தமிழ் கவிதைகள்

தமிழ் கவிதைகள்

மண்ணின் மைந்தர்கள்

பி.தமிழ் முகில்
சாலை ஓரங்களில் !
இத்தனை காலமாய் !
யாருக்காக இவர்கள் !
காத்து நிற்கிறார்கள்??!
ஒற்றைக் காலில் !
நின்று கொண்டு!
எவரை நோக்கி !
தவம் செய்கிறார்கள்??!
இவர்களது தலைகளில் !
பறவைகள் கூடுகட்டி!
வாழ்ந்த போதும்!
இவர்களது ஆழ்மனத் தியானம் !
கலையவில்லையே ?!
யாருக்காக இவர்கள் வாழ்கிறார்கள்?!
மானுடா...... சற்று சிந்தியேன்....!
தான் வாழும் போது -!
உன்னை வாழ வைத்து !
தான் வீழ்ந்த (வீழ்த்தப்பட்ட ) பின்னும் !
உனக்கு வாழ்வளிக்கும்!
மண்ணின் மைந்தர்களாம் - மரங்களை !
காத்திட உறுதி கொள்ளலாமே

பிறந்த நாள் பரிசு

s.உமா
பாலுண்ணும் பிள்ளைக்கு பரிசாக்க வேண்டும்!
தோதாக ஏதிருக்கு பரிசாக நான் தர!
பச்சை புல்வெளியில்லை!
பரந்து நிற்கும் வயலில்லை!
சுற்றி தோட்டமிட்டு வற்றாத நதியருகே!
எட்டாத உயரத்தில் கட்டாக பரணமைத்து!
கட்டாத என் மனக்கோட்டை!
காலூன்ற வழியில்லை!
பச்சைத் தண்ணீரும்!
பகிர்ந்துண்ண வேண்டும் நீ!
ஆலும் வேலும் இங்கில்லை !
அன்னைப்பாலும் சத்தில்லை!
முயன்றே விடவேண்டும் மூச்சிங்கே!
நேராக எதுவுமில்லை!
தோதாக பரிசுனக்கு!
நான் தர பூமியிலே!
ஆனாலும் சொல்லிடுவேன் கேளாய் என்மகனே!
நீயாக நினைத்தால் மாற்றிடலாம் இஃதையெல்லாம்!
கருத்தாக ஓர்மரம் மண்தொட்ட இந்நாளில்!
விளையாட்டாய் வைத்திட்டால்!
விதையாகும் உன் உழைப்பு!
வேங்கையாகும் வெற்றி!
சோர்வாக வேண்டாம் சொல்லிடுவேன் மகனே கேள் !
ஓசோனின் ஓட்டையையும் ஒட்டிவிடும் அறிவுண்டு!
இங்கே!
உன்கையில் உலகத்தை கொண்டுவரும் கண்ணி உண்டு!
வெண்ணிலாவில் கால்வைத்து !
வெட்டவெளி நடை நடந்து!
பெண்டீரும் வெல்வதனால்!
உண்டாகும் நன்மை பல உன்நாளில்!
செவ்வாயில் குடியேறும் !
திறம் கொண்டு அந்நாளில் !
தேர்ந்ததொரு தொழிற்நுட்ப பயிற்சியாலே!
வரலாறு திரும்பிடவே!
மும்மாரி பொழிவதனால்!
மூன்று போகம் விளைவித்து !
முக்கனியின் சாறும் தேனும் பாலும் கற்கண்டும் !
கலந்து வரும் காவிரியின்!
பொங்கிவரும் புனலருகே!
பூத்த ஒருசோலையிலே !
அத்தரும் சந்தனமும் ஜவ்வாதும் மணந்திருக்க !
ஆங்காங்கே முத்தும் பவளமும் மாணிக்கமும் மலர்ந்திருக்க !
அறிவிற் சிறந்த பெண்டீரும் !
அவர்க்கேற்ற ஆடவரும்!
ஆனந்தமாய் களித்திருக்க!
அத்தணையும் டிஜிட்டலில் அழகாக பதிவாக!
கம்ப்யூட்டரில் விளையாடி கைக்கடுத்த குழந்தைகள் !
காவிரியில் புனலாட கம்ப்யூட்டரில் பதிவாகி !
கனடாவில் நண்பர்களும் !
கண்டுக்களித்ததனை ஏக்கத்தோடு!
'நயாகரா' வும் தோற்றுவிடும்!
நலத்தோடு நந்தவனந்தன்னில்!
நடந்தாய் வாழி காவேரி என !
நயமாக மெயில் அனுப்ப !
நடக்கும் அத்தனையும் நடந்தே தீரும்!
நம்பிக்கை நம்பிக்கை நம்பிக்கை !
இஃதே நானுனக்குத் தரும் பரிசாகும்!
வளமான வாழ்வுனக்கு வந்துசேரும் நாள்வரையில் !
உரைத்திடுவேன் ஓர் சபதம்!
மக்காத பிளாஸ்டிக், ரப்பர், கண்ணாடி !
மண்ணில் புதையுறவேமாட்டாதொழிப்பேன் !
கண்ட இடத்தில் எச்சிலும் குப்பையும் கொட்டி!
காற்றையும் வீணாக்க மாட்டேன் உறுதி!
தயங்காது செய்வீர் இதனை!
பிள்ளையைப் பெற்றோர்!
பொறுப்பு நமக்கதிகம் புரிந்தே கொள்வீர்

