மழலைகளின் அழுகுரல் இன்னும்!
ஓயவில்லை!!
குருதி பாய்ந்த மண் இன்னும்!
காயவில்லை!!
ஐயோ! என்னை காப்பாற்று!
என்றோர் எத்தனையோ!
விழலுக்கு இறைத்த் நீராக!
பாய்ந்தனவே அத்தனையும்!!
கொடுமையிலும் கொடுமை - எம்!
தேசத்தில் அரங்கேறியதே!!
பாடை தூக்க நால்வரில்லை!
பறைந்தோர் பக்கத்தில்லை!
செல்லினிலே சிதறினரே!!
எல்லை காத்தோர்!
முல்லை பூத்த முள்ளிவாய்க்காலில்!
களமாடி மௌனத்தினரே!!
சுடுகாடாய் சோபையிழந்த -எம்மண்!
மீண்டும் எழும்!!
எம்தேசம் விடியும் வரை!
மீண்டும் எழுவோம்!!
எவ்விடர்வரினும் அடிபணியோம்

ப. கரிகாலன்