எது நல்லது!
பொறுத்துப் போவதா?!
பொங்கி எழுவதா?!
தன்மானம்!
சுய அறிவு!
இவற்றை!
ஒதுக்கி வைத்துவிட்டுப்!
பொறுத்துப்போக இயலுமா?!
குடும்பம்!
அலுவலகம்!
சமூகம்!
அனைத்தும்!
பொறுத்துப்போகவே!
எதிர்பார்க்கின்றன!
சொல்லித்தருகின்றன!
வீண்பகை!
கோபக்காரன் என்ற பட்டம்!
இவற்றை ஏற்க மறுத்து!
பொறுத்துப் போக வேண்டுமா?!
பொங்கி எழுபவர்களின்!
எண்ணிக்கை!
விரல்விட்டு எண்ணுமளவில்!
இருக்க!
பொறுத்துப்போவதே!
சரியானது என!
விரும்புகிறது மனது!
சுட்டிக் காட்டப்படும்!
குற்றங்கள்!
குற்றவாளிகள்!
விடுதலையாய் நிற்க!
வெறுத்துப் போய்!
நிற்கிறது மனம்!
ஆள்!
அம்பு!
படை!
பலம்!
இவை!
அடிப்படை நியாயங்களைக் கூட!
அலட்சியப் படுத்தும்போது!
பொங்கி எழுகிறது மனம்!
கல்லில் முட்டி மோதி!
காயமே மிச்சம்!
என்ற அனுபவப் பாடம்!
பொறுத்துப் போகச் சொல்கிறது!
எது நல்லது!
பொறுத்துப்போவதா?!
பொங்கி எழுவதா?!
-மு.பழனியப்பன்
மு. பழனியப்பன்