இப்படியே இருக்ககூடாதா ?

ந.பரணீதரன்
கையசைத்து வரவேற்பதுபோல் !
ஆடிஅசையும் தென்னந்தோப்பு !
அதன் நடுவில் ஒற்றைக்குடிசையாய் !
ஓலைக்குடிசையொன்று !
முற்றத்து நிழலினில் !
முதுகுசார ஓர்¢ கதிரை !
இப்படியே இருக்ககூடாதா ? !
நுரைதள்ளி கரைவந்து !
கதைசொல்லி மறையும் அலை !
அலையுடன் கொஞ்சிக்கொள்ள !
ஆர்ப்பாரிக்கும் நண்டுக்கூட்டம் !
கால்நனைய உட்கார்ந்து !
பலகதைகள் பேசிக்கொள்ள !
அருகினில் நீயும் !
அப்படியே இருக்ககூடாதா ? !
பூமிதொடும் முதல் மழைத்துளி !
பனியோடு படுத்துறங்கும் புல்த்தரை !
வண்டுடன் சல்லாபிக்கும் பூவிதழ் !
உயர உயர பறந்து !
உச்சி முத்தமிடும் சிட்டுக்குருவி !
இப்படியே இருக்கக்கூடாதா ? !
கல்லெறி வேண்டியும் !
வாலைக்குழைத்து !
வளைய வரும் தெருநாய் !
எப்போது உறங்குவோம் !
அப்போது நுழைவோம் என !
விழிநோக்கி காத்திருக்கும் !
செல்ல பூனை !
இப்படியே இருக்ககூடாதா ? !
அசரும் நேரத்தில் !
ஆசையாய் ஓடிவந்து !
பழம் தின்னும் பச்சைக்கிளி !
ஓய்ந்துவிட்டால் வாழ்க்கை இல்லை !
என ஓடி ஓடி உழைக்கும் !
சின்னஞ்சிறிய சிற்றெறும்பு !
இப்படியே இருக்ககூடாதா? !
தலைவைத்து சாய !
அன்னை மடி !
கோபம் வந்தால் குட்டிக்கொள்ளவும் !
ஆசைவந்தால் அள்ளி அணைக்கவும் !
அன்பு தந்தை !
பாசத்தை பங்குபோடவும் !
பகிடியாய் சண்டை பிடிக்கவும் !
அன்புத்தங்கை தம்பி !
விழிக்குள் வைத்து காப்பதற்கு !
பாட்டன் பாட்டி !
இப்படியே இருக்ககூடாதா ? !
ஆக்கம். கரவைபரணீ ?

வேலா மரம்

ஆர். ஈஸ்வரன்
ஏய்!!
உனக்குள்ளிருக்கும்!
போதைப் பொருளை!
நீ இந்தக் கயவர்களிடம்!
காட்டியதால் தானே!
உன்னை இப்பொது!
வெட்டி வெட்டி!
துகிலுரிக்கிறார்கள்!
!
- ஆர். ஈஸ்வரன், வெள்ளகோவில்

