தமிழ் கவிதைகள்

தமிழ் கவிதைகள்

பட்டாம்பூச்சியின் சிறகடிப்பு

செயவேலு வெங்கடேசன்
மீமாம்ச வேதமாய் !
------------------------------------------------!
“மீமாம்ச” வேதம் நம் தாய் மொழியில்... !
யாரும் அறியாமல், நெடுங்கால அமைதியுடன்,..!
கீதையின் அத்வைத தத்துவத்தில் கரைந்து!
மீமாம்சமாய் என்ற பெயரில். !
இவை அனைத்தும் அந்நிய மொழி ஆங்கிலத்தில் !
ஆர்பாட்டத்துடன்...அனைத்தும் அறிந்ததாய்!.. !
நம் அறியாமையின்? ஊடே!!
உதாரனமாய்,.!
“பட்டாம்பூச்சியின் சிறகடிப்பு”!
திரைபடத்தில் அயல்மொழியுடன்,...!
“மீமாம்சம்” பகிரும்- !
காரியம் தொடர்ந்த காரணத்தின்,!
காரணம் தொடர்ந்த காரியத்தின்,!
அணுவின் சங்கிலி தொடர் நிகழ்வின் நிழலாய்.!
அனைத்தும் மறந்து.!
அயல் மொழியின் அதீத பற்றுடன்,!
“காலத்தின் சுருக்க வரலாற்றில்”-!
ஒளி வேக பயணம்!
வயது இன்மையாய்,!
கடவுளும் கடவுளின் வாகனம் பற்றிய!
தாய் மொழி வாய் வழி கதைகளை !
மறந்து!!
அனுவின் விளையாட்டு !
அயல்மொழி அறிவியலுடன்!
ஐரோபிய நியுகிலியார் ஆராய்ச்சி நிறுவனத்தின் வாயிலாய்!
அறியும் முயற்சியில், !
“அத்இ த்இ வைதமாய்” கீதையில் உள்ளதை,!
அறியாமை என்று மறுதலித்து.!
!
அனைவரின் கூற்றும் ஆராய,!
வயசும் இன்றி அனுபவமும் இன்றி,!
படித்தவை தொக்கி நிற்க !
கேள்வியாய்?...!
இவை அனைத்தும் ஆறரிவு பரிணாமத்தின்!
தானமாய்.!
அறிவியல் கூற்றாய் !
எதிர்காலத்தில் ஏழறிவு பரிணாமம்!
இயலுமெனில்,!
நிகழ்கால அறிதல் கூட, !
எதிர்மறையாகலாம்!.!
ஏழறிவின் பரிணாமத்தால்……….!
எனில்,!
நிகழ்கால வாழ்வின் !
அறிவியல்.!
அறிவு இயல்!
தத்துவம் !
நீங்குதல் இனிதே!...!
!
-க.செ.வெங்கடேசன்!
அபுதாபி

