தமிழ் கவிதைகள்

தமிழ் கவிதைகள்

ஆற்றாமைச் சீற்றப்பா ஐந்து

தமிழ்நம்பி
ஓருயிர்க்கே வஞ்சமென ஓரினத்தைக் கொன்றழித்தார் !!
நேரதற்கு நீதுணையாய் நின்றாய் ! – பூரியனே !!
சீருறையும் செந்தமிழர் செப்பும் தலைவனென!
பேருனக்கேன் சீச்சீ பிழை !!
எல்லா நிலையிலும் ஈழத் தமிழரின்!
பொல்லா நிலைக்குப் பொறுப்பு நீ ! – நல்லார்!
உமிழ்கிறார்! தூ!தூ! உனக்குப் பதவி!
அமிழா திருக்கும் அமர்.!
ஆய்தங் கொடுத்தாய் ! அரிய உளவுரைத்தாய் !!
போய்நின்று போரும் புரிந்திட்டாய் ! – ஏய்த்திடுவாய் !!
சீச்சீ! சிறுமையாய் ! சிங்களர்க்கும் கீழானாய் !!
தீச்செயலில் தில்லி திளைத்து.!
கட்டபொம்மை ஆங்கிலர்க்குக் காட்டிக் கொடுத்திட்ட!
எட்டப்பன் போலானார் எம்முதல்வர் ! – திட்டமுடன்!
சிங்களர் ஈழத்தில் செந்தமிழர் கொன்றழிக்கப்!
பங்கேற்றார் தில்லியுடன் பார் !!
ஏடுமழும் ஈழத்தே எந்தமிழர் துன்பெழுதில்!
வீடுநா டெல்லாம்போய் வெந்துயரில் ! – ஈடு!
சொலவுலகில் யார்க்கின்னல் சூழ்ந்ததிதைப் போன்றே!
உலகிலறம் ஓயந்ததென ஓது

மகுடங்களுக்கு ஆறறிவு

முஹம்மட் மஜிஸ்
நிசப்த்ம் கக்கிய!
இரவுப்பொழுதொன்றில்!
அவனை சந்திக்க நேரிட்டது!
தோல்விகளால் நிரப்பிய இதயத்தோடு!
அவனால் பேசிய வார்த்தைகளை!
நிஜங்களால் முடியாவிட்டாலும்!
கனவுகளால் சிகரம் தொடும்!
என்னால் புரிந்து கொள்வது!
கஸ்டமாகவே இருந்தது !
அவன்!
அத்தி பூப்பதை அவர்களின்!
வரவோடு ஒப்பிட்டான்!
நான்!
புதுமையாக ஏதாவது சொல்லென்றேன்!
அவன்!
அன்று அவர்கள்!
எமக்கு மலர்களை!
மட்டும் காட்டி விட்டு!
எம்மை வேறோடு பிடுங்கிச்சென்ற!
பழய கதையை ஞாபகமூட்டினான்!
நான்!
கடந்தவை திரும்பாதென்று!
அறிவுரை சொன்னேன்!
அவன்!
நாம் அன்று!
சிறகுகள் வாங்க கால்!
நடையாய் போன!
கதையை வெட்கத்தோடு!
விபரித்தான்!
நான்!
அனுபவமெல்லாம் ஒரு பாடமென்று!
போதனை செய்தேன் !
இறுதியில்!
அவன் தன்னுள்ளத்தில்!
நெடு நாள் மறைத்து!
வைத்திருந்த ஒரு காதலை!
சொல்வதப்போல அச் செய்தியை!
சொன்னான்!
அவனுக்கும் அழைப்பு!
வந்திருக்கிறதாம் நாளை!
கொழும்பிலிருந்து தலைவரின்!
போஸ்டர்!
வருகிறதாம்

