நான் - சாந்தி

Photo by FLY:D on Unsplash

போகும் வழியில் ஒரு பைத்தியக்காரன் !
பொறுமையாக ஏதோ சொல்லிக்கொண்டிருந்தான் !
சாய்ந்திருக்கும் சுவர்..அவன் முன்னே !
குவிந்திருக்கும் குப்பைகள் தவிற !
வேறொன்றுமில்லை அவனைச்சுற்றி !
இருந்தும் அவன் !
பொறுமையாக ஏதேதோ சொல்லிக்கொண்டிருந்தான்... !
சிரிப்புத்தான் வந்தது !
காகிதங்களுடன் போராடும் என்னை அவன் !
ஞாபகப்படுத்தியபோதும்..ஏனோ !
எனக்கு சிரிப்புத்தான் வந்தது... !
-சாந்தி
சாந்தி

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in

There are no comments yet.