கண்களால் காண்பதெல்லாம்!
கவிதை உருவம் எடுக்குது!
கனவிலும் கவிதைகள்!
கலைடாஸ்கோப்பாய் உருளுது!
அவள் அன்னம் பரிமாறும் அழகினில்!
அடிமனதில் சுரக்குது!
அழகுக் கவிதையொன்று!
அரை நிசியிலும் எழுதுகிறேன்!
அரை நிர்வாணக் கவிதையொன்று!
காதல் வளர்க்கும் கருவியாய்!
கவிதை வரைந்த காலம்போய்!
கவிதை மீதே காதல்கொண்டு!
காதல் கவிதை(களும்) வரைகிறேன்!
கல்லடிபடுமாம் காய்ச்ச மரம்-நம்!
கள்ளக் காதல் கண்டு பொறுக்கா!
கள்வர்களின் கல்லடி தாங்கி!
காலமெல்லாம் காத்து நிற்பேன்!
கலங்காதே என் புதிய காதலியே!!
ஜான் பீ. பெனடிக்ட்!
வாசிங்டன்

ஜான் பீ. பெனடிக்ட்