தமிழ் கவிதைகள்

தமிழ் கவிதைகள்

சிரிப்பு

வித்யாசாகர்
பாவம்!
புண்ணியம்!
ச்ச ச்ச ஒரு மண்ணுமில்லை,!
இந்த நொடி கிடைக்குமா!
கொஞ்சம் சிரித்துக்கொள்ளலாமென்று!
ஏங்கும் பொழுதுகளைத் தேடிவையுங்கள்..!
யாருக்கும் !
வலிக்காமல் சிரிக்க முடியுமா !
சிரித்துக்கொள்ளுங்கள்..!
மரணத்தை மிட்டாயாக்கிக் கொள்ளும் !
சிரிப்பு தான்!
வாழ்வின் பரிசு!
சிரிப்பை பரிசளியுங்கள்!
சிரிப்பு புரிவதற்கே !
வயது நூறைக் கேட்கும் பணநோய் வேண்டாம் !
அந்த நோய் !
மிக கொடிது !
பணம் பெரிய விசம்..!
பணமென்பது காலணியைப் போல !
வாசலில் கிடக்கட்டும் !
அவசியமெனில் அணிந்துக் கொள்வோம்!
அதை யாரும் எடுத்துவைத்துக்கொள்ள !
மாட்டார்கள்!
முட்டாள்கள் பதுக்கிவைக்கலாம் !
பதுக்கிக் கொள்ளட்டும் !
அவர்களை விட்டுவிடுங்கள் !
அவர்கள் சிரிப்பால் சபிக்கப் பட்டவர்களாக !
இருக்கலாம்!
நீங்கள் சிரித்துக்கொண்டேயிருங்கள் !
இருப்போரை சிரிக்கவையுங்கள்..!
சிரிப்புதான் !
பிறப்பின் பரிசு..!

உயிர் விளக்கு!

வித்யாசாகர்
மரணத்தை தொடும் !
வலியோ பயமோ தெரியுமா உங்களுக்கு..?!
அந்த பயத்தின் நச்சு நிமிடங்களுள் !
எத்தனை முகத்தை !
நினைத்துக்கொள்ள முடியுமென்று எண்ணுகிறீர்கள் ?!
செய்த நல்லதும் கெட்டதுமெல்லாம்!
பயமுறுத்தும் தருணத்தைவிட!
அந்நேரத்தில் !
உயிர்த்திருப்பது அப்படியொரு கொடிது!
நிறையப்பேரைப் போல !
நானுமப்படி !
சில சமயங்களில் !
உயிர்த்துக் கிடக்கிறேன் !
அப்போது வலி' அப்படி வலிக்கிறது !
பயம்' ஓடும் ரத்தமெல்லாம் பரவுகிறது !
வலிக்க வலிக்க !
உடன் இருப்போரை நினைப்பேன் - அது!
இன்னும் வலிக்கும் !
ச்ச என்ன இது வலியென்றுப் !
பிடுங்கி ஓரமெறிந்துவிட்டு !
உடனிருப்போருக்காய் அமர்ந்துக் கொள்கிறேன் !
இப்படி நான் பிடுங்கி பிடுங்கிப் போட்ட !
எனது வலிக்குள் இன்னும் !
ஆயிரம் உயிர் விளக்குகள் எரியும்!
ஒரேயொரு எனது !
இருளும் பொழுதிற்குள் !
ஆயிரம் விடியல்கள் விடியும் !
விடியலில் எரியும் விளக்கொன்று !
அதன்பின் எனக்காகவும்தான் !
எரிந்துப் போகட்டுமே போ..!

ஒன்று சேர்; ஏனென்று கேள்; எட்டி சட்டை பிடி!

