இன்னொரு புதுவருட வரவும் !
நிகழ்த்தப்பட்டாயிற்று !
உடல்நல உளநல விசாரிப்புகள் !
மட்டுமன்றி !
சமாதானம் அமைதி என்றெல்லாம் !
வாழ்த்துக்கள் பரிமாறப்பட்டுமாயிற்று. !
முந்தைய ஆண்டினில் தொடங்கிய !
எனது நெடுங்கவிதையை !
இப்பவும் !
அப்படியே தொடரமுடிகிறது. !
கடந்துபோன ஆண்டின் முதுகெலும்பை !
போர் உடைத்துவிட்டிருந்தது. !
உலக வீதிகளை அப்பிய !
மனிதக் குரல்களையெல்லாம் !
தூசிபோல் தட்டி !
போருக்குப் புறப்பட்டனர் !
ஐனநாயக ஏற்றுமதியாளர். !
விளைவாய் !
இன்னொரு வியட்நாமை ஈராக்கில் !
வரையும் !
ஓவியமுனைப்பும் தொடங்கப்பட்டாயிற்று !
போரின் ஓவியர்கள் !
இரத்தம் வடியும் தூரிகையுடன் !
உயிர்முகட்டில் உலாவருகின்றனர். !
எனது மண்ணும் !
காட்டேறி ஓவியர்களின் கூடமாகி !
இருபது ஆண்டுகளை புதைத்திருக்கின்றது. !
முந்தைய ஆண்டின் போர் உறக்கம் !
இந்த ஆண்டினுள்ளும் !
கைகால்களை எறிந்தபடி நீளலாம் !
ஆனாலும் எம்மிடம் !
சமாதானம் கனவழிந்து !
மண்நனைப்பதாயில்லை. !
நாசித் தீயில் உயிர்வதங்கிய !
யூத இனமும் தொடர்ச்சியாய் !
பலஸ்தீனத்தின்மேல் தீயை உமிழ்கிறது, !
குறைவேயில்லாமல். !
ஒடுக்குமுறைக்கு உட்பட்ட இனம் நாம் !
இன்னொரு இனத்தை ஒடுக்குவோமா என்ற !
என்னவர் சூத்திரத்தை !
மலம் தின்னும் நாய் காவிச்செல்கிறது, !
இஸ்ரேல் வீதியில். !
இதுகண்டு எச்சா¤க்கைப்படுதலும் !
குற்றமாகிற்று எமது மண்ணில். !
எம்மை அமைதியாய்க் கடந்துசென்ற !
இரண்டாயிரத்து மூன்றாம் ஆண்டு !
ஈரானின் பூமியை புரட்டியெறிந்துவிட்டு !
மரணித்திருக்கிறது. !
ஒரு நூறல்ல ஓராயிரமல்ல !
முப் பதினாயிரம் உயிர்கள் !
நின்ற இடத்திலேயே புதைந்துபோன அவலம் !
இந்த ஆண்டுக்குமுரியதுதான். !
புத்தாண்டே! !
உன்னால் எதையும் அழித்து !
எழுதிவிடமுடிகிறதா? !
நம்பிக்கைகளை நாம் எப்போதுமே !
உருவாக்கிக்கொண்டுதானிருப்போம் !
ஒவ்வொரு வீழ்தலிலும் மீள எழுவோம்- அன்றி !
எழுதற்காய் போராடுவோம், !
ஓர் அருவியாய். !
என்றபோதும் !
வருக புத்தாண்டே! !
உன்மீதும் எமது எதிர்பார்ப்புகளை !
நம்பிக்கைகளை !
ஊன்றமுடிபவர்களுக்காக உனது வரவை !
நிகழ்திவிடுகிறோம். !
வருக! !
- ரவி (சுவிஸ்,080104)