ஏமாற்றம்.. வருத்தம்

ப.குணசுந்தரி தர்மலிங்கம்
01.!
ஏமாற்றம்!
----------------!
சமாதானமாகாத உறவுக்குள்!
நினைவுகளைப் பதியவைப்பதில்!
அர்த்தமில்லை!
அவசியமுமில்லை.!
கண்ணிலிருந்து கரிக்கும் நீரை!
துடைத்தெறிகிறேன்.!
வலிக்கும்!
முதுகுத் தண்டின்!
சில்லிட்டப்பகுதியில்!
எண்ணெய் தேத்தது போல்!
இருக்கிறது.!
எனக்குள் தோன்றும் எவையும்!
புருவ முடிச்சுகளுள்!
ரணத்தை ஏற்படுத்துகின்றன.!
நேந்து போன!
உறுப்புகள் இழந்ததை!
சுவாசம் அழுக்காக்கியுள்ளது.!
தேய்மானங்களின் எச்சங்களை!
பெருமூச்சு நிராகரிக்கிறது.!
உங்களை!
என்னைப் போலவே வெறுக்கிறேன்.!
!
02.!
வருத்தம்!
-----------------!
உன் வார்த்தைகளில்!
என் வாழ்க்கை!
புதைக்கப்பட்டிருப்பதாக நினைப்பு.!
வடிவும் பொருளும் மாறுவதற்குள்!
எத்தனை முகங்களைப் !
பார்க்க வேண்டுமோ.!
மேகங்களின்!
வெள்ளாடையினால்!
நிலங்கள் வண்ணம் பூசிக்கொள்வது!
வழக்கமாகிவிட்டது.!
நீ!
வெள்ளை மேகங்களில்!
நீரைச் சேமிக்க!
பொருள் குவித்துக் கொண்டிருக்கிறாய்.!
என் நன்னிலத்தைப் !
பத்திரப்படுத்தியுள்ளேன்!
மழைத்துளிகள் விழாதவாறு

காதல் வியாபரயடி நீ

இரா சனத், கம்பளை
காதல் கொள்ளை!
நிரபராதியான எனக்கு!
காதல் என்ற சட்டம்!
மரண தண்டனை விதித்து!
அன்பை கொன்றுவிட்டது!
நிரோகியான என்னை!
காதல் என்ற வைரஸ்!
மரணப் படுக்கையில்!
சடலமாய் இருத்தியது!
என்னையும் அழித்து!
குடும்பத்தையும் ஒழித்து!
மரண ஓலமிட வைத்தது!
மங்கையவளின் காதல்!
உன் இதயத்தில் குடியேறி!
காதலை நிலைநாட்டிய!
என் தூய அன்பை!
ஏனடி தூக்கி எறிந்தாய்?!
பணத்துக்கு மயங்கி!
காதலனை மாற்றும்!
காதல் வியாபரயடி நீ

தொடுவானம்

மாவை.நா.கஜேந்திரா
அன்பே அணைக்கும்போ!
என் உயிராய் நீ!
உருவம் தெரியா என்னில்!
உயிரோடு உயிரானாய்!
நெடுவானம் நீ வந்தால்!
தொடுவானம் ஆகிடுமே!
உருவங்கள் இரண்டு!
இதயங்கள் இரண்டு!
நானும் நீயும் எப்படி!
ஒன்றானோம்.!
அதுதான்!
உன்மைக் காதல்.!
அதை இன்று!
நீமட்டும் எப்படி மறந்தாய்?

படைப்பு.. வெறுங்கை

கார்த்தி.என்
01.!
வெறுங்கை!
-----------------!
எழுதி அழு!
அழுது எழு!
எதாவது செய்!!
உள்ளங்கையில்!
ஒன்றுமில்லாதது!
உன்னோடு எனக்கும்!
மட்டுமேனும்!
தெரிந்ததாய்ப் போகட்டும்..!
திரும்பிய கவிதைகளைத்!
திருத்தாது!
தினம் இரவல் தரும்!
புத்தகத்திற்குள் பத்திரமாய் வை!
உன் முறையில்!
ஒருமுறையேனும்!
அவர்கள் காட்டியதையே!
சற்று உயர்த்திக் காட்டியிரு..!
ஆள் காட்டியவர்களுக்கு!
அதற்கடுத்த விரல்!
காட்டியவர்களுக்கும்!
அப்படியே!!
2.!
படைப்பு!
---------------!
சட்டைப்பையுள் மழை.. நேற்றிரவு பெய்தொழிந்த!
மழையானது!
சன்னல் கம்பிகளின்!
நீள அகலம் பொருந்தப்!
பளிச்செனப்!
பதிந்திருந்ததென் செல்பேசிக்குள்..!
தரை தொடும் முன்பான!
அந்தரத் துளிகளைத்!
திரையில் வெகுநேரம்!
பார்த்திருந்து மீண்டு!
சலனமின்றிச் சொன்னது குழந்தை!
நேற்றே நனைந்துவிட்டதாய்..!
அவ்விரவில் எழுதிய!
கவிதையொன்று..!
சட்டைப்பையுள்!
நான்காய் மடிக்கப்பட்ட காகிதத்தில்!
செத்துப் போயிருந்தது!
இந்நேரத்தில்

