திங்கள் போற்றுதும் - ருத்ரா

Photo by FLY:D on Unsplash

திங்கள் போற்றுதும்.!!.!
------------------------------------------------!
நிலவின் களங்கத்தை மட்டுமே!
கவிதை பாடுபவர்கள் நாங்கள்.!
நிலவின்!
ஈர்ப்பு எனும் உயிர்ப்பு விஞ்ஞான‌த்தை!
உழுது பார்க்க‌ உய‌ரே கிள‌ம்பிய‌வ‌ர்கள் நீங்க‌ள்.!
ப‌ழுது பார்க்க‌ப்ப‌ட‌வேண்டிய‌!
சிந்த‌னைக‌ள் இங்கே ஏராள‌ம்! ஏராள‌ம்!!
தின‌ம் தின‌ம் இந்த‌ நிலாவை!
காத‌லியின் க‌ன்ன‌மாக‌!
பிய்த்து தின்னும் பிக்காஸோக்க‌ள்!
நாங்க‌ள்.!
நாங்க‌ள் சிலுப்பிக்கொள்ளும்!
த‌லைம‌யிர்க்காடுக‌ள் எல்லாம்!
காத‌ல் எரிகின்ற ஓவிய‌த்தின்!
தூரிகைக்காடுக‌ள்.!
க‌ள்ளூறும் நில‌வில்!
நாங்க‌ள் க‌ண்ட‌தெல்லாம்!
வான‌த்தில் தொங்க‌விட்ட‌!
காத‌ல் எனும் டாஸ்மாக் கடைகள் தான்.!
காதல் காதல் காதல் எனும்!
கூச்சல்களின்!
கூவுதளமாய்கிடந்த நிலவில் ஒரு!
ஏவுத‌ள‌ம் ஆக்க‌வ‌ந்த‌!
ஏற்ற‌மிகு மேதையே!
ஏற்றுக்கொள்வீர்!
எங்க‌ள் இத‌ய‌ம் நெகிழ்ந்த‌ பாராட்டுக‌ளை!!
காதலியின்!
ப‌ரு ப‌ட‌ர்ந்த‌ ப‌ட்டுக்க‌ன்ன‌த்தை!
வ‌ருடுவ‌த‌ற்கு!
நியூட்ட‌னையும் ஐன்ஸ்டீனையும் அல்லவா!
விரல்கள் ஆக்கியிருக்கிறீர்க‌ள் !!
கோட‌ம்பாக்க‌த்து கோமான்க‌ளுக்கு!
அது போதை சொட்டும்!
கோப்பைதான்.!
காத‌லின்!
குத்துப்பாட்டுக‌ளுக்கு!
குத்த‌கை எடுத்திருக்கும்!
எங்க‌ள் நீச்ச‌ல் குள‌மும் அதுவே தான்.!
இந்தியத் தடம் பதிக்கும்!
அந்த மூவர்ணப் ப‌திப்பில்!
ஒரு தமிழனின் மூச்சுக்காற்றும்!
அச்சு கோர்த்திருக்கிற‌து!
என்ற‌ செய்தி!
எங்க‌ளுக்கு ப‌ளீர் என்னும்!
ஒரு மின்ன‌ல்வெட்டு.!
மின்வெட்டு அர‌சிய‌ல்க‌ளையும் மீறி!
எங்க‌ளுக்கு ஒரு ஆன‌ந்தக்க‌ளிப்பு.!
எங்கோ போய்க்கொண்டிருக்கும்!
இள‌ந்த‌மிழின் இளைய‌ யுக‌த்து!
இமைச்சாள‌ர‌ங்க‌ள் திற‌ந்து கொள்ள‌ட்டும்.!
விஞ்ஞான‌ சிற்பியே!
மௌன‌மாய் எப்ப‌டி!
இப்ப‌டி ஒரு சிற்ப‌த்தை!
எங்க‌ள் மீது செதுக்கினாய்?!
காணாம‌ல் போன எங்க‌ள்!
மைல்க‌ற்களை மீண்டும் காட்டிய‌!
ம‌யில்சாமி அண்ணாத்துரை அவ‌ர்க‌ளே!!