என் தலையணை

கல்முனையான்
காய்ந்துபோன பருத்திப் பஞ்சுகளின் நாளாந்த!
பொதுக் கூட்டம் எந்தன் தலையணைக்குள்!
அதற்கு மட்டும்தான் தெரியும் என் உடலின்!
உள்ளத்தின் உண்மையான சுயரூபம்.!
காற்றடைத்த பையாக நானும்!
பருத்திப்பஞ்சின் பால்ய சினேகிதனான!
என் தலையணையும் அடிக்கடி முத்தமிட்டு!
சல்லாபம் புரிவோம் ஒவ்வொரு நாளும்.!
எனக்கு வேலை இல்லை என்று என்!
வீட்டில் திட்டும் போது என்னை அரவணைத்து!
அன்பு காட்டும் என் அம்மாக்கு அடுத்ததாக!
என்னை ஆறுதல் படுத்துவது!
கழுத்து வலி, இடுப்பு வலி எல்லாமே!
உன்னை இறுக அணைக்கும் போது!
எங்கேயோ தற்காலிகமாய் குறுகிய!
விடுமுறையில் சென்றுவிடும்.!
என் கண்ணீரையும் பெருமூச்சையும்!
விலைக்கு வாங்கி உன்னகத்தே வைத்து!
வட்டியும் முதலுமாய் அடுத்த நாள் காலை!
அமைதியாய் சலவைக்கு செல்வாயே!!!!
உன்னை விட இன்று எனக்கு யாருமில்லை!
என்னை அண்மித்த ஜீவனாக!
ஆதலால் உன்னை என் தலையணை என்பதை விட!
என் காதலி என்றே அழைக்கிறேன் ஏற்றுக்கொள்வாயா

கும்பிட்ட கைகளால் குண்டுவைப்போம்

அஸ்மின், ஈழநிலா, இலங்கை
கூட இருந்தே!
குழிபறிப்போம்!
கும்பிட்ட கைகளால்!
'குண்டுவைப்போம்'!
கதைத்து பேசியே!
'கழுத்தறுப்போம்'!
அடுத்தவனின் வளர்ச்சிக்கு!
'ஆப்படிப்போம்'!
மற்றவர் சிரித்தால்!
மனமுடைவோம்!
நண்பணின் அழுகையில்!
நாம் மகிழ்வோம்!
கட்டிப்பிடித்து!
கலங்கிடுவோம்!
எட்டி நடக்கையில்!
ஏசிடுவோம்!
தட்டிப்பறித்தே!
தளைத்திடுவொம்!
மட்டி மடையரை!
'மஹான்' என்போம்!
எமக்கென்று சொன்னால்!
எதுவும் செய்வோம்!
'எருமையின் மூத்திரம்!
தீர்த்தமென்போம்'!
வடிவான அன்னத்தை!
'வாத்து' என்போம்!
பூக்களை அழகிய!
புற்களென்போம்!
கானக்குயிலினை!
காகமென்போம்!
பேசும் மனிதனை!
ஊமையென்போம்!
'எம்மவர் அமுதினை!
எச்சிலென்போம்...!
அடுத்தவர் எச்சிலை!
அமுதமென்போம்'!
'நாய்களை கூப்பிட்டு!
பாடு என்போம்!
நாட்டுக் குயில்களை!
ஓடு என்போம்'!
உணவல்ல இதுநல்ல!
ஊத்தையென்போம்!
உணவிருக்கும் ஆனோலோ!
ஊத்தை உண்போம்...!
காசுக்காய் குதிரையை!
கழுதையென்போம்!
கடவுளை கூட!
கூவி விற்போம்...!
காகித கத்தியால்!
போர் தொடுப்போம்-பின்னர்!
கவட்டுக்கள் கைவைத்து!
தூங்கிடுவோம்.!
இருக்கின்ற போதும்!
இல்லையென்போம்!
நறுக்கி நறுக்கியே!
நாம் உயர்வோம்!
கொஞ்சிப்பேசியே!
கொள்ளிவைப்போம்..!
கொஞ்சும் தமிழையும்!
கொன்றுவைப்போம்!
தூண்டிவிட்டு நாங்கள்!
தூர நிற்போம்.!
துவேஷம் வளர்ந்திட!
தோள்கொடுப்போம்.!
வகை வகையாக!
வலை பின்னுவோம்!
வயிற்றினில் அடித்தே!
வளர்ந்திடுவோம்!
எடுத்தெதற்கெல்லாம்!
பிழைபிடிப்போம்!
எங்கள் பிழைகளை!
மறைத்திடுவோம்!
குறைகள் சொல்லியே!
குழப்பம் செய்வோம்!
குழப்பங்கள் செய்தே!
குதூகலிப்போம்!
'மரங்களின் கரங்களை!
முறித்திடுவோம்!
பின்னர் மழையிடம் நாங்களே!
பிச்சை கேட்போம்'!
சிந்திக்க சொன்னால்!
'சீ' என்னுவோம்!
சீர்கெட்டு போவதே!
சிறப்பு என்னுவோம்!
'பாவங்கள் செய்தே!
பழகிவிட்டோம்!
மரணம் இருப்பதை!
மறந்திட்டோம்'!
வாழ்வில் எதுக்கும்நாம்!
வருந்தமாட்டோம்!
''சுனாமி'' வந்தாலும்!
திருந்தமாட்டோம்..!
கூட இருந்தே!
குழிபறிப்போம்!
கும்பிட்ட கைகளால்!
'குண்டுவைப்போம்..!'

