சோகம் சுரந்த கோபம் - கலைமகள் ஹிதாயா றிஸ்வி

Photo by Ilya lix on Unsplash

வாழ்வில் !
பிரச்சினைகளை விட்டு மாறிச் செல்வதை விட , !
வேறு வழி புரியவில்லை ..!!
எல்லா விதமான தொல்லைகளையும் !
அகற்றி விட்டால்,!
வாழைப்பழத்தை விட மென்மையானது !
இதயம் ..!!
நீ-!
செய்வது தான் சரியென்று நடந்தால் ,!
நாயின்வாலை நிமிர்த்த முடியுமென்றசெயலாகும் ..! !
நான் -இனி !
விலகித்தான் போக வேண்டும் ..!!
வி!ளங்கித்தான் ஆக வேண்டும் ..!!
சோகம் சுரந்த கோபம் !
என்னுள்ளே நினைத்துப் பார்க்கலாம் .! !
உனக்காக மனம் திருந்தி வருவாளென்று !
நீ , !
நினைத்துப் பார்க்கலாம் .!!
பாசவுள்ளம்சாம்பலாகிப் போனது ..!!!
உன்,!
தொல்லைதரும் நிகழ்வுகள் ...!
எனக்குள் வந்து நிழலாடும் போது ....,!
தீயாய் எரியும் விறகுகளாய் !
என் ஆத்மா !
எரிந்து கொண்டிருக்கிறது ..!!
புகைந்து கொண்டிருக்கிறது
கலைமகள் ஹிதாயா றிஸ்வி

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in

There are no comments yet.