01.!
அறிமுகம்!
--------------!
நான் புதியவனா!
இல்லை!
முதியவன்!
முற்றிலும் முதியவன்!
நேற்று இருந்தவன்!
இன்று இருப்பவன்!
நாளையும்!
இருக்கப்போகிறவன்!
நான் ஒன்றும் புதிதில்லை!
புதியது, பழையது என்பதெல்லாம்!
எனக்கு ஒன்றும் புரிவதில்லை!
!
02.!
நாளொரு மேனியும்...!
----------------------------!
காங்கோவின் காலை நேரம்!
மந்தமாய் மசமசவென்று!
மழையுமில்லை வெயிலுமில்லை!
எக்கேடுகெட்டும் ஒழிந்துபோ!
என்றது பூமியைப்பார்த்து வானம்!
கிறங்கிய மனிதர்கள்!
கிடுகிடுக்கும் சாலைகள்!
இன்னொரு நாள் ஆரம்பித்திருக்கிறது!
கழியும் இதுவும்!
கடந்தும் விடும்
ஏகாந்தன்