போர்பூத்த நாகரிகம்

ரவி (சுவிஸ்)
பலஸ்தீனத்தைக் குதறுகிறது !
ஏவல் நாயொன்று !
றமெல்லாவின் இடிபாடுகளுள் அது !
மோந்து திரிகிறது -தன் சொல்ப் !
'பயங்கரவாதிகளை’. !
காட்சிகளில் லயித்துப்போய் !
அமர்ந்திருக்கிறான் அதன் !
எஜமானன். !
புல்டோசர்கள் கட்டடங்களை !
நிதானமாகத் தகர்க்கின்றன !
இடிபாடுகளை நிர்மாணிக்கின்றன !
வெளியே வருகின்ற எஜமானன் !
ஜனநாயக முகமூடி அணிகின்றான் !
காட்டமான குரலில் !
மனிதம் பற்றிப் பேசுகிறான் !
பேரழிவின் ஆற்றலுடன் ஈராக் !
பயமுறுத்தி நிற்கிறது !
மனித நாகரிகத்தை என்கின்றான் !
போர்ப் பிசாசுக்கு !
உடை அணிவிக்கப்படுகின்றது !
பேரழிவை நடத்தும் ஏவல்நாயின் !
வெறியாட்டம் !
முற்றுகை, தனிமைப்படுத்தல், !
தற்காப்பு என்றெல்லாம் !
சொல்கொண்டு அதனதன் !
அர்த்தங்கள் களையப்படுகின்றன !
முக்காடு போட்ட அந்தத் தாய் தன் !
மகனுக்காகக் கதறுகிறாள் !
இரத்தம் தோய்ந்த உடல்களை !
காவியபடி !
பலஸ்தீன வீதிகளை மொய்த்த மக்கள் !
விரைகின்றனர் !
மனிதக் குண்டாய் சிதறிப் போனவனின் !
பிஞ்சு மகன் !
மரணத்துக்குப் பயமில்லை என்கிறான். !
எனக்குள் இறங்குகிறது !
காட்சிகள் !
மனித நாகரிகம் இப்படியாயிற்று !
ஜீரணித்துக் கிடக்கிறதா !
மனித இனம்? !
கேள்வி என்னைத் துளைக்கிறது !
பல இலட்சம் யூதர்களின் !
உடலம் சிதைத்த கிற்லரை !
இப்போ ஜீரணித்துவிடுவேனோ நான்! !
அச்சம் என்னைத் துன்புறுத்தி !
எழுகிறது !
இன்றைய !
ஏவல் நாயின் வேட்டையில் !
மனிதத்தைக் குதறிய !
அன்றைய ஓநாயின் !
இரத்தவாடை வீசுகிறது

ஆட்களற்ற நகரத்தை தின்ற மிருகம்

தீபச்செல்வன்
இப்படித்தான் அந்த கொடுமிருகம்!
இந்த நகரத்தையும் தின்று கொண்டிருந்தது.!
கடல் மேலும் காய்ந்துவிட!
மிருகத்திற்கஞ்சி மண் சுருங்கி ஓடுகிறது.!
கால்களிற்குள் நீளுகிற அலைச்சலில்!
தொலைந்து போன பொருட்கள் மிதிபடுகிற!
நடைக்கனவுடன்!
உன்னை தேடியலைகிறேன்!
பின்னேரம் சுற்றுகிற முற்றுகையில்.!
மண் கிளம்பி பெயர்கிறது.!
சந்தி உடைந்து படைகளின் கால்களால்!
எத்துப்படுகிறது.!
சுவருக்குப் பக்கத்தில் நிற்கிற!
மிருகம் பின் கோடியை தின்னுகிறது.!
கூரைகளை கடித்து துப்பிவிட்டு!
ஒழுங்கையை பிடித்துச் செல்லுகிறது.!
முகப்பை நகங்களால் விறாண்டி!
தனது மொழியில் பறகள் வரைகிறது.!
பேய்கள் புகுந்து அடித்து!
கடைகளை தின்றிருக்க!
பனைகளின் தலைகள் அறுக்கப்பட்டிருக்கின்றன.!
கடலில் புதைந்து கிடந்த!
உனது சொற்களில் வடிகின்றன!
இந்த சின்ன நகரத்தின் பாடல்கள்.!
சாம்பலை நிரப்பி!
எறியப்பட்டிருக்கிற சாடியில்!
உன்னை அடைத்து வைத்திருந்தனர்.!
கடைசி வார்த்தைகளால்!
நம்மை வதைத்துக் கொண்டிருக்கிற!
கர்ஜிப்பில் கடைசியாயிருந்த!
நகரம்!
மூச்சடங்கி கிடக்கிற பறவையைப்போல!
துடித்து உயிரற்றுக் கிடக்கிறது.!
இப்படித்தான் அந்த கொடுமிருகம்!
நம்மை குறித்து ஒரு நாள்!
அச்சுறுத்தியபடியிருந்தது.!
நகரங்கள் ஆட்களற்றுப்போனது.!
பசிக்கு ஏற்றபடி கால்களால்!
நகரத்தை வளைத்து வைத்து!
தின்றுகொண்டிருக்கிறது ஒற்றை மிருகம்.!
கிளம்புகிற மண் வீதிகளால் பெருகி வழிகிறது.!
--------------------------------------!
03.03.2009,புதுக்குடியிருப்பு,நகரம்,வீழ்ச்சி

