ஒரு காரணத்தை எப்படி வெளியில் சொல்வேன்!... இது தான் வாழ்க்கை..புத்தியில் உறைத்தது..!
01.!
ஒரு காரணத்தை எப்படி வெளியில் சொல்வேன்..!!
--------------------------------------------------------!
விழித்தெழும் ஒவ்வொரு!
இரவு வேளையிலும்!
ஒவ்வொரு கனவு ..!
விஷமுள்ள நாகம்!
யாரையோ தீண்டுவதாய்.!
நரி ஒன்று!
ஊருக்குள் ஊளையிடுவதாய்..!
குரங்கு ஒன்று!
எதையோ பறித்து போவதாய்..!
யானை ஒன்று!
பயமுறுத்தி துரத்துவதாய்.!
நான் கண்ட!
ஒவ்வொரு கனவிற்கும்!
பயந்தபடியே பல காரணங்களை!
சொல்கிறாள் அம்மா..!
அத்தனையும் என்!
ஒற்றை குணம்!
என்பதை நான்!
எப்படி வெளியில் சொல்வேன்..! !
!
02.!
இது தான் வாழ்க்கை..!!
-----------------------------------!
போராடி வாழ!
எண்ணம் மறுத்தது..!
போராட்டம் மட்டுமே!
எனக்கு வாழ்வா நெஞ்சம் கொதித்தது..!
விரக்தியோடு!
சாலையில் நடந்தேன்..!
உடைந்த பொம்மை ஒன்றை!
வீதியில் கண்டெடுத்த குழந்தை..!
விண்வெளியில் மிதப்பது போன்று!
புன்னகை பூத்தது..!
கிடைத்ததை வைத்து!
மகிழ்வை தேடு..!
எனும் உண்மை!
சாலையோரக் குழந்தை!
எனக்கு சொன்னது..!
முன்பு விட!
வேகமாய் நடந்தேன்!
அதே வீதியில்...!
இப்போது விரக்தி இல்லை என்னில் ..!
!
03.!
புத்தியில் உறைத்தது..!
-----------------------------!
எழுத நினைத்த!
வார்த்தைகளெல்லாம்..!
எங்கோ பார்த்தபின் தான்!
புத்தியில் வலியாய்!
உறைத்தது....!
தவறவிட்ட கணங்களும்!
தள்ளி வைத்த நேரங்களும்

சத்யா