போய் வா தோழி

பாஷா
பாஷா - !
என்னுள் நீ !
உடைந்து நொறுங்கிய தருணத்தில் !
உனக்கான என் உணர்வுகள் !
கற்பிழந்துவிட்டிருந்தது !
என் தன்மானத்தில் தலையிலெறி !
குத்தி கிழித்து குதறி !
கோரதாண்டவமாடியிருந்தாய் !
உனக்காய் செலவழிந்த நொடிகள் !
கழிவுப் பொருள்களாய் !
காற்றில் இரையப்பட்டிருந்தது !
நீ விட்டுப்போன இதயத்தின் !
வெறுமை பக்கங்களில் !
வெறுப்பு வந்தடைத்திருக்க !
இறந்துபோயிருந்தேன்

ஆடலி

வெளிவாசல்பாலன்
கொடிகொடிகொடி!
கொடியிடையாளே...!
உன் நடனத்தில் !
காற்றாகிறது உடல்!
கலையாகிறது பிரபஞ்சம்!
தாளமும் ஜதியும் சேர்ந்தெழ!
சுழல்கிறாய் நீ!
சுழலும் பூமியையும் விட !
வேகமாயச் சுழலும் !
உன்னைச் சுற்றும்!
துணைக்கோளாய்...நான்...!
கனவின் மயக்கங்களில் !
தொலையும் பொழுதில் !
பெருகும் சந்தோச நதியின் பிரவாகத்தில்!
காற்றாகிறது உடல்!
கனலாகிறது மனம்!
எது நிஜம் !
எது கனவு!
என்றறியாத்தவிப்பு !
இருளுமின்றி ஒளியுமின்றி!
அந்த வெளியில் கலைந்திருந்தது.!
ஏதென்றறியா அக்கணப்பொழுதில்!
எதையும் உணர முடியா நிலைமீது!
அனலாகக் கொதிக்கும் மனதோடு!
காத்திருந்தேன் !
வெளியேறவும் முடியாமல்!
விடை பெறவும் முடியாமல்...!
அந்த நாளைப்பரிசாக எடுத்து வந்தேன்.!
!
-வெளிவாசல்பாலன்