பிரசவம்

நளாயினி
உயிரை சாவின் எல்லைக்கு !
எடுத்தச்செல்லும் !
அந்த வயிற்று வலியில் !
எமக்கு என்ன தெரியும் !
வைத்தியர் சொல்வதையே !
கிரகிக்க முடியாத நிலைமை. !
நா வரண்டு போகும் !
தொண்டை கட்டும். !
மசில்சுகள் வலி எடுக்கும். !
யாரோ களுத்தை பிடித்தே !
அமுக்கும் நிலையாக இருக்கும். !
கட்டிலால் எழும்பி !
ஓட முயல தோன்றும். !
மலம் கழிக்க வேண்டும !
என்ற உணர்வு தோன்றும். !
வார்த்தைப்பகிர்தலுக்கே !
அங்கு இடமில்லை. !
ஏலுமானால் கைப்பாசை !
சில சமயம் ஒத்துழைக்கும். !
மூச்சே வர மறுக்கும் !
ஒரு சின்ன வினாடிக்குள் !
மூச்சு மீண்டும் வரும் !
ஆனாலும் கழைத்த கழைப்பில் !
மூச்சு மீண்டும் அறுந்தே போகும் !
மீண்டும் சில அறுபட்ட வினாடித் !
துளியில் தம்மடக்கி !
மூச்செடுக்க முயல்வோம். !
முடியவே முடியாது. !
அருகில் நிக்கும !
கணவரை எட்டிப்பிடித்தால் !
சில சமயம் மூச்சு வந்து விடுமோ !
என மனசு சொல்ல தம்மடக்கி !
கை எட்டிப்போகும் !
மீண்டும் சோர்ந்து விடும் கைகள். !
மீண்டும் கைப்பாசை கை தாவும் !
தண்ணி என பெருவில் !
கொண்டு வாயருகில் போகுமுன் !
மூர்ச்சையாகும் தருணம் !
மீண்டும் வந்துவிடும். !
கைப்பாசையும் மூர்சையாகும் !
மயக்கம் வந்து வந்து போகும் !
இறுதிக்கட்டத்தில் !
முற்றுமுழுதாக மூர்ச்சையாகி விடுவோம். !
உயிர் இருக்கும் உணர்வு இருக்கும் !
அப்பப்போ வயிறு இறுகி இறுகி !
உடல் பின்பக்கமாக வழையும். !
கண் சொருகும். !
அப்பப்போ விழித்துப் !
பாக்க தோன்றும். !
ஆனாலும் முடிவதில்லை. !
கத்த முடிவதில்லை !
அசைய முடிவதில்லை. !
உடலோ சோர்ந்து !
துவண்டு !
அதை எடுத்துரைக்க !
வார்த்தை கள் !
என்னிடம் இல்லை. !
குழந்தை வருவதை !
கருவிகள் காட்ட !
அவசரம் அவசரம் !
எல்லோரிலும் அவசரம் !
இறுதியாக சேர்த்து வைத்திருந்த !
மிச்ச ¬தைரியத்தையும !
பிய்ந்த உயிரையும் !
ஒண்டாய் திரட்டி !
வில்லாய் வழைய !
குழந்தை மெதுமெதுவாக !
தாதி கை தாவும். !
குழந்தை அழும் சத்தம் !
மட்டும் எம் செவி வழி பாயும்

துர்க்காவின் கவிதை

துர்க்கா (கனடா)
வெளுப்புகள் இல்லாமல் எங்குமே கருமை !
நெருக்கங்கள் அற்று சிதறிக் கிடந்தன !
வெள்ளித் தகடுகள் !
அசைவுகள் அற்றுக் கிடந்த மேகங்களுக்குள் !
விழித்துக் கொண்டிருந்தது நிலவு !
நினைவுகள் எதுவுமின்றி !
இயல்புகள் மறந்து !
எல்லாமே !
ஆசைகள் !
ஆவேசங்கள் !
எதிர்பார்ப்புகள் !
ஏமாற்றங்கள் எதுவுமின்றி !
மனமும் !
தனிமையின் கதறல்களையும் !
காதலின் கண்ணீரையும் !
தேக்கி இறுகியிருந்த மேகங்களின் நடுவே !
பூமியை நோக்கி !
விழுந்து கொண்டிருந்தது !
ஒற்றைச் சிறகொடிந்த குருவி ஒன்று- !
அவன் காதல் சொல்லிக் கொண்டிருந்தான் !
இன்னொரு இதயத்திடம் !
-துர்க்கா (கனடா) !
நன்றி: உயிர்நிழல்

அவன் கெட்டிக்காரன்

ஹம்ஸாக் அமீன்
சந்தோசமும் இல்லை!
நின்மதியும் இல்லை - ஆனாலும்!
வாழத் தெரிந்தவன் ...!
தனிமை. அமைதி - அவன்!
கூட இருக்கும் - ஆனால்!
தன்னம்பிக்கை உறங்கவிடுவதில்லை ...!
இறந்தகால நிகழ்வுகள் வாழ்வை!
மகிழ்விக்கிறது - அத்தனை!
ராத்திரி இருள்களும்!
படம் காட்டுகின்றது!
இறந்த காலத்தை ...!
இதயம் நடிக்கின்றது!
இரவுகளில்!
துணையாய் வரும்!
கனவுகள் - அவன்!
உள்ளத்தை தேற்றுகிறது...!
அன்புக்கு!
உரிமையான - அவன்!
உறவுகளை நினைக்கின்றான்...!
கனவுகளும்!
எண்ணங்களும் - அவன்!
கற்பனைகளை வளர்க்கின்றது...!
தூக்கி எறியப்பட்ட - அவன்!
தன்னப்பிக்கையுடன்!
நடக்கின்றான்...!
அவன் காதுகள்!
எண்ணங்களை!
மட்டுமே செவிமடுக்கின்றன...!
அவன் தூங்குகின்றான்!
அவன் கெட்டிக்காரன்