வித்யாசாகர்
ஒன்று சேர்!
ஏனென்று கேள்!
எட்டி சட்டைப்பிடி!
இல்லை - மனிதரென்று தன்னைச்!
சொல்லிக் கொள்வதையேனும்!
நிறுத்து;!
தன் கண்முன்!
தன்னின மக்கள் இத்தனை லட்சத்திற்கு!
மடிந்தும் ஒன்றுதிரண்டிடாத நாம் -!
அதற்கு ஏதோ ஒரு நியாயம் கற்பித்து!
நம்மை மனிதரென்று சொல்ல!
நாக்கூசவில்லையோ???!
கண்முன் படம் படமாய்!
பிடித்துக் காட்டும் அந்நியனின் கைபிடித்தெழுந்து!
அந்த கயவனுக்கெதிராய் ஒரு ஒட்டுமொத்த!
குரலை கொடுத்தாலேனும் திரும்பிப் பார்க்காதா உலகநாடுகள்?!
அவனின் சட்டையைப் பிடிக்காதா உலகநாடுகள்???!
மூடி இருந்த கண்கள்!
இன்று திறந்தேனும் இருப்பது நன்று!
என்றாலும் கட்டிவைத்திருக்கும் கைகளையும்!
அவிழ்த்து விடு உறவே;!
என் தாயைக் கொன்ற!
என் மகனை கருவறுத்த!
என் மனைவியை கர்ப்பத்தில் கொன்ற!
என் சகோதரியை நிர்வாணப் படுத்தியதொரு!
கோபத்தை - அங்கே கடைசித் தமிழனொருவன்!
சுதந்திரக் காற்றைச் சுவாசிக்கும் வரை சுமந்து நட;!
ஒருவரைக் கொன்றதால்!
பலரைக் கொள்ளத் தீர்ப்பளிக்கும் தேசம்!
பலரைக் கொன்றவனை!
ஒரு வார்த்தை கேட்காத குற்றத்தை!
ஏனென்று தட்டிகேள்;!
தமிழன் எனில்!
தண்ணீர் தெளித்து விடப் பட்டவனா?!
கேள்வி கேட்க யாருமற்றவனா?!
ஏனென்றுக் கேட்க நாதியற்றவனா???!
இல்லையென்று பறைசாற்று;!
தெருவில் செல்கையில் ஒருவன்!
இடித்துச் சென்றாலே கோபம் வரும்!
இவனென் சகோதரிகளை துணியவிழ்த்து!
படம் பிடித்து!
எள்ளிநகைத்து!
இழுத்து லாரியில் வீசுகிறான், கையை உடைக்க வேணாம்?!
காரி உமிழ வேணாம்? கொன்று புதைக்க வேணாம்???!
என்ன செய்தோம் நாம்?!
இனி என்ன செய்வோம் நாம்?!
வாய்மூடி காணொளி பார்த்து!
போஸ்டர் ஒட்டி!
செய்தியில் பேசி!
கூட்டம்போட்டு!
கண்ணீர்விட்டழுது!
யாரோ ஒரு சிலர் பேசிப் பேசி!
காலத்தை கடத்திவிட்டு - வரலாற்றில் நம்மை!
கோழையென்று எழுதிக் கொள்வோமா?!
இறந்தவரையெல்லாம்!
நஞ்சு எரித்து சுட்டவன்!
இருப்பவரை நயவஞ்சகத்தால் சுடும் முன்!
ஒரு தீக்குரல் கொடுத்து -!
தன் இருப்பினை ஒற்றுமையை!
ஒட்டுமொத்தமாய் காட்டவேண்டாமா?!
போர்க்குற்றவாளி போர்க்குற்றவாளியென்று அவனை!
காணுமிடமெல்லாம் வார்த்தைகளால்!
தோலுரிக்க வேண்டாமா?!
உரிப்போம்!
இனி உரிப்போமென சூளுரைப்போம்;!
தமிழர் பற்றிய ஒரு அசட்டை!
அவன் உயிரின் கடைசிப்!
புள்ளியிலிருந்தும் ஒதுங்கிவிட ஒற்றுமைத்!
தீப்பந்தமேந்தி -!
அவனுக்கு ஒத்தாசை செய்யும் நாடுகளின்!
மீதெறிவோம்;!
கையுடைந்து!
காலுடைந்து!
உயிர்பயம் தெறிக்க ஐயோ ஐயோ என்று!
அலறிய மக்களின் காணொளிகளை!
கண்கள் சிவக்கப் பார்க்க அனைவருக்கும் காட்டுவோம்;!
நடந்தது தவறு!
இத்தனை அப்பாவி மக்களைக்!
கொன்றது பெருங்குற்றம்!
போரெனும் பேரில் நிகழ்த்தப் பட்டதொரு!
படுகொலை மன்னிக்கத் தக்கதன்று; உலகின்!
காதுகளில் கேட்க முரசொலி கொட்டுவோம்;!
இத்தனை வருடம்!
மறைமுகமாய் அழித்தான்,!
இன்று வெளிப்படையாய் கொன்றான்!
நாளை ?!
நாளை என்று அவன் எண்ணுவதற்குள்!
அவன் கண்ணில் நம் ஒற்றுமை கைவைத்துக்!
குத்துவோம்;!
அவன் நாடு!
அவன் ஆட்சி!
எதுவாகவேனும் இருந்துப் போகட்டும், அங்கே!
அழிவது நம் மக்களாக நம்மினமாக இருந்தால்!
ஒன்று சேர்;!
ஏனென்று கேள்;!
எட்டி அவன் சட்டைப் பிடி;!
எழுந்து நாலு அரை விடு;!
எனக்கிராத அக்கறை வேறு எவனுக்கடா இருக்குமென்று கேள்;!
உலகின் மௌனத்தை வார்த்தைகளால் உடைத்து எறி;!
உறங்கும் நியாயத்தை ஒற்றுமையால் வெளிக் கொண்டு வா!
நீ உயிரோடிருப்பதை ஒவ்வொரு தமிழனும் நிரூபி

