பயம் வளர்க்கும்.. அது மட்டும்..எப்படி முடியும்?
காவிரிக்கரையோன்
பயம் வளர்க்கும் சுதந்திரம்.. அது மட்டும் வேண்டாம்.. எப்படி முடியும்?!
!
01.!
பயம் வளர்க்கும் சுதந்திரம்!
-----------------------------------!
ஏன் இப்படி குரோதமாய் பேசுகிறீர்கள்!
நாய் வளர்த்த ஒருவர் என்னைப் !
பார்த்து கேட்டுப் பார்க்கிறார்,!
கோப நிழல்கள் என்னைத் தொடர்ந்தது!
உண்மைதான் எத்தனை முறை சொல்லியும்!
அந்த நாய் கட்டப்படாமலேயே அலைகிறது,!
இத்தனை முறையும் என் மனைவியின்!
பயம்தான் என்னைப் பேச வைத்திருக்கிறது!
தெரியுமா உனக்கு என் வீட்டிலும் நாயெனும்!
ஜீவன் வாழ்கிறது,!
பயம் பற்றிய ஒருவரிடம் அதுவும் நாய் !
பயம் பற்றிய ஒருவரிடமிருந்து !
அந்த பயத்தை இம்மி அளவு கூட!
நகர்த்திப் பார்க்க முடியாது,!
தடுப்பூசி போட்டு தட்டில் சாதமும் பாலும்!
வைக்கும் உனக்கு தெரிந்திருக்க நியாயமில்லை!
எப்படி துரத்தி பார்க்கும் மற்றவர்களை!
அந்த ஜீவன் என்று,!
அந்த நாய் கடித்து பார்த்ததில்லை!
என்ற உள்ளத்து உணர்வுகள், பயம்!
பற்றிய ஒருவரிடம் எப்போதும்!
செல்ல மறுக்கும் சித்தாந்தங்கள் தான்,!
கடித்தாலும் ஒன்றும் ஆகாது என்று!
கூட சொல்லத் தயங்குவதில்லை!
உங்கள் சிந்தனைக் கூடங்கள்,!
இத்தனைக்கும் அப்பால் வெளியில் மிரட்டும்!
சுதந்திரம் கொண்டு, சுதந்திரம் !
பறித்த அந்த ஜீவன் கட்டிய இழை!
அறுத்து ஓடிக் கொண்டுதானிருக்கிறது,!
பயத்தினால் அழிக்கப்பட்ட சுதந்திரம்!
சாளரக் கதவிடுக்கில் எட்டிப் பார்க்கிறது,!
பயத்தினால் வளர்ந்த சுதந்திரம்!
கதவுக்கப்பால் நாலு கால் பாய்ச்சலில்!
ஓடி பயமுறுத்துகிறது!!!!
!
02.!
அது மட்டும் வேண்டாம்!
----------------------------------!
காதலை கல்லறையில் புதைத்து!
வைத்து பறந்து போனாய்!
ஒரு புதிய காலையில் என் உலகத்து!
சூரியனை அஸ்த்தமனம் செய்து விட்டு,!
வந்திருந்தது அழைப்பா,!
நம் காதல் பிழை கொண்ட !
படைப்பா?, அச்சில் ஏறாது என்று!
அறிவிக்க வந்தது நம் காதலுக்கு இழப்பா?!
இத்தனை நாட்களாய் உதிக்கும் எண்ணங்களில்!
நாந்தான் முழுதும் தேங்கியிருப்பதாய் !
பகர்ந்து மகிழ்வாய், தேங்கிய எண்ணங்களில்!
கூடவா பாசி பிடிக்கும் நீ வெறுப்பதற்கு,!
தூரத்து நிலவு நம் வாசஸ்தலம் அதில் !
நாம் இருப்போம், நம் சந்ததிகள் இருப்பார்கள்!
உவமை உருவகம் என்ற இலக்கணம் படைத்த !
நாட்கள், இப்படி இலக்கணப் பிழையாய் போகதானா?!
வார்த்தைகள் கூட விரக்தியாய் போய் விட்ட நிலையில்!
உன்னை வாழ்த்த மட்டும் முடியவில்லை என்னால்,!
பின்னொரு நாளில் என் பெயர் தாங்கிய உன் குழந்தை!
மட்டும் வேண்டவே வேண்டாம்,!
அந்த குழந்தைக்கு தெரிதல் வேண்டாம்!
நம் கோழைத்தனம்,!
மறைவில் கிடக்கட்டும் நம் காதல் !
எப்போதாவது தூசு தட்டி சுவாசிக்கிறேன் நான்...!
!
03.!
எப்படி முடியும்?!
----------------------!
சிதறிக்கிடந்த மரத்துண்டு கூட !
மார் தட்டி புல்லாங்குழலைப் பார்த்து!
சொல்கிறது, உன் நாதம் என் தியாகத்தில்!
தான் வெளிவருகிறதென்று,!
காற்றில் மரம் விட்டு போகிற இலைகளும்!
லயித்து சொல்கிறது மரத்திடம், என் !
வீழ்ச்சியும் கூட உன் உயர்ந்தோங்கும்!
வளர்ச்சிக்குத்தானென்று,!
பட்டுப்புழுவும் சட்டென்று சேர்ந்து கொள்கிறது!
பட்டுக்கு நான் தானே அடித்தளம்!
கொடுத்து மிளிரவைக்கிறேனென்று,!
மேகங்கள் மறைந்து போவதால்!
தான் பூமியைக் கூட எட்டிப் பார்க்கிறது!
மழை என்ற பரிமாணம் ஏற்றிருக்கிறேனென்று,!
நான் எப்படி சொல்ல முடியும்!
என் காதல் தோல்வியில் தான் உ(ன்)ங்கள் !
அழைப்பிதழ் அச்சேறியிருக்கிறதென்று