நீல வானத்தில்!
இமை, குடை விரித்து,!
இரவு உறங்க சென்ற!
இனிய காலையில்,!
கண்விழித்தேன் கண்மணி!
உன் நினைவுகளுடன் ...!
ஆச்சர்யங்களையும் அதிர்ச்சிகளையும்!
நொடிப் பொழுதுகளில் மறைத்து வைத்து!
சலனமின்றி சீராய் பயணிக்கும்!
காலத்தின் வழித்தடத்தில்!
என் காதலுக்கும் சிறிதளவேனும்!
இடம் இருக்கும் என்ற நம்பிக்கையுடன்!
இன்றைய பொழுதை துவக்க!
ஆயத்தமாகிறேன் ...!
ஆச்சர்யமோ அதிர்ச்சியோ!
எதுவாக இருந்தாலும்!
ஆண்டவன் விட்ட வழி என்று!
கடந்து போவதும்!
அடுத்து வருவதை எதிர்கொள்வதுமே!
நிதர்சனம் என்றானபிறகு!
அதிகாலை கண்விழிப்புகளில்!
அவ்வளவாக சுவாரஸ்யம்!
கூடியதாக தோன்றவில்லைதான் ......!
ராம்ப்ரசாத், சென்னை