உன்னிடம் சொல்ல நினைத்து!
நான் சொல்லாத ஒன்று!
கணந்தோறும்!
மனத்தில் உறுத்தி உறுத்தி!
நெடுநாட்கள்!
புதைந்தே கிடந்ததால்!
ஒன்று ஆயிரமாகி!
சிறகுகள் முளைத்து!
பூமி கிழித்து மேலே வந்த விதைகள் போல்!
என்னை மையப்படுத்தி!
மனப்பிரந்தியம் முழுவதும்!
சுற்றிச்சுற்றி அலைகின்றன!
காலூன்ற நிலம் தேடும்!
தவிப்பிலான என்முன்!
உன் வலிய கரம்!
என் மென்கரத்தை யாசித்துப்பெற!
நீ முத்தமிடுகிறாய்!
அப்போது என்னுள் பறந்த !
முத்துகள் எல்லாம் சிறகிழந்து!
மழையாய்ப் பொழிந்து!
நம்மை ஆசீர்வதிக்கின்றன!
முத்துமழை!
தொடர் முத்தமழைக்கான!
இனிய சமிக்ஞை போல்...!
ஸ்ரீரங்கம் சௌரிராஜன்