குள் ஒன்றாய் விரிந்தபடி ......!
ஆழ அமிழ்கையில் ....!
மெல்ல!
மேலே எழும்புது!
ஓர் அடங்கலற்ற நீர்க்குமிழி

நங்௯ரம்

ஷம்மி முத்துவேல்
நினைவுகள் பாய்மரம் விரிக்க ....!
நங்௯ரமிட்டது தொலைந்து போன கனவுகள் !
முன்னும் பின்னுமாய்!
ஊஞ்சலாடியபடி!
உள் வாங்குது எண்ண அலைகள் .... !
அது ஒரு நிலாக்காலம் .....!
உன் மூச்சை சுவாசித்த காலம் ....!
கடிகார முள்ளாய் சேர்ந்தும் பிரிந்தும்!
பகா பதமாய் தனித்து பொருள்படாமல்!
இருந்த வசந்த காலம் .....!
பயணங்கள் பட்டயம் எழுதிவிட்டு!
பதுவிசாய் பதுங்க!
மீண்டும்....!
பழையன கழியாமல் ....!
புதியன சேர்ந்தபடி!!!!