திகதிகளின் ஒற்றைகளை மட்டுமே !
கிழித்துப்போடும் எமக்கு !
கடந்த பொழுதுகளின் !
நிகழ்வுகளின் நினைவுகளை !
மறந்துவிடத் தெரிவதில்லை. !
நாட்கள் ஏனோ !
அத்தனை !
வேகமாகத்தான் போகிறது. !
நிகழ்வுகளின் !
நினைவுகள் மட்டும் !
ஏனோ முடிவதில்லைத்தான். !
அழுகிறோம் . !
சிரிக்கிறோம். !
அனலாகிறோம். !
ஆனாலும் !
புதிதாய் வரும் !
ஆண்டின் நாட்காட்டியை !
ஏற்கத் துடிக்கும் !
சுவரில் அறைந்த !
ஆணிபோல் தான் !
நாமும். !
நளாயினி தாமரைச்செல்வன். !
01-02-2003

நளாயினி