தூத்துக்குடியில் பூத்த முத்துக்குமரன்

வசீகரன்
தொப்புள் கொடியில்!
உயிர்க் கொடி!
ஏற்றிய தோழா!
ஈழத் தமிழர்களின் முத்துக்குமரா!!
இணையத்திலே உன் அழகிய!
முகம் பார்த்தோம்!
இதயத்திலே கருகிப் போனது!
எங்கள் மனம்!!
எவ்வளவு இளகிய!
மனம் கொண்டவன் நீ!
எங்களுக்காய்...!
ஏன் கருகிப் போனாய்?!
தூத்துக்குடியில்!
முத்துக் குளித்தவன் நீ!
சாஸ்திரி பவனில்!
ஏனையா தீக்குளித்தாய்?!
குடம் குடமாய்!
நாங்கள் அழுது வடித்த!
எங்கள் கண்ணீரில்!
உன் முகமே பூக்கிறது!!
எம் தமிழ்மீது!
நீ கொண்ட பற்றுக்கு!
எல்லையே இல்லை என்பதை!
இப்படியா உணர்த்துவது!!
தமிழினத் தலைவர்கள்!
என்று சொல்லத் துடிக்கும்!
எங்கள் தலைவர்களின்!
நாக்கை அறுத்தாய் நீ!!
கையாலாகாத பரம்பரை!
என நினைத்தாயோ!
பூவாய் இருந்தவன் நீ!
புயலாய் ஏன் வெடித்தாய்?!
முப்பது ஆண்டுகள்!
நாம் சுமந்த வலிகள்!
போதாத ஐயா!
ஏனையா எரிந்து போனாய்?!
பெரு வலியோடு!
உனைப் பெற்ற தாயை!
எந்த முகத்தோடு போய்!
நாங்கள் இனிப் பார்ப்போம்!
எட்டாத தூரத்தில்!
வாழ்ந்தாலும்!
வாகை மரம் போல!
வாடிப் போய் நிற்கிறோம்!
மண்ணெணையை!
உன் மீது ஊற்றி!
தமிழ்மண்ணைக் காக்க!
ஏனையா உனைக் கொடுத்தாய்?!
தமிழீழம் வாழவே!
எங்களை வாழ்த்தி!
உன் வாழ்வை!
ஏனையா நீ அழித்தாய்?!
மரணத்திடம் மண்டியிடாமல்!
மண் எங்கும் ஓடுகிறோம்!
மரணத்தை தேடி நீ!
ஏனையா ஓடினாய்?!
தமிழீழ வரலாற்றில்!
முத்தான உன் பெயர்!
இனி எழுத்தாணிகளின்!
முதல் வரியாகட்டும்!!
உன் தியாகத்தின் முன்!
நாங்கள் வெறும் சருகுகளே!!
தமிழகத்தின் தாய்மடியில்!
கண்ணீர் அஞ்சலி செய்கிறோம்!!
-வசீகரன்!
நோர்வே!
29.01.09

யார் கவிஞன் ?

முடியரசன்
காசுக்குப் பாடுபவன் கவிஞன் அல்லன் !
கைம்மாறு விழைந்து புகழ் பெறுதல் வேண்டி !
மாசற்ற கொள்கைக்கு மாறாய் நெஞ்சை !
மறைத்துவிட்டுப் பாடுபவன் கவிஞன் அல்லன் !
தேசத்தைத் தன்னினத்தைத் தாழ்த்திவிட்டுத் !
தேட்டையிடம் பாடுபவன் கவிஞன் அல்லன் !
மீசைக்கும் கூழுக்கும் ஆசைப்பட்டு !
மேல்விழுந்து பாடுபவன் கவிஞன் அல்லன் !
ஆட்சிக்கும் அஞ்சாமல், யாவரேனும் !
ஆள்க எனத் துஞ்சாமல், தனது நாட்டின் !
மீட்சிக்குப் பாடுபவன் கவிஞன் ஆவான் !
மேலோங்கு கொடுமைகளைக் காணும்போது !
காட்சிக்குப் புலியாகிக் கொடுமை மாளக் !
கவிதைகளைப் பாய்ச்சுபவன் கவிஞன் ஆவான் !
தாழ்ச்சிசொல்லும் அடிமையலன் மக்கட்கெல்லாம் !
தலைவனெனப் பாடுபவன் கவிஞன், வீரன் !
!
நன்றி : நந்தன்