ஓசையில்லா.. தூங்காத

சத்தி சக்திதாசன்
ஓசையில்லா முத்தம்.. தூங்காத கண்களுக்கு!
01.!
ஓசையில்லா முத்தம்!
---------------------------- !
வானத்தின் முத்தம்!
பூமியின் மேல்!
நிழலாய் ஓசையில்லாமல்...!
இரவின் முத்தம்!
பகலின் மேல்!
மெளனமாய் படர்ந்தது போல் ...!
பனியின் முத்தம்!
புற்களின் நுனியில்!
சத்தமிலாமல் துளிர்த்தது போல் ...!
என் காதலின் முத்தம்!
ஓசையில்லாமல் பார்வையினூடாக!
உன்னிதயத்தில் விழுந்தது புரிந்ததா? !
!
02.!
தூங்காத கண்களுக்கு!
------------------------ !
காத்திருந்து காத்திருந்து!
கனவுலகில் பூத்திருந்து!
நேத்திருந்த ஞாபகங்கள் !
நெஞ்சினிலே ஏக்கமிட!
மூட மறந்தனையோ !
விழிகளே இமைகளை!
ரோஜாமலரின் சிவப்பையும்!
மல்லிகையின் வெண்மையையும்!
மங்கையவள் வனப்புக்கு!
மயங்கி மனமும் ஒப்பாக்கியதால்!
கண்டுவிட்ட அழகதனை இழந்துவிட!
முடியாத காரணமோ இன்று!
மூடாத விழிகளுக்கு!
வில்லெடுத்து அம்பு தொடுத்து!
இதயம் தனை குறிபார்த்தே!
எய்துவிட்ட பார்வையதால்!
காதலென்னும் காயம் தந்த!
கட்டறுத்த வலிகொண்டு!
காளையவன் தவித்த காரணத்தால்!
கண்கள் மூட மறுத்தனவோ!
தூங்காத கண்களுக்கு !
தாங்காத நெஞ்சம் ஒன்று!
நீங்காத நினைவுகளால்!
பாங்கான கேள்விக்கணைகள்!
தொடுத்து பார்க்கும் வேளையிது!
-சக்தி சக்திதாசன்

முதல் ஆசான்

சாந்தி
நல்ல நாள் பார்த்து !
நெல் பரப்பி !
விரல் பிடிச்சி !
'அ' எழுத வச்ச ஆத்தாவுக்கு !
எழுத படிக்க தெரியாது !
எனக்காக யாருகிட்டயோ !
'அ' வரைய படிச்சிருந்தா... !
பின்னாளில் ஒரு நாளில் !
ஆத்தா பேரை எழுதிவச்சி !
அவள்முன்னே காட்டினப்ப !
வரைபடமா தெரிஞ்ச எழுத்த !
தலைகீழாய் பார்த்துபுட்டு !
'அழகா எழுதியிருக்கே செல்லம்'- என்று !
ஆசையாய் கொஞ்சினப்ப !
'தலைகீழாய் வச்சி படிக்கிறியே'-னு !
தலையில நான் அடிச்சிகிட்டேன்.. !
அப்படி நான் புண்படுத்தினது !
ஆத்தாவை பாதிக்கவே இல்லை..ஏன்னா !
அவளுக்குத் தெரியும் !
என்னோட முதல் ஆசானே அவள் தானென்று... !
-சாந்தி