தமிழ் கவிதைகள்

தமிழ் கவிதைகள்

எனக்குப் புரியவில்லை

ஆல்பர்ட
படிப்பது !
இராமாயணம் !
இடிப்பது !
பெருமாள் கோயில் !
என்ற சொல்வழக்கு !
ஏன் வந்தது? !
- எனக்குப் புரியவில்லை!? !
படித்தது !
இராமாயணம் !
இடித்தது !
பாபர் மவதி !
என்று மாறியது ஏன்? !
- எனக்குப் புரியவில்லை!? !
கொலை செய்; !
பந்த் நடத்து; !
பஸ்ஸைக் கொளுத்து; !
பிறரைத் துன்புறுத்து; !
என்று போதித்தது !
எந்த மதம்? !
- எனக்குப் புரியவில்லை!? !
வேதங்கள் !
சொல்லாததை, !
மதங்கள் !
போதிக்காததை, !
ஆலயங்கள் !
அறிவிக்காததை !
செய்யத் துணிவு !
வந்தது !
யாரால்? எங்கிருந்து? !
- எனக்குப் புரியவில்லை!? !
நல்லதையே சிந்தியுங்கள்... !
நல்லதையே செய்யுங்கள்... !
இதைத்தானே !
புத்தர் போதித்தார்; !
இயேசு பிரசங்கித்தார்; !
நபிகள் நவின்றார்; !
காந்தி சொன்னார். !
இவர்கள் !
தெளிவாய்ச் சொன்னது !
மட்டும் !
ஏன் !
எவருக்குமே !
புரியாமல் போனது? !
- எனக்குப் புரியவில்லை!? !
-ஆல்பர்ட்

கவிதை பிறக்கும்

முருகடியான்
பாம்படித்தால் பாவமில்லை!!
பசுவடித்தல் பண்புமில்லை!!
காம்பறுக்க அஞ்சிடுவான்!
கனிசுவைக்கப் போவதில்லை!!
வேம்படியில் தேனிறைத்தால்!
விளாம்பழங்கள் காய்ப்பதில்லை!!
நாம்படிக்க வில்லையென்றால்!
நற்றமிழ்தாய் என்னசெய்வாள்?!
தேம்பனுவல் படித்திடுங்கள்!
தெள்ளுதமிழ்க் கவிதைவரும்!
-பாத்தென்றல்.முருகடியான்

மெல்லத்தட்டு

சத்தி சக்திதாசன்
சத்தி சக்திதாசன் !
என்னிதயக் கதவுகளை மெல்லத்தட்டு !
ஓசையைக் கேட்கும் பலம் !
ஏனொ இதயச் சுவர்களின் !
கற்களுக்கு இல்லை !
உன் கேள்வி நன்றாகவே !
எனக்குப் புரிகிறது !
கைகோர்த்து நடந்து !
பழக்கமற்றவன் வாழ்க்கையெல்லாம் !
எப்படி தோழனாவாய் என்று !
சின்னப்பெண்ணே மெல்லத்தட்டு !
உன் கழுத்தில் நாணேற்றி !
நானுனக்கு கணவனாய் பதவியேற !
சந்தர்ப்பம் தா , அங்கே நான் நிகழ்விக்கும் !
சம்பவங்கள் என்னை உன் !
தோழனாக்கும் !
பலர் தட்டிய போதும் திறக்காத !
என்னிதயம் !
தட்டவென நீ கைகளை உயர்த்தியபோதே !
திறந்து கொண்டதே !
இதுதான் பூர்வஜென்மப் !
பலனென்பரோ !
பூங்காற்றே நான் மலரிதழ் !
மெல்லத்தட்டு இல்லையேல் !
உதிர்ந்து விடுவேன் !
தேன்வண்டே மெதுவாக !
சிறகை விரி !
அதன் சலசலப்பில் என் !
சப்த நாடியும் !
ஒடுங்கிவிடும் !
பொன்வண்டு வளர்க்கும் ஆசை உனக்கு !
பறக்கும் என்மனதைப் பிடித்து !
உன்னிதயக் கூட்டில் !
அடைத்து விட்டாய் !
பருவ மழையே நனைந்தால் !
ஜீரமேறி நலிந்துவிடுவேன் !
மெல்லத்தட்டு !
உள்ளத்தை !
உன்வீட்டு முற்றத்தில் !
தொலைத்து விட்டேன் !
உன் மனமெனும் பற்றைக்குள் !
விழுந்ததுவோ !
காதலை எனக்கு !
கல்லூரியின்றிக் !
கற்பித்தவளே !
காலமெல்லாம் நான் என் !
காதோடு ஒரு கவிதை சொல்லி எனைக் !
கைதாக்கி உனதாக்கி எனைத்தாக்கியது போதும் !
இனி வரும் வேளையிலே !
உன் பூமுகத்தின் மென்மைப்போல் !
என் இதயக் கதவுகளை !
மெல்லத்தட்டு மேகம் விலகும்