வார்த்தைகளற்ற இடம் தேடி; நீயும் நானும் போவோம் வா

வித்யாசாகர்
ஒரு சின்ன முத்தத்தில் இதயம்!
ஒட்டிக் கொள்ளவும் -!
உதடுகள் ஈரமாகவும் ஒரு பூ உள்ளே பூக்கிறது.!
நெருக்கத்தின் நெருப்பில் அன்பு வார்க்கவும்!
பண்பின் நகர்தலில் காதல் கற்கவும் -!
ஒரு சப்தம் இசையாய் காற்றிலே கலக்கிறது..!
முகத்தின் மாயயை உடலால் உரசி கிழித்து!
உள்ளத்து கதவுகளை வாழ்விற்காய் திறந்துவைக்க!
உலகதத்துவம் வெற்றிடமாய் உள்ளே பரவுகிறது..!
பேசிக் கழிக்காத பொழுதொன்றாய்!
ஒவ்வொரு நாளினையும் - வாழ்ந்துக் காண்பிக்க!
காலக் கணக்கின் அச்சாணி புடுங்கி -!
ஒரு அசட்டுத் தைரியம் உட்புகுந்து!
வருடங்களை எல்லாம் நாட்களாய் மாற்றி!
நாட்களை நொடிகளாய் திரித்து - யுகம் பல உன்னுள் தொலைக்க!
உனை மட்டுமே தேடி -!
யாருமிலா அண்டப் பெருவெளியில்!
அலைகிறதென் இமைப் பூட்டாத யிக் கண்களிரண்டும்..!
உச்சி நடுக்கோட்டில் முத்தம் பதித்து!
பாதபஞ்சுதனில் பூமிபடாதுனை - நெஞ்சுக் கூட்டில் தாங்கிக் நிற்க!
நித்தமும் நித்தமும் ஓர் தவம்!
காத்திருப்பின் கண்ணீர்பெருக்கில் கரைந்தேப் போகிறதெனில்!
நம்புவாயா???!
சப்தமிடாத வானத்தின் இரவொன்றில்!
நட்சத்திரம் பொருக்கி பெயர்கோர்த்து!
அதற்கு வானவில்லில் கோடுகிழித்தா லென்ன யெனும் கற்பனை!
உனை எண்ணும் போதெல்லாம் -!
உன் பெயரை உச்சரிக்கும் போதெல்லாம் - உன் நினைவுகளாய் உள்ளே!
பெருக்கெடுக்கிறது...!
காலத்திற்குமான சாபமாக காதலை திரித்த!
பொய்யர்களின் முகத்தில் - எது காதலென எழுதிவிட்டு!
ஜாதியின் மதத்தின் வெறியை!
ஒரு முத்தத்தில் அழித்துவிட்டு -!
வெறுமனே திரும்பிப் படுத்துக் கொள்ளும்!
ஒரு இள-ரத்த துணிவல்ல யிது;!
உன்னோடு வாழமட்டுமே -!
கனவின்றி காத்திருக்கும் ஒரு வாலிபனின் உணர்வு.!
உனக்கும் பிடிக்குமெனில் சொல் -!
இரு கைவிரித்து -!
இதோ இந்த கனம் முதல் நமதென்று முழங்கி!
வார்த்தைகளில்லா ஓரிடம் நோக்கி!
நீயும் நானும் பறந்துபோவோம்