அண்ணா சாலையை இப்போது!
அண்ணாந்து தான் பார்க்கிறோம்!
வான‌த்தில்!!
சந்திராயன்....!
சந்து பொந்துகள் கூட‌!
சந்திராயன் என்பதே பேச்சு.!
சாலையோரத்து!
ஆயா சுட்டு விற்கும்!
இட்லியை மட்டுமே!
நினைவுபடுத்தும்!
நிலா என்னும் சந்திரன்!
விண்வெளி விஞ்ஞானத்தை!
விண்டு வைத்து விட்ட‌து இன்று.!
அன்று ஒரு இந்திய‌த்த‌மிழ‌ர்!
ச‌ந்திர‌சேக‌ர்!
ச‌ந்திர‌சேக‌ர் லிமிட் எனும்!
ச‌ந்திர‌சேக‌ர் எல்லையைக்கொண்டு!
இந்த‌ பிர‌ப‌ஞ்ச‌த்தில் ப்ளாக் ஹோல்!
எனும் க‌ருங்குழிக்கே ஆழ‌ம்பார்த்து!
நோப‌ல்ப‌ரிசை வென்று காட்டிய‌வ‌ர்.!
அந்த‌ வ‌ரிசையில்!
உங்க‌ளுக்கும் ஒரு ம‌ணிம‌குட‌ம்!!
இந்த இளம்புயல்களின்!
தூக்கம் இனி கலையும்.!
மேன்மை மிகு அப்துல்கலாம்!
அவர்கள் சொன்ன!
கனவுகள்..இனி காதல் எனும்!
கனத்த பூட்டுகளில் தொங்குகின்ற‌!
பொற்கோட்டைகளை தேடி அலையாது.!
சினிமா கொடுக்கும் இனிமாவில்!
கலக்கல் ஆட்டங்கள் இனி இல்லை.!
நரம்புக்காட்டின் மண்டைக்காடுகளில்!
மியூசிக் இரைச்சல்களின் ஜிகினா மண்டலங்கள்!
இனி இல்லை.!
தூர‌த்து ஆழ்வெளியின்!
குவாஸ‌ர்க‌ளும் ப‌ல்ஸார்க‌ளுமே!
நாங்கள் தேடும் தேவ‌தைக‌ள்.!
பொது சார்புக் கோட்பாட்டில்!
ஐன்ஸ்டீன் விட்டு விட்டுப்போன‌!
லேம்ப்டா சூத்திர‌த்தின் வ‌ழியே!
அந்த‌ ஸ்பேஸ் டைம் எனும்!
கால‌வெளிக்க‌யிற்றின் ம‌றுமுனையை!
க‌ண்டிப்பாய் பிடிப்போம்.!
காத‌லியின் வான‌வில் வ‌ர்ண‌!
சுடிதாருக்குள்!
சுருண்டுகிட‌க்க‌ மாட்டோம் இனி.!
கிடார் ஸ்ட்ரிங்கில்!
கிற‌ங்கிக்கிட‌ந்த‌து போதும் இனி.!
அதிர்விழைக்கோட்பாடு எனும்!
ஸ்ட்ரிங் திய‌ரியின் ஆராய்ச்சிக்குள்ளும்!
அமிழ்ந்து கிட‌ப்போம்.!
காத‌ல் ப‌ற்றி!
புதுக்க‌விதைக‌ள்!
புற்றீச‌ல்க‌ளாய் புற‌ப்ப‌ட்டு வ‌ந்து எங்க‌ளை!
புண்ணாக்கிய‌து எல்லாம் போதும் இனி.!
வாத்சாய‌ன‌ர் சூத்திரங்களுக்கு இனி!
வசப்பட மாட்டோம்.!
இயற்பியல் சூத்திரங்களில்!
விய‌க்க‌வைப்போம்!
இந்த பிரபஞ்சத்தையே அதில்!
இயக்க வைப்போம்.!
அப்போகீ எனும் நெடுந்தூரத்தையும்!
பெரிகீ எனும் குறுந்தூரத்தையும்!
செயற்கைக் கோள் எனும்!
