உலக நாடுகளின் தலைநகரங்களில்!
உரிமையோடு குரல் தந்தோம்!
அரங்கங்கள், சதுக்கங்கள், அனைத்திலும்!
நிறைந்து நின்று நியாயம் கேட்டோம்!
தமிழன் உயிர் வதைபடும் போதெல்லாம்!
ஊமையாய் நீ கிடந்தாய்!
இப்போது மட்டும் நீ ஏன் உளறுகிறாய் ?!
வாயில்லாப் பிராணிகளுக்கு!
இரங்குகின்ற உலகமே !!
நாம் வானதிரக் கத்தினோமே!
காதடைத்துக் கிடந்தாயே !!
இப்போது மட்டும் நீ ஏன் உளறுகிறாய் ?!
புங்குடுதீவு, அல்லைப்பிட்டி, வங்காலை.!
தொடர்ந்த வேளையிலே!
மூச்சடைத்துக் கிடந்தாயே !!
செம்மணி, கைதடி.. என!
தொடர்கிறது புதைகுழிகள்!
மனிதம் பற்றிப் பேசுபவரே நீர்!
ஊமையாய் போனீரோ?!
பச்சிளம் பிஞ்சுகளும், பாலறா வாயர்களும்!
பிச்செறியப்படுகையிலே எமக்காய்!
குரல் காட்ட மறந்தவர் இங்கே!
குருடாகிப் போனீரோ ?!
குருடராய், செவிடராய்!
ஊமையாய், முடமாய் கொஞ்சம்!
இப்படியே இருந்து விடுங்கள்!
ஐம்பத்தெட்டில் விதைத்த வினையின்!
அறுவடை தொடங்கிவிட்டது!
வலியை எமக்குத் தந்தவர்க்கே அது!
பரிசாய் கிடைக்கப்போகிறது!
நாங்கள் துடித்த போதெல்லாம்!
பார்த்திருந்தவர்களே - இன்னும்!
கொஞ்சம் அமைதியாய் இருங்கள்!
அவர்களும் வலியைக் கொஞ்சம்!
உணரட்டும்!
இனி வருவது அறுவடைக் காலம்!
!
- கனடாவிலிருந்து இளவரசன்
இளவரசன்