நினைவுக் கனலிலெரியும் முகநூல் இதயம்

வித்யாசாகர்
I.!
நீ -!
காற்றில் அசைபவள் !
கிளையுரசி உடைபவள்!
விழுந்ததும் பறப்பவள் !
பயணித்துக் கொண்டேயிருப்பவள்;!
நான் நின்று !
நீ வருவதையும் !
போவதையுமே பார்த்திருக்கிறேன்;!
கணினி வழி தெரியும் !
கண்களிலேயே !
உயிர்திருக்கிறேன்;!
வாழ்வதை அசைபோட்ட படி !
உன்னையும்!
நினைத்துச் சிரித்திருக்கிறேன்;!
வாசலை !
பசியோடு திறக்கக் கேட்காமல் !
சந்திக்கவேக் கேட்டிருக்கிறேன்!
நீயும் சம்மதித்தாய் !
பேசினாய் !
பார்க்கிறாய் !
இருக்கிறாய்!
நீ !
இருக்கிறாய் என்பதில் மட்டுமே!
உயிர்த்திருக்கிறேன்..!
!
II.!
கைதொடும் !
உனதுணர்வு!
மின்சாரம் கொண்டது;!
பார்க்கும் தருணங்கள் !
யாவும் !
தவத்தை உடையது;!
பேசும் !
அவகாசமெல்லாம் !
பாக்கியத்தைப் பொறுத்தது;!
உனக்கான எல்லாமே !
எனக்குத் தலைமேல்!
கிரீடம் இருப்பதற்குச் சமம்!!
!
III.!
பேச்சில் !
பாதி மறைக்கிறாய்,!
பேசாமலே !
உயிர்த்தீ அணைக்கிறாய்,!
நேசத்தின் !
எல்லை விரிக்கிறாய்,!
நெருங்கி என் !
நிஜத்தை தொலைக்கிறாய்;!
காற்றில் !
பொம்மையும் பூவும் !
பரிசென்கிறாய் !
கடவுச்சொல்லினும் இரகசியமாகிறாய்;!
பேஸ்புக் !
டிவிட்டர்!
ஜி-பிலஸ்!
எங்கு பொத்தான்களைத் தட்டினாலும் உன் முகம் தெரியும், !
தெரியாத நாளிலென் உயிர்பிரியும்..!
IV.!
உனக்கானச் !
சொற்கள் !
மௌனத்தை அணிந்தவை;!
வார்த்தைகளைக் களைந்து !
இதயத்தை !
பார்வையால் அறுப்பவை;!
காத்திருப்பிலும் !
தவிப்பிலும் !
நினைவுகளால் வலிப்பவை;!
என்ன செய்ய !
உனக்கானச் சொற்களை?!
இதோ -!
எழுதாமலே விட்டுவிடுகிறேன் போ