அவகாசத்திற்குப் பிறகான படைநடவடிக்கை

தீபச்செல்வன்
ஆள்களற்ற நகரத்திலிருந்த!
ஒரே ஒரு தொலைபேசியில்!
இலக்கங்களை அழுத்தி களைத்திருக்கிறாய்!
கூரை கழற்றப்பட்ட!
மண்சுவரிலிருந்த!
நாட்காட்டியும் கடிகாரமும்!
புதைந்து கிடக்கிறது.!
பூவரச மரத்தின் கீழ்!
உனது கடைசி நம்பிக்கை!
தீர்ந்து கொண்டிருக்கிறது.!
எடுத்துச் செல்லமுடியாத பொருட்களிலும்!
கைவிடப்பட்ட படலைகளிலும்!
மீண்டும் வரும் நாட்களை கணக்கிடுகிறாய்.!
உனது துயர்மிகுந்த ஒரு வார்த்தையேனும்!
கேட்க முடியவில்லை!
ஐநாவில் ஜனாதிபதியின் தமிழ் உரையில்!
உனது மொழி!
நசிபட்டுக்கொண்டிருந்தது!
அழுகையின் பல ஒலிகளும்!
அலைச்சலின் பல நடைபாதைகளும்!
சிரிப்பாக மொழிபெயர்க்கப்பட!
தலைகள் அசைந்து கொண்டிருந்தன.!
கைவிட்டுச்சென்ற!
கோழியும் குஞ்சுகளும் இறந்துகிடக்க!
வெறும் தடிகளில்!
தலைகீழாய் தூங்கும் வெளவால்கள்!
அழுதபடியிருந்தன.!
நேற்றோடு எல்லோரும்!
நகரத்தைவிட்டு வெளியேறிவிட்டனர்.!
ஐநாவின் உணவு வண்டியை!
துரத்திச் சென்ற சிறுவனின் பசி!
ஓமந்தை சோதனைச்சாவடியில்!
தடுத்து வைக்கப்படுகையில!
குண்டைபதுக்கிய அமெரிக்கன்மாப்பையில்!
உனது தீராத பசி எழுதப்பட்டிருக்கிறது.!
வானம் உன்னை ஏமாற்றிட்டதுபோல!
பார்த்துக்கொண்டிருக்கிறாய்!
இன்று நள்ளிரவோடு!
வாழ்வதற்கான அவகாசம் முடிந்துவிட்டதாய்!
அறிவிக்கப்படுகையில்!
மீண்டும் தொடரப்படும் படைநடவடிக்கைக்கு!
நாள் குறிக்கப்பட்டிருக்கிறது.!