நண்பனுக்கொரு.. நெஞ்சுக்குள்ளே

சத்தி சக்திதாசன்
நண்பனுக்கொரு மடல்.. நெஞ்சுக்குள்ளே ஒரு ராகம்!
01.!
நண்பனுக்கொரு மடல்!
---------------------------!
அன்பு நண்பா,!
கண்களுக்குள் உறக்கம் நுழைய!
மறுக்கின்ற வேளையடா!
நெஞ்சத்தின் ஓரங்களில்!
வேதனையின் கீற்றுக்கள்!
நம் தாய்மண்ணின் ஓலம்!
நமைச் சுற்றி ஓயாமல் ஒலிக்கின்றதே!
தீராத போர் என்னும் துன்பம்!
தீர்க்கின்ற உயிர்களின் பாரம்!
தாங்காமல் துவண்டிடும் உள்ளம்!
தூங்காமல் தவித்திடும் நெஞ்சம்!
அங்கொன்றும் இங்கொன்றுமாய்!
அரசியல் பேசிடும் கூட்டம்!
அதுவல்ல மக்களின் நாட்டம்!
அல்லல்கள் தீர்வதே ஈட்டம்!
எண்ணத்தின் பாதி இங்கே!
எழுத்தாக உனைத் தேடி ஓடும்!
சொல்லாத எண்ணங்கள் கோடி!
நெஞ்சுக்குள் புதைந்தேதான் போகும்!
நினைவுகளில் தேந்துளி சிந்தும்!
கனவுகளில் காட்சிகள் மாறும்!
நாம் வாழ்ந்த காலம் நெஞ்சில்!
வந்து வந்தேதான் போகுதடா!
வாலிப வயதில் நாம் கண்ட!
வசந்தங்கள் இன்றங்கில்லை!
கண்களில் நீரோடு ஏக்கத்தின்!
வாசலில் எத்தனை மழலைகள்!
வருத்துது நெஞ்சினை நான் தினம்!
கண்டிடும் கோலங்கள்!
போரில்லா வாழ்வொன்றினைத் தேடி!
கால்நூற்றாண்டுக்கு மேலாய்!
இன்னல்கள் மத்தியில் உழன்றிடும்!
இன்னுயிர் உறவுகளின் எண்ணங்கள்!
இதயத்தைச் சிதைக்குது ஏனோ!
ஈட்டியாய்த் தைக்குது!
சர்வமும் இழந்திட்ட மக்களை!
சர்வதேசமும் கைவிட்டதோ ? சொல்லு!
சந்தையில் விலைப்படும் பலிக்கடாக்களாய்!
சொந்தங்கள் துடித்திடும் பொழுதடா!
போரினி மறையட்டும் நாம் பூமியில்!
போன உயிர்கள் போனதாய் இருக்கட்டும்!
பொழுதொன்று விடியட்டும் எம் மண்ணில்!
புறப்படு தொடர்ந்து நாம் பிரார்த்திப்போம்!
!
02.!
நெஞ்சுக்குள்ளே ஒரு ராகம்!
-----------------------------------!
நெஞ்சுக்குள்ளே ஒரு ராகம்!
நேசத்தோடு கூடும் நேரம்!
நினைவலைகளில் பயணிக்கும்!
கனவுக்கப்பல் கரையேறும்!
தேன் சிந்தும் வானம் அங்கே!
தெளிவாகும் மெய் ஞானம்!
மலர் வீசும் சுகந்தவாடை!
மனம் கொள்ளும் ஆன்ம நிலை!
கணநேரம் மூடும் விழிகள்!
காணுவதோ அழியாக் கோலம்!
கண்கள் இருந்தும் காண்பதில்லை!
காலமிட்ட கோலம் தன்னை!
திரையரங்கில் அரங்கேறும்!
தினம் தினமும் நாடகங்கள்!
திரைச்சீலை விழுந்த பின்னும்!
தொடரும் கதை அறிவாரோ!
இதயமென்னும் காகிதக்கப்பல்!
ஏற்றுவதோ இரும்புச்சுமை!
மறுகரையைச் சேருமுன்னே!
மூழ்கிடுவதே உண்மையன்றோ!
வரும்போதும் எதுவுமில்லை!
விழும்போதும் ஏதுமில்லை!
இடையில் வரும் உடமைகள்!
இதுக்குத்தானா யுத்தங்கள்!
ரத்த ஓட்டம் தளர்ந்ததுமே!
புத்தி கொஞ்சம் விரியுதப்பா!
முத்தியடையும் வேளைதேடி!
சித்தமெல்லாம் தெளியுதப்பா