உடல் பெரிது உள்ளமும் பெரிது உயிர் சிறிது

வித்யாசாகர்
முகப்பூச்சு தடவு!
வாசனைதிரவியம் வாரியிடு !
வண்ண வண்ண ஆடைகள் நெய்துடுத்து !
வரும் காலன் வராதவரை எப்படிவேண்டுமோ ஆடு;!
பொய்சொல்!
பொறாமை கொள் !
புகழுக்கு அலைந்து எல்லாம் செய் !
உடம்பென்னும் கோவில் அசுத்தமாக ஆடு;!
புகையிலை உண் !
புட்டியில் வாழ் !
போதையில் புத்தியை அறு !
பாதைகாட்டும் உடம்பு பழுதாகும்வரை ஆடு; !
பெண்ணிற்கு ஏங்கு !
பாரபட்சம் பார் !
ஏற்றத் தாழ்வில் எள்ளி நகை !
உடம்பின் ரசாத்தால் மனதை நஞ்சாக்கு;!
அரசியல் ஆதாயம் செய் !
அடுத்தவர் சொத்திற்கு ஆசைப்படு !
விட்டது கிடைக்காவிட்டால் ஒரு கண்ணை எடு !
ஆண்டோர் நற்போக்கை மாற்றி அமை!
உடம்பை உடம்பிற்கு எதிரியாக்கு;!
இடையே ஒரு சின்ன காய்ச்சல் வரும் !
தலைவலிக்க உலகம் மறக்கும் !
வயிறுவலி வாழ்க்கையைக் கொல்லும்!
கைகால் கொஞ்சம் உடைந்தாலும் காண்பதெல்லாம் !
முடமாய்த் தெரியும்-!
கட்டை சாய்ந்தால் அத்தனையும் சாயும் !
உடம்பென்னும் கோயில் உள்ளவரைதான் எல்லாம் !
உயிர் போவதெனில் சட்டென விட்டுப் போகும்!
உடல் தேவையெனில் உயிரையும் பிடித்துநிறுத்தும்!
உடலைக் காத்து கொள்; உயிர் வேண்டுமெனில்

தன்னை தான் உணர்வதே ஞானம்

வித்யாசாகர்
முதுகெலும்புகள் நிமிர்ந்திருந்தும்!
முடிவுகளால் தளர்ந்தவர்கள்,!
நினைத்ததைச் சாதித்தும்!
நடக்காததில் நோகும் பிறப்புகள்;!
ஏக்கப் பெருமூச்சினுள் வெந்துவெந்தே!
நித்தம் வாழ்பவர்கள்,!
என்றேனும் மாறும் வாழ்க்கைக்கு!
என்றென்றும் கனாக்காணும்; ஈசல் பூச்சிகள்;!
வந்தவர் போனவர் பற்றியெல்லாம்!
பகடி பேசும் பழையப் போர்வாள்கள்;!
அடிப்பவன் ஓங்கியடித்தால் - அதிர்ச்சியிலேயே!
மூச்சைவிடும் அற்ப உயிரின் பாவப் பிராணிகள்;!
எதிலெல்லாம் ஏற்றம் உண்டென!
தேடித் தேடியே இருப்பதை தொலைப்பவர்கள்,!
இருக்க இருக்க மேலேறி!
பேராசையின் பள்ளத்தில்வீழ்ந்து தானேஒழிபவர்கள்;!
குடிக்க கஞ்சு போதும்!
உடுத்த ஆடை போதும் என்றிருந்திருந்தால்!
அடுத்தது மகிழ்ச்சி மகிழ்ச்சி என்பதை!
அறிந்தும் ஆழ்கடலை தொடாதவர்கள்;!
பிடித்தது பிடிக்காதது என்று பகுத்துப் பகுத்தே!
உணர்ச்சிகளைக்கூட ஏற்றயிறக்கத்துள் தள்ளியவர்கள்,!
பின் தவிக்கத் தவிக்க மூச்சடக்கி!
வாழ்க்கையை ஞானம்தேடியே இழப்பவர்கள்;!
இருப்பது ஒரு வாழ்க்கை யென்றதே - நாம்!
இருப்பதைச் சிறப்பாக வாழ்வதற்கன்றி வேறென்ன? இன்னும்!
நீள்வது உண்டெனில் பிறப்புகள் நீளட்டுமே – நாம்!
பெறுவதைப் பேறென்று வாழுவமே' என உணர்தலேப் பேரறிவு;!
இருப்பதும் மறைவதும் இயல்பு தானே!
கிடைப்பதும் தொலைப்பதும் இயல்பு தானே!
பிறப்பதும் அழிவதும் கூட இயல்பு தானே,!
இயல்பில் - மாற்றமும் தோற்றமுமே மாறாதது;!
ஏற்றத்தை இறக்கத்தை கண்டதும் ஆடாத!
கிடைத்ததும் தொலைத்ததும் சட்டென மாறாத!
இருப்பதை பகிர்ந்து இருப்பதில் சிறந்து!
இயல்பின் அசைவுகளை முடியக் கண்களுள் பார்த்தால் -!
மூளும் நெருப்பிலிருந்து பெய்யும் மழை!
வீசும் காற்றுவரை தன்னுள் அடக்கமென்று தானே தெரியும்,!
அதற்கும் ஆடாத எதற்கும் அசையாத மனமது!
எப்போதும் தனித்திருக்கும், ஏகத்திலும் சுகித்திருக்கும்.,!
கலங்காத மனம் அறியாமை நோயின்றி!
கேட்பதையெல்லாம் பெற்றுத்தரும், எதைக்!
கேட்பது கேட்க மறுப்பதென்பதையும்!
இயல்பிலடங்கி எண்ணம்வழியே எடுத்தியம்பும்!!
எங்கும் அமைதி நிலவும், எவ்வுயிரும் சுகம் பெரும்!!!
யாவருக்கும் மங்களம் மங்களமே யுண்டாகும்!!!

