வாழ்க்கை ஒரு கனவு - அரவிந்த் சந்திரா

Photo by Jake Hills on Unsplash

திசையிலா வெளியில்!
திகைத்திடும் கும்பல்!
கனவுகள் நினைவாய்!
களித்திடும் கூட்டம்!
வரும் நொடி அறியா!
த்ரிகால ஞானியர்!!
தத்துவ தூற்லால்!
தழைத்திடும் தலைமுறை!
வாழ்க்கை ஒரு கனவு!
வாழ்க்கை ஒரு கனவு!
பாதையின் ஒரு நுனி!
தொடக்கம் என்றால் !
பாதையின் மறு நுனி!
முடிவு !!
தொடக்கமும் முடிவும்!
இயல்பே!!
கனவின் தொடக்கம்!
உறக்கம் என்றால்!
கனவின் முடிவு!
விழிப்பு. !!
வாழ்க்கை ஒரு கனவு !!
வாழ்க்கை கனவில்!
தொடக்கம் விழிப்பு !
உறக்கம் முடிவு !
வேடிக்கை பார்த்தீரா!
வாழ்க்கை கனவில்!
தொடக்கம் விழிப்பு !
உறக்கம் முடிவு !!
போலி மனத்தின்!
போக்கிரித் தனமும் !
பொய்யும், புரட்டும்!
வாடிக்கையான!
வம்புப் பேச்சும் !
வறட்டுத்தனமான!
வேதாந்தங்களும்!
வாழ்க்கை !!
வாழ்க்கை ஒரு கனவு !!
பயந்து , பதுங்கி !
பாம்பாய் அடங்கி !
நினைப்பதையெல்லாம்!
திருட்டுத்தனமாய்!
உறங்கும் போது!
ஆட்சி நடத்தி!
காட்சிகள் காணும்!
உள் மனம் ! - அதற்கு!
கனவே வாழ்க்கை !!
கனவே வாழ்க்கை !!
பகற் கனவாயினும் !
இராக் கனவாயினும் !
துன்பம் எனினும்!
துக்கம் எனினும் !
தூக்கம் வேண்டும் !!
தூக்கம் வேண்டும் !!
தூக்கம் கொண்ட!
மனிதர் வேண்டும் !!
கனவைக் காண்பது!
மனிதர் என்றால் !
வாழ்வாம் கனவை!
காண்பவர் எவரோ?!
மனிதனைப் படைத்து!
மனிதனை நினைக்கும்!
இறைவனின் கனவு!
வாழ்க்கை !!
வாழ்க்கை ஒரு கனவு!
தூங்கா இறைவனின்!
கனவுதான் முடியுமா?!
தூங்கி இருந்தால்!
தோன்றியதென்னாள்?!
வாழ்க்கை தொடர்ந்து!
முடிவது கண்டோம் !
முடிந்திடும் கனவே!
முடியாக் கனவா?!
உடல் சாஸ்வதமாய்!
ஊன்றிப் பார்த்தால்!
வாழ்க்கை கனவில்!
முடிவுகள் உண்டு !
இறைவன் கூட!
தூங்கி விழிக்கும்!
கனவுகள் காணும்!
சராசரி மனிதன் !!
ஆனால் -!
ஆத்ம சிந்தனை!
செய்து பாருங்கள் !
வாழ்க்கை கனவில்!
படுவது உயிர்கள் !!
ஆத்மா என்பது!
அழியாதது !!
ஆத்மா என்பது!
உள்ள வரையிலும்!
வாழ்க்கை கனவு!
முடிவது எப்படி?!
தூங்கும் இறைவனின்!
தொடர்ந்த கனவு!
தூங்கும் சிவத்தின்!
சக்தியே கனவு !!
இதனை விட்டொரு!
படும் உயிர் நினைத்து!
இறைவன் தூங்கினான்!
இறைவன் தூங்கினான்!
என்று பித்ற்றுதல்!
எப்படி ஆகும்?!
உடலை நினைத்து!
வாழ்க்கை ஓட்டி!
களித்து மகிழும்!
இவர்கள் பேச்சு!
தத்துவ கங்கையில்!
கொசுவின் முட்டை !!
புலை குணம் கொண்டார்!
இவருக்கு இந்த!
தத்துவம் புரிவது!
கடினம்!
வாழ்க்கை ஒரு கனவு!
வாழ்க்கை ஒரு கனவு!
போதும் விடுங்கள்!
போய்த் தூங்குங்கள்
அரவிந்த் சந்திரா

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in

There are no comments yet.