நடுநிசி, கைவிடப்பட்ட ஆலயம்

துர்கா பிரசாத் பாண்டே
இரவு தூரங்களை இழுத்து நீளமாக்குகிறது!
முடிவற்றதைப்போல்.!
இரவு மரணத்தைப் போல.!
ஒற்றைப் பறவையின் அழ்ந்த கவலை!
அமைதியாக வந்தமர்கிறது!
எனது தனிமையின்!
அடர்ந்த கிளைமீது.!
ஏதோ ஓர் இடத்தில்,!
ஒரு பயம் தன்னைத் திறந்துகொள்கிறது, அமைதியாக,!
சில பெயர்தெரியாத காட்டுப் பூவைப் போல.!
அதன் கருத்த இதழ்கள்!
நமது கடந்தகாலக் கல்லறையில் இருந்து!
ஒளிந்திருந்து தாக்குகிறது!
கைவிடப்பட்ட!
கருவறை மூலையில்!
விட்டு விட்டு எரியும் அகல் விளக்கு!
சண்டை போடுகிறது!
தனது சொந்த நிழலோடு.!
கைவிடப்பட்ட அந்த ஆலயத்தின் உள்ளே!
கருங்கல் தெய்வம்!
பலவீனமாக புன்னகைக்கிறது!
ஓர் அக்கறையற்ற குழந்தை!
தனது நூற்றாண்டு பழம்புராணங்களின்மீது!
செங்குத்தாக நின்றுகொண்டிருப்பதைப் போல

வாழ்த்துகள்

ரசிகவ் ஞானியார்
எவருமே!
திருப்பித் தரஇயலாத!
நான் பிறந்த அந்த நாளை!
இன்றைய இலக்கம் மட்டும்!
போலியாய் நிர்ணயிக்கின்றது!
வாழ்த்துகள் பிரதியெடுத்து!
பதிப்படுகின்றது!
ம்!
நான் கொடுத்தது!
எனக்கே திருப்பி!
ஒவ்வொரு பிறந்தநாளும்!
நான் இறப்பதற்கு!
ஒரு வருடத்தை குறைக்கிறது!
யாராவது!
வாழ்த்துங்களேன்!
!
- ரசிகவ் ஞானியார்!
------------------------------------!
K.Gnaniyar Zubair,!
TransIT mPower Labs (P) Ltd,!
#32, 5th Cross, Munimarappa Garden!
Bangalore - 560 046

இன்றைய பெண்கள்

வைரபாரதி
பரிதி விட்டெரியும் ஒளிகள்!
பாரெங்கும் புகுவது போல!
புதமைகளில்லா துறைகள்!
பாரினில் எங்காவது உள்ளதோ!?!
வீட்டுச் சிறையைக் கடந்து!
விண்ணிலடிக்கும் சிறகுகள் - சாதனை!
ஏட்டுச் சுவழகளைத் திறந்தால்!
எல்லாம் பெண்களின் வரவுகள்!
கழனியிலிருந்து கணினி வரை!
கன்னியரின்றி வேலைகளுண்டோ!!
உழவு முதல் உயிர் தரிக்கும் வரை!
உமையிழந்தால் வேறு வழியுண்டோ!!
விஞ்ஞானத்திலும், விவசாயத்திலும்!
விவேகமாய் உங்களணி!
மெஞ்ஞானத்தோடு இம்மேதினியில்!
மெல்லியர் உங்கள் பணி!
இருந்தும்.. !
திரைச்சீலைக்குத் தன் தேகத்தைத்!
தீனியாய் விற்றுக்க களிக்கும்!
கறைபடிந்த சில கசாப்புக் கன்னியர் - இக்!
காசினியில் அழிக்க வேண்டிய களையினர்!
மேலும் !
அழகு போகுமென!
அழும் தம் பிள்ளைக்கு!
ஒழுக்க நெறியுள்ள பெண்களும்!
ஊட்ட மறுக்கின்றனர் தாய்ப்பாலை...!
இவர்களில்லை எம் பாரதி கண்ட புதுமை!
இங்கே உயிரிருந்தும் உணர்வற்ற வெறுமை!
சுவரிலே வாழ்ந்து வரும் சித்திரங்கள் - என்!
சுதேசியின் பார்வையில் தப்பிய விசித்திரங்கள்!
மகாகவி கண்ட புதுமையாய்!
பாவேந்தரின் குடும்ப விளக்காய்!
மகாத்மாவின் கலங்கரமாய்!
மாற வேண்டும் சில பெண்கள்!
உண்மையில்!
மென்மையான பேச்சும்!
மேன்மைக் கொண்ட பார்வையும்!
வன்மையில்லா குணங்களும் - நல்!
வஞ்சியரின் சிறப்பியல்புகள்