மயிற்பீலி கொண்டு!
தங்க நிலவை தடவிக்கொடுத்து!
தங்கவைத்துவிட்டீர்கள் உங்கள்!
ஆய்வக முற்றத்தில்.!
பிரபஞ்ச ஈர்ப்பு!
பூமியை கொஞ்சம் பிட்டுத்தின்ற!
பசியில் விழுந்தது!
பசிபிக் கடல் பெரும்பள்ளம்.!
விண்டு போன‌தே!
ச‌ந்திர‌ன் என்றால்!
ந‌ம் உயிர்ப்ப‌சை அங்கே!
ஒட்டியிருக்குமே.!
பிர‌ப‌ஞ்ச‌ம் ஒரு பாழ்வ‌ன‌ம் அல்ல‌.!
ம‌னித‌ம் முட்டிய‌ விண்வெளி இது.!
ஆந்த்ரோபிக் யுனிவெர்ஸ் இது!
அத‌னால் உயிர்விதை தேடி!
விண்ணை வேட்டையாடுவோம்.!
அண்ணாத்துரை அவ‌ர்க‌ளே உங்க‌ள்!
அம்புக்கூட்டில் அடுக்கியிருக்கும்!
அறிவுக்க‌ணைக‌ளே எங்க‌ளுக்கு!
நூல‌க‌ம்...இனி சாதி ம‌த‌!
நூலாம்ப‌டைக‌ளை துடைத்தொழிப்போம்.!
ச‌ட்டை செய்ய‌வேண்டாம்!
ச‌ட்ட‌க்க‌ல்லூரிக‌ளை.!
ப‌ட்டாக்க‌த்திக‌ளைக்கொண்டா இந்த‌!
ப‌ட்டாம்ப்பூச்சிக‌ள்!
ப‌ட்ட‌ம் வாங்க‌ வ‌ந்த‌ன‌?!
விஞ்ஞான‌த்த‌மிழ‌னே!!
ர‌த்த‌ம் சொட்டிக்கொண்டிருக்கும் இந்த‌!
அஞ்ஞான‌த்த‌மிழ‌னின்!
புற‌நானூறுக‌ள்!
ப‌ண்பின் க‌திரிய‌க்க‌ம்பெற்ற‌!
அக‌நானூறுக‌ள் ஆவதற்கு!
த‌மிழ்விஞ்ஞான‌த்து!
வேள்வித்தீ!
ஓங்க‌ட்டும்!உய‌ர‌ட்டும்! ந‌ம்!
செம்மொழி புதிதாய் ம‌ல‌ர‌ட்டும்!!
திங்கள் போற்றுதும்! திங்கள் போற்றுதும்!!
திங்களைப் பிடிக்கப்போகும்!
மயில்சாமி அண்ணாத்துரையையும்!
போற்றுதும் போற்றுதும்!
என்று இளங்கோ அடிகளின் அடிகளுக்கு!
உரையாசிரியர்கள் இனி இப்படித்தான் எழுதுவார்கள்!
இந்த‌ புதிய!
அண்ணாத்துரையே எங்க‌ள்!
அண்ணாம‌லைத்தீப‌ம்!!
விஞ்ஞானி அண்ணாத்துரை அவ‌ர்க‌ளே!
நீங்க‌ள் கூட‌ புதிதாய் ஒரு!
தி.மு.க‌ ஆர‌ம்பிதிருக்கிறீர்க‌ளே!!
ஆம் அது தான் உங்க‌ள்!
திங்க‌ள் முற்றுகைக் க‌ழ‌க‌ம்!
அதிலே நாங்க‌ள் இனி!
ஆயுள் கால‌த்தொண்ட‌ர்க‌ள்!!
-ருத்ரா!
-------------------------------------------!
ச‌ந்திராய‌ன் சாத‌னையில் ப‌ங்கேற்று வெற்றிக்கொடி நாட்டியிருக்கும்!
த‌மிழ் விஞ்ஞானி மதிப்புமிகு மயில்சாமி அண்ணாத்துரை அவர்களுக்கு ஒரு பாராட்டு மடல்
ருத்ரா

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in

There are no comments yet.