நேரத்தின் காட்சி

ரேவா
இது அதன் பெயரால் !
அப்படியே அழைக்கப்படும் !
தனக்கான அந்தரவெளிகளோடு !
தனித்தே தான் இருக்கும் !
துயரத்தின் காட்சியையும் !
பாவத்தின் நீட்சியையும் !
துறத்தும் பாவனையை !
தொடர்ந்தே தான் கொடுக்கும் !
தப்பிக்கும் நேரமும் !
தப்பிழைக்கும் காலமும் !
தப்பாமல் தவறுக்குள் !
வரவொன்றை வைக்கும் !
இருப்பின் ஓடமதும் !
சுழல் காற்றின் கையில் சிக்கி !
சிருங்காரமாய் ஆடும் !
ஆடுமிந்த ஆட்டமது !
முடிந்த பின்னும்!
முயற்சிக்கு முற்றுவைத்து!
முடிவைத்தேடி தொடருமிதை !
அதுவென்றே !
நல்லுழகம் கூறும்

தக்கை அழகி

சுபா
மரகத பச்சை புல்வெளி
படக்கென்று பட்டழகி
பனி சிதறல்
பாந்தமாய் பதுங்கி
சிறகை விரி
சிருங்காரமாய்
சில்வண்டுகளை
சிதறாமல் சிறையிடு
சின்னதாய் சித்திரமாய்
சுறு சுறு வென்று சுழன்று
சுற்றும் சுட்டிப்பெண்
தக்கை அழகி அவள்

சொல்லப்படாத கவிதைக்கு !

ச இரவிச்சந்திரன்
எழுப்படாத புகழுரை !
வாசிக்கப்படாத வரையில் கவிஞனின் நெஞ்சில் !
சிம்மாசனமிட்டமர்ந்தாய் !
வெளிப்பட்ட அக்கணமே !
விமர்சங்கனங்களின் தாக்கங்களுக்கு !
ஆட்பட்டாய் !
என் கவிதை பெண்ணே !
உனக்கு எத்தனை எத்தனை அணி செய்து வைத்தேன் !
உன்னை என் நெஞ்சில் பூட்டியல்லவா வைத்திருந்தேன் !
உன்னை வாசித்தவுடனே !
என்னை விட்டு எப்படி மாறி போனாய் !
வாசகர்களின் வார்த்தைகளுக்குள் சிறை பட்டாய் !
ஆசிரியர்களின் கைகளால் மோட்சம் பெற்றாய் !
கவிதை நங்காய் ! !
என்னை மறந்தும் இருந்து விடாதே !
நீ தவழும் வரையே நான் கவிஞன் !
நீ என்னை புறக்கணித்து விட்டாலோ !
நான் வெறும் மனிதன்