மீண்டும் போருக்கான அறைகூவல்

நடராஜா முரளிதரன், கனடா
நான் கேளிக்கைகளில்!
திளைக்கின்றேன்!
ஆனாலும் அவர்களைப்!
போரிடுமாறு அழைக்கின்றேன்!
ஏனெனில் அவர்கள்!
அடக்குமுறைக்கு உள்ளாவதால்!
எனது பங்குகளை உரியமுறையில்!
செலுத்துவதாகவும்!
கதை சொல்லுகின்றேன்!
ஆனால் அவர்கள்!
கரங்கள் துண்டிக்கப்பட்டு!
கால்கள் தறிக்கப்பட்டு!
குதத்தால் உண்டு!
வாயால் கழிவுப்பொருட்களை!
வெளியேற்றிக் கொண்டிருக்கின்றார்கள்!
பத்திரமாக எனது பிள்ளைகள்!
பல்கலைக்கழகப் பட்டமளிப்பு விழாவில்!
மகுடங்களைச் சூடிக் கொள்கின்றார்கள்!
வாழாத நாடொன்றின் தலைவிதியைத்!
தீர்மானித்தற்காய்!
மக்களே திரண்டெழுங்கள்!
என்ற கோசத்தை!
அடிக்கடி முழங்குகின்றேன்!
அதன் தொடர்ச்சியாய்!
இப்போது நான்!
மாலைநேர மேடையொன்றிலே!
எழுச்சி உரையொன்றை ஆற்றுதற்காய்!
என்னைத் தயார்படுத்திக் கொண்டிருக்கின்றேன்

வழியனுப்புதல்

றஹீமா-கல்முனை
அட்மிஷன்வந்தாச்சா??!
என்பதிலிருந்து துவங்கும்!
பரீட்சை பற்றிய!
வாப்பாவின்!
விசாரணை.....!!!!
தொலைக்காட்சியிலும்!
பத்திரிகையிலுமாய்.....!
வீணே!
உழன்று திரிகையில்....!
எதையாச்சும் படியேன்!!!
என்கிற!
கண்டிப்புகளில்!
ஆயிரம் ஆயிரம்!
அக்கறையிருக்கும்!!!
பேனா,பென்சில்!
ஆளடையாள அட்டை!
அட்மிசன்!
வரைக்குமாய்!
அத்தனையும் எடுக்கச்சொல்லி!
எந்நேரமும் எச்சரித்து....!
சிலநேரம் எரிச்சல் ஊட்டி...!
நேரத்தோடு தூங்கி!
நேரத்துக்கு எழச்சொல்லி!
பரீட்சைக்கு முதல் நாளே!
கண்டிப்பாய் உத்தரவிட்டு!
எதற்கும்!
ஒன்றுக்கு இரண்டு!
பேனாவை எடுத்துவை -என!
எச்சரித்தபிறகும்!
பரீட்சைக்கான!
அவசரத்துக்கு நடுவில்!
காலையில் எழுந்துதான்!
எழுந்துதான்!
பேனா வேணும் என்பேன்!!!!
கடிந்து....!
அவசரமாய்!
கடைக்கு விரைந்து....!
பேனா வாங்கி!
எழுதிப்பார்த்து....!
இடைவெளியில்!
கொண்டு சேர்த்து...!
வழியனுப்பிவிட.....!
இன்றைக்கு வாப்பா.........!
இல்லை!!!!!!!
உங்கள்!
வழியனுப்புதல் இல்லாத!
எனது முதல் பரீட்சை!!
எனக்கான!
எல்லாபரீட்சைகளும்!
இனி இப்படியேதான்!
தொடரப்போகிறது!
வாப்பா!!!!!
பல்கலைக்கழக!
இறுதிப்பரீட்சைக்கு!
வழியனுப்ப...!
இறுதியாய் பஸ் ஹோல்ட் வரை!
வந்தது..!
இப்போதும்!
நினைவில் உண்டு...!!!!
வேடிக்கையை பாருங்கள்!
பட்டதாரியானபிறகும்!
வேலைகொடுக்க பரீட்சை!
வைக்கிறார்கள்!
இப்போது இருந்திருந்தால்!
வேடிக்கையாய்!
சிரித்திரிப்பீர்கள்.....!
எல்லாம் எடுத்த பிறகும்!
பாதி திருப்தியோடுதான்!
பரீட்சை தொடரும்!
உங்கள் வார்த்தைகள்!
மோதுண்டு விழுகின்றன......!
சிரமங்களுக்கு நடுவில்!
படிக்கவைத்து!
பரீட்சைக்கும் வழியனுப்பிவிட்டு!
பெறுபேறுகள் வர முன்னமே!
வாழ்க்கை முடிந்துபோய்....!
எனது பெறுபேறு.....!
எனது பட்டமளிப்பு விழா..!
எனது வேலை....!
எனது வாழ்கை...!
என!
பின்னரான!
எந்த சந்தோசங்களையும்!
பகிர்ந்து கொள்ளாமல்...!
ஊர் உலகில்..!
நம்மைப்போல்!
எத்தனை!
வாப்பாவும் மகள்களுமோ

