ஏற்றம் பெற ஏணிப்படி!
ஏறிவிட்டாய் நீ முன்னிலை படி!
அன்னை தந்தை முதல் படி!
அகர ஆசான் அடுத்த படி!
முழுமை கடவுள் மூன்றாம் படி!
நற் சுகமே நான்காம் படி!
பாச நேசம் உயர்ந்த படி!
மயக்க நிலை மாயப் படி!
வசந்தம் காண வாழ்க்கை படி!
வாழ்வில் சொந்தம் வாசல் படி!
காலம் கனிந்தால் காதல் படி!
காவேரி கடப்பாள் கானல் படி!
அன்பை தர ஆன்மீக படி!
அறிவே என்றும் ஆகாச படி !
படிக்கு படி பாத அடி - உன்னை!
எரித்தே தணியும் கோடை இடி!
ஏற்றம் காணலாம் ஏறு ஏறு!
ஏற மறக்காதே தேசப் படி!
உயர் நிலைதானே உரிமை கொடி!

வல்வை சுஜேன்