இவை.. வருங்காலம் இப்படியும் சிந்திக்கலாம்..!!
01.!
இவை...!
-------------!
காலத்தால் மாறாத!
பக்கங்கள்…!
ஆனால் வேதமல்ல…!
இதயவுச்சி!
கொண்டெழுதிய!
அச்சரங்கள்…!
அகாலமாய்!
மரணமடையும்!
மௌனங்கள்…!
உயிர்த் திட்டுக்களில்!
திடீரென வெடித்த!
அசரீரிகள்…!
வானத்து நிர்வாணங்களை!
மூடி மூடி வைத்த மேகங்கள்!
கலைந்த போது ஏற்பட்ட!
கார்ப்பெயல்கள்…!
பனித்துளிகளை!
கௌவிக் கொண்டோடிய!
சூர்யோதயங்களின்!
புன்முறுவல்கள்…!
நறுமண புஷ்பங்களை!
காயப்படுத்தாமல்!
மிதமாய் வீசிய!
இளந்தென்றல்கள்… !
02.!
வருங்காலம் இப்படியும் சிந்திக்கலாம்..! !
------------------------------------------ !
(சுனாமி ஞாபகார்த்தமாக) !
அதோ –!
வெகு தூரத்தில்…!
யாரும் வாழ்ந்திராத!
தரைகளாக…!
முருகைக் கற்பாறைகள்!
ஏதோ ஜெபிக்கின்றன…!
கள்ளிச் செடிகள்!
ஏதோ கதை சொல்கின்றன…!
கடற்கரை மணலில்!
ஏதேதோ கால் தடங்கள்!
கண்டு பிடிக்கப் படாமல்!
உக்கிய என்புத் துண்டுகள்..!
8.31ல் நின்றுவிட்ட!
கடிகாரங்கள்…!
என்றோ பசுமை பேசி!
பாழடைந்த கிராமங்கள்…!
இன்னும் கண்ணீர் விடுகின்ற!
சுறாமீன் முட்கள்…!
இன்னமும் மூச்சுவிடும்!
கடல் நீர்த்துளிகள்…!
எல்லாமே !
என்ன மாயைகள்…?!
சென்ற தலைமுறையின்!
சரித்திரத்தைப்!
புரட்டிப் பார்ப்போம்!
வா…
ஜே.ஜுனைட், இலங்கை