அழும்வரை சிரிப்பேன்.. காதல் ஏக்கம்
கிரிகாசன்
01.!
அழும்வரை சிரிப்பேன்!
-----------------------------!
மனம்கொண்ட துன்பங்கள் மனமேதா னறிந்தாலும்!
மகிழ்வென்ற நிறம்பூசிடும்!
தினம்என்றும் துயர்கூடித் துன்பங்கள் மலிந்தாலும்!
தித்திப்பை விழிகாட்டிடும்!
வனமெங்கும் முள்போல வாழ்வில்பல் லெண்ணங்கள்!
வலிதந்து ரணமாக்கிடும்!
இனம்காட்ட முடியாது இன்பத்தை முகம்பூசி!
எழில்போல உருமாற்றிடும்!
பணமொன்றும் தீர்க்காது பட்டாடை,பல்லக்கு!
தலைதூக்கி எவராடினும்!
பிணமென்று விதிசொல்லிப் பின்வாசல் வழிவந்தால்!
பேசாது உயிரோடிடும்!
மணமென்றும் மனையென்றும் மக்கள்மற் றுறவென்று!
மறந்தேநம் விழிமூடிடும்!
கணந்தன்னில் கரியாகிக் காற்றோடு புகையாகிக்!
கனவென்ற நிலையாகிடும்!
களவாக எமன்வந்து கயிறானதெறிகின்ற!
கணந்தன்னில் எதுகூறினும்!
விளையாது பயனேதும் விரைந்தோடி உயிர்சென்று!
விளையாட்டு முடிவாகிடும்!
களையாது தினம்தோறும் கனவோடு உயிர்கொண்டு!
புவிமீது நடந்தோடினேன்!
வளமான வாழ்வென்று வருந்தாமல் திமிரோடு!
பலநூறு பிழை யாற்றினேன் !
எனையாளும் இறைவா நீ இதுகால வரைதானு!
மிரு என்றாய் புவிமீதிலே!
வினைகொண்டு அழுதாலும் வியந்தேபின் சிரித்தாலும்!
வாழ்ந்தேனே அதுபோதுமே!
சுனையோடு மீன்துள்ளும் சுழன்றோடும், வலைவீச!
தெரியாமல் அதில்மாண்டிடும்!
நினையாது ஒருநாளில் நிகழ்கின்ற வாழ்வீது!
நிழலாகி உயிரோடிடும் !
அதுபோலும் புவிவிட்டு அகல்கின்றவரை நானும்!
மகிழ்வோடு கூத்தாடுவேன்!
புதுநாளில் எந்நாளும் புலர்கின்ற வெயிலோனைப்!
போலாகி ஒளிவீசுவேன்!
மதுவுண்ணும் வண்ணத்து மென்தும்பி எனநானும்!
அழகாகப் பறந்தோடுவேன்!
பொதுவாக இன்பங்கள் இன்பங்கள் எனப்பாடிப்!
போகும்வரை துள்ளுவேன்!!
!
02.!
காதல் ஏக்கம்!
--------------------!
வேலால் வேலால் எறிந்தாள் விழியாற் கொன்றாள்!
வேகும் தீயைத் தேகம் கொள்ளச் செய்தாள்!
பூவால் பூவால் கணைகள் கொண்டே எய்தாள்!
பூவில் தீயை ஏற்றிப் போரைச் செய்தாள்!
பாலாய் பாலாய் பழமாய் கனியாய் நின்றாள்!
பாவை விழிகொண் டுண்ணத் தன்னைத் தந்தாள்!
நாலை நாலாய் பெருகும் வயதைக் கொண்டாள்!
நாவில் இனிதே தமிழைக் குயிலாய் சொன்னாள்!
நூலாய் இடையும் நெளிந்தே குறுகிக் கொண்டால்!
நோகும் உடலே என்றேன் என்னில் சாய்ந்தாள்:!
பாவாய், பாகாய், பனியாய் உருகும் ஒன்றாய்!
படரும் கொடியாய் நெளிந்தே குழைந்தே சோர்ந்தாள்!
காயாய் பழமாய் காணும் உருவத் தெழிலாள்!
கன்னிப்பருவம் கொண்டே மலராய், இதழாய்!
தேயும் வளரும் நிலவாய்த் தென்றல் குளிராய்!
தேகம் எங்கும் பொங்கும் உணர்வைத் தந்தாள்!
வாராய் அருகில் வந்துவ சந்தம் வீசாய் !
வானத் துளிகள் தூவும் நிலமென் றாவாய்!
பாராய் கண்கள் மோதிக் கொள்ளும் போராய்!
பாதிச்சமரில் தோற்றுத் தழுவும் பாங்காய்!
நீயாய் நானும் நின்னை எனதாய்க் கண்டே!
நிற்போம் வெயிலும் நிலவும் சேரும் ஒன்றே!!
ஆகா ததுவே இருளும் தருமே என்றாள்!
அணைத்தேன் நிழலை அவளோ விலகிக்கொண்டாள்!
நோயாய் மனதில் வலியைத் தந்தே சென்றாள்!
நொடியில் திரும்ப மருந்தாய் வந்தே நின்றாள் !
தாயாய் அன்பும் தனிமைத் துணையும் தந்தாள்!
தழலாய் எரியுபோழ்தே நீராய் வீழ்ந்தாள்!
மேகம் எங்கும்தாவிகொள்ளும் மின்னல்!
மேலே நீவித் தூண்டிச் செல்லும் தென்றல்!
தாகம் என்றால் நாவில் தாவும் தண்ணீர்!
தன்னில் யாவும் கொண்டாள் தன்னைத் தந்தாள்!
ஓடும் உருளும் உலகில் எங்கும் துன்பம்!
உரிமை யில்லா வாழ்வில் எதுவும் அச்சம்!
வாடும் மனதுள் மக்கள் எண்ணித் துயரம்!
வந்தா லிவளோ வாழ்வில் தோன்றும் ஒளியும்