வரிசையில் நிற்கிறார்கள்.. செஞ்சோலை

வித்யாசாகர்
வரிசையில் நிற்கிறார்கள் வாழ்வை தொலைக்கிறார்கள்!.. செஞ்சோலை மறக்கும் வரை ஓயாதீர் உறவுகளே!!!
!
01.!
வரிசையில் நிற்கிறார்கள்; வாழ்வை தொலைக்கிறார்கள்!!
--------------------------------------------------------------------------------!
'விடையிராதா!
நீண்ட கேள்விகளால்!
நிறைகிறது -!
எதற்கெதற்காகவோ காத்திருக்கிற மனசு..!
'நீண்ட பாலை நிலங்களில்!
காய்ந்த புற்களை போல்!
தொலைத்திட்ட ஆசைகள்!
மரணத்தை மட்டும் மிச்சம் வைத்துக் கொண்டு!
எல்லாவற்றிற்குமாகவும்; காத்திருக்கவே செய்கிறது..!
'வருடத்தில் பூக்கும்!
வளைகுடாவின் பசுமையை போலன்றியும்!
வருடங்களிரண்டில் பார்த்து வந்த குடும்பத்து முகங்கள்!
தூரத்தின் இடைவெளியில் -!
சிக்கிக் கொண்ட பாரங்களாகவே கனக்கின்றன..!
'எரிக்கும் வெயில்; வலிக்கும் குளிர்!
கண் அடைக்கும் மனற் காற்று!
எல்லாம் கடந்தும் -!
உறவுகளின் நினைவுகளில் வலிக்கும்; வலி!
தீர வதையன்றி வேறில்லை..!
'சான்றிதழ் தூக்கிக் கொண்டு ஏறி இறங்கிய படிகள்,!
வெளிநாட்டில் வேலை கிடைத்துவிட்டதென வெடித்துச் சிரித்த சிரிப்பு,!
விமானத்திலிருந்து இறங்கிய பின் வாங்கிய முதல் சம்பளம்,!
இவை எல்லாவற்றையும் ஈடுகட்ட!
கண்ணீர்தான்!
கண்ணீர்தான் மிச்சமாகுமென!
அன்று தெரியவில்லை -!
முடிகொட்டி!
வாழ்க்கை மொட்டையாகி!
கிழவனென்று பட்டம் சுமந்து ஊர்செல்கையில்!
மிக நன்றாகவே தெரிகிறது;!
'தெரிந்து மட்டுமென்ன செய்ய!
அதோ எனை சுமந்து வந்த விமானம் திரும்பி செல்கையில்!
இங்கிருந்து நிறைய பேரை -!
ஏற்றிக் கொண்டு தான் செல்கிறது; அதே வதை நோக்கி!!!
02.!
செஞ்சோலை மறக்கும் வரை; ஓயாதீர் உறவுகளே!!!
--------------------------------------------------------------------------!
செஞ்சோலை தெருவெல்லாம்!
புத்தகப்பையும் பிணமும் கனக்கிறதே;!
தமிழ் படித்த சிறுமியின் குரல்!
சப்தம் தொலைத்து கிடக்கிறதே;!
பூத்துக்குலுங்கிய பிள்ளைகளெல்லாம்!
மரண வாசலில் வீழ்ந்து துடிக்கிறதே;!
மறக்க இயலா மரணச் சூட்டின் -!
மண்டியிடவைத்து அவன் சுட்ட வெடி சப்தத்தின் -!
சற்றும் மனிதம்பாரா எம் குலமழித்த வெறியில் -!
முளைத்தெழு உறவுகளே;!
அடிப்பவனை மன்னிக்கலாம்!
அவனே திருப்பி அடிபானெனில் - திருப்பி அடித்தவனை!
திருப்பி அடிக்கும் வரை!
அவன் வருந்தி திருந்தும் வரை மன்னிக்காதே!
மடையுடைத்த வெள்ளமென பொங்கியெழு உறவுகளே;!
செத்தவன் செத்தவளெல்லாம் வெறும்!
சுப்பனும் குப்பனுமல்ல;!
எம் விடுதலையை 'உயிர்விடும் வரை காத்த வீரர்கள் -!
அவர் உறைந்த மண்ணில் மீண்டும்!
புடைசூழ் படையென திரண்டு நில் உறவுகளே;!
தோளிலிட்ட மாலை வாடும் சூட்டிற்குமுன்!
தாலி பறித்தவன் சிங்களவன் -!
அவன் பொட்டில் அரைந்து சொல் - எம்!
விடுதலை எத்தனை வலிதென்று; எம்!
சுதந்திர தேசம் எம் லட்சியமென்று!!
இணைந்து வாழும் வேடம் பூண்டு!
இரந்து நிற்கும் கயவனின் கூட்டம்,!
தூக்கிக் காட்டிய வெள்ளை கொடியை!
தட்டிவிட்டு; சுட்ட அதர்ம வர்க்கம்,!
இரண்டாம் தர இடம் தந்தே எமை!
மரணம் வரை மண்டியிட செயும் மதப்பை!
ஆணவத்தை -!
தகர்த்தெறிய புறப்படு உறவுகளே;!
உயிர் பறிக்கும் கழுகுகளுக்கு!
குழந்தையின் கண்ணீரெப்படி புரியும்?!
உயிர் பறித்து!
ஆடை களைந்து!
நிர்வாணம் ரசித்து!
பிணத்தை புணரும் ஜாதிக்கு; புனிதம் எப்படி புரியும்?!
உயிர்துடிப்பின் சப்தம் அடங்கும் முன்!
உறவுகளை சுட்டெறிந்த வஞ்சகனுக்கு - நாம்!
வாழ்ந்து படைத்த சரித்திரம் மண்ணெனப் பட்டதோ???!
மாண்டவரெல்லாம் ஆண்டவரென்பதை!
கத்தி கதறி ஓலமிட்டு மரணம் நெருங்கிய!
ஒவ்வொரு பிஞ்சுகளின் அழுகையும் -!
காற்றில் ஒலியில் காலத்தின் தலையெழுத்தினில்!
எழுதிவிட்டே தன் இறுதி மூச்சினை நிறுத்தியிருக்குமென!
வெகு விரைவில் பறக்கும் புலிக்கொடி!
எதிரியின் செவிட்டில் அரைந்து சொல்லும்!!
அன்று அடங்கும்!
எம் வீரர்களின் -!
அந்த செஞ்சோலை பிஞ்சுகளின் ஆத்மாக்கள்!!
அதுவரை ஓயாதீர் உறவுகளே