நேசத்தை விழிநீரில் அழித்து
எம்.ரிஷான் ஷெரீப்
வீடு முழுவதிற்குமான!
மகிழ்ச்சியின் ஆரவாரத்தினை!
ஒரு புகைப்படம் கொண்டுவந்தது ;!
இதைப் போலப்!
பேருவகையொன்றைத் தவிர்த்து!
நிராகரிப்பின் பெருவலியை!
அவள் அவனுக்குத் தரவிரும்பவில்லை !!
!
அவளது வீடு வளர்கிறதா என்ன ?!
அவனது காதலை ஏற்க மறுத்து!
உள்ளுக்குள் புதைந்து!
மனம் குறுகி நின்றவேளை!
குறுகுறுப்பாகப் பார்த்து!
குறுகிச் சிறுத்த அதே வீடு - இன்று!
சொந்தங்களின் கிண்டல்களுக்குத்!
துள்ளிக்குதித்து ஓடும் போதெல்லாம்!
இத்தனை காலமும்!
ஒளித்து வைத்திருந்த!
நீண்ட புதுப்புதுப் பாதைகளை!
அகன்று விரிக்கிறது !!
!
சாஸ்திரங்கள்,சம்பிரதாயங்கள்,!
வீட்டிற்கான பழம்பெரும் கலாச்சாரங்கள்!
அவளது கரம்பிடித்து!
இறுக்க நெருக்குகையில்,!
வெட்கத்தைப் போர்த்திய சாலைவழியே!
அவனது காதலைப் பாடிச்செல்வாளென!
அவனெப்படி எண்ணலாம் ?!
!
சமுத்திரங்கள் பிரித்த!
பெருங்கண்டங்களிரண்டில்!
நீந்தத் தெரியாமல் அவன்களும்!
நீர் வற்றுமென அவள்களும்!
பார்த்தவாறு காத்திருக்கையில் ,!
காதலும் , நேசங்களும்!
அவன்களுக்குள்ளேயே!
புதையுண்டு போகட்டும் - அவ்வாறே!
அவள்களது நிலவெரிந்த!
நடுநிசிகள் கண்ணீரால் நனையட்டும் !!
!
-எம்.ரிஷான் ஷெரீப்,!
மாவனல்லை,!
இலங்கை