மனிதம் காப்போம்

அகரம் அமுதா
கவி: அகரம் அமுதா!
ஒருதாயின் வயிற்றுச் சேய்கள்!
ஒப்புரவா வாழ்ந்தி டாமல்!
இருகூராய் பிரிய நேர்ந்தால்!
இன்னலன்றோ வந்து சேரும்!!
மனிதனாய் பிறந்து விட்டு!
மனிதம்மேல் பற்றில் லாமல்!
தனியனாய் வாழ்ந்து வந்தால்!
தாழ்வன்றோ நேரக் கூடும்!!
“ஊர்க்காரன்” என்றே சொல்லி!
உதவாத வார்த்தை பேசி!
சீர்கெட்டுப் போவதாலே!
சிறிதும்நற் பயனும் உண்டோ?!
ஆரடா மனிதன் என்றால்!
மாரடா தட்ட வேண்டும்!
நேரடா எதிர்த்து நின்று !
நீசரை ஒடுக்க வேண்டும்!!
சேரடா மனிதா உன்றன்!
சிறுமதி விட்டோ ழித்தே!
பாரடா பாரில் நம்போல்!
பகைநாடும் இனமும் உண்டோ?!
தங்கைக்கே தீயை வைக்கும் !
தன்மையடா தோழா! நாளும்!
கங்கைபோல் வேர்வை சிந்தி!
கடிதுழைப் போரைச் சாடல்!
தோழரின் வேர்வை தன்னில்!
தோள்களை வளர்க்கும் தோழா!!
கோழைகள் அல்ல யாரும்!
குலைப்பதை நிறுத்திக் கொள்வாய்

மேன்மக்கள்

மார்கண்டேயன்
மலக்குழியில் இறங்கி!
மனமிறந்து!
மலம் அள்ளுபவரும்!
சாப்பாட்டில் கை வைக்க!
சாக்கடை அள்ள!
சமாதானம் செய்துகொண்டோரும்!
சுயகழிவகற்ற முடியாத!
நோய் சுற்றிய மனிதனை!
சுத்தம் செய்வோரும்!
பிணவாடையின்!
வீச்சங்களை விட்டொளித்த !
பிண்டமறுப்போனும்!
கலைக்கென்று சொல்லியே!
காமப் பசியாற்றும்!
கலைச் செல்விகளும்!
சொந்த வீட்டிலும்!
சுத்தமில்லா சுரணையற்றோர்!
நடக்கும் வீதிகளை சுத்தம் செய்வோரும் !
ஆயிரக்கணக்கானோர்!
அவசரத்தில் வீசும் அசிங்கங்களை!
அள்ளி எறிந்து அழகாக்குவோரும்!
தொலைத்த காமத்தால்!
வயிற்றில் தொடர்வதை!
வழித்து எடுத்து வழிசெய்வோரும்!
அவசரத்தில் பிறந்ததால்!
அனாதையாக்கப்பட்ட!
அன்பான குழந்தைகளும்!
குப்பையை கிளறி!
குடும்பம் நடத்தும்!
குடியானவர்களும்!
விலைபேசப்படும் உலகில்!
இன்னும் விதைத்துக் கொண்டிருக்கும்!
விவரம் கெட்ட விவசாயியும்!
யார் வாழ்ந்தாலும்!
வாழத் தெரியாத!
மேன்மை கெடாத இந்த!
மேன்மக்கள்!
இன்னும் எத்தனை ஆயிரமோ ?