01. !
அம்மாவின் முத்தம்.!
------------------------!
சொத்திலும் பெரிதாம் அம்மாவின்!
முத்தம், ஆசை முத்தம்.!
இத்தரை மீது எமக்குச் !
சத்தான வித்து அன்பு முத்தம். (சொத்திலும்)!
ஆசையாய் ஒரு முத்தம் பல!
வீசை பலம் தரும் அன்னைக்கு.!
பூசை செய்வதாய் முத்த மலர்!
ஓசை அவளுக்கு இன்பம் தரும். (சொத்திலும்)!
காசைப் பெறுவதிலும் தாய்க்கு!
ஆசை முத்தம் பெரிது பெரிது.!
ஆனந்தம் எமக்கும் நேசமாய்!
அள்ளி முத்துக் கொடுப்பதற்கு. !
(சொத்திலும்)!
02. !
உறவு வட்டம் !
--------------------!
அருமை உறவு வட்டம்!
உருவமைத்தார் பெற்றோர் உலகில்.!
திருவோடு கருவிலான உரிமை!
ஒரு வீடு உறவெனும் பெருமை. (அருமை….)!
நிறம் மாறாப் பாசம் உயிராட!
திறவுகோலெனும் அன்பு ஆதரவாய்!
உறங்காது பாடுபடும் பெற்றேரின்!
இறவாத பாசம் உலக சங்கமம். (அருமை…)!
நிறக்கும் வானவில்லான உறவு!
சிறந்த ஏலக்காயாய் மணந்து!
சிறகு விரித்தால் பெற்றோரன்பு!
பிறகொரு குறையில்லை, பேதமில்லை.. (அருமை….)!
!
பாடல் - வேதா. இலங்காதிலகம். ஓகுஸ், டென்மார்க். 22-4-08.!
(பெற்றவரன்புப் பாடல் வரிகள்)

வேதா. இலங்காதிலகம்