ப‌ற‌வைக‌ள் வ‌ரும் என‌

சம்பத்குமார்
என் க‌விதைக‌ளில்!
ஒன்றும் இல்லை!
வெறும் செடிக‌ளும் ம‌ல‌ர்க‌ளுமே...!
சில‌ ம‌ர‌ங்க‌ளும் ந‌ட்டு வைக்கிறேன்!
ப‌ற‌வைக‌ள் வ‌ரும் என‌...!
இர‌த்த‌ம் தோய்ந்த‌ சுவ‌டுக‌ளும்!
முலாம் பூசிய‌ முக‌ங்க‌ளும்!
என்னோடு சினேக‌ம் கொண்ட‌!
நாட்க‌ள் ம‌ற‌க்க‌ முடியாம‌ல்...!
ஒற்றை வ‌ழி பாதையில்!
என் ப‌ய‌ண‌ம்!
குளிர் த‌ரும் நிழ‌லில்!
ம‌ன‌ம் ம‌ட்டும் பாலையின் நினைவுக‌ளில்...!
நினைக்க‌ கூட‌ வ‌லி தான்!
சில‌ உற‌வுக‌ளும்!
சில‌ நினைவுக‌ளும்!
இருந்தும் நினைப்ப‌தில்!
தான் இருக்கிற‌து!
வாழ்வின் ர‌க‌சிய‌ம்....!
நோய் ப‌ட்ட‌வுட‌ன் வெட்ட‌ ப‌டும்!
செடி போல‌ சுல‌ப‌ம் இல்லை!
ம‌ன‌ங்க‌ளின் துண்டாட‌ல்!
இருந்தும் வெட்ட‌ ப‌டுகிற‌து!
வார்த்தைக‌ளால்....!
என‌வே தான் நான்!
என் க‌விதைகளில்!
வெறும் செடிக‌ளும்!
ம‌ல‌ர்க‌ளுமே வைத்திருக்கிறேன்!
சில‌ ம‌ர‌ங்க‌ளும் ந‌ட்டு வைக்கிறேன்!
ப‌ற‌வைக‌ள் வ‌ரும் என‌

இந்த நட்சத்திரங்கள்?

ஷீ-நிசி
எந்த வெள்ளை புறா!
நடந்து சென்ற பாத சுவடுகள்!
இந்த நட்சத்திரங்கள்?!!
வானம் இரவு நேரங்களில்!
போர்த்திக் கொள்ளும்!
பொத்தல் நிறைந்த போர்வையா!
இந்த நட்சத்திரங்கள்?!!
பால் நிலா தோட்டத்தில்!
பூத்திருக்கும்!
தேன் மல்லிப் பூக்களா!
இந்த நட்சத்திரங்கள்?!!
வானம் சுத்தம்!
செய்யப்படுவதற்காய்!
தெளிக்கப்பட்ட சோப்பு நுரைகளா!
இந்த நட்சத்திரங்கள்?!!
மேக தேவதைகளின்!
உறக்கத்திற்காய்!
வான் மெத்தை மேல்!
துவப்பட்ட வெள்ளிப் பூக்களா!
இந்த நட்சத்திரங்கள்?!!
நிலாவிற்கு!
வர்ணம் பூசினப்போது!
சிந்தின துளிகளா!
இந்த நட்சத்திரங்கள்?!!
விதியினை எழுதும் எழுதுகோலில்!
மை உள்ளதா என்று!
இறைவன் உதறிப் பார்த்த துளிகளா!
இந்த நட்சத்திரங்கள்?!!
வானம் இரவு நேரங்களில்!
கீழே விழுந்து விடாமலிருக்க!
குத்தப்பட்ட குணடூசிகளா!
இந்த நட்சத்திரங்கள்?!!
நட்சத்திரங்களிடமே கேட்டேன்?!!
விடை கிடைக்குமுன்பே!
விடை பெற்றுக்கொண்டது;!
என் நட்சத்திர கனவு!
அலாரத்தின் கதறலால்.....!
ஷீ-நிசி

தமிழாய் தமிழுக்காய்..ஓ மனிதா

கவியன்பன் கலாம்
01.!
தமிழாய் தமிழுக்காய்!
---------------------------!
தமிழாய் தமிழுக்காய் தாழா துழைத்து!
அமிழ்தாய் பொழியு மழகு வழியில்!
மொழியாம் தமிழை முழுதாய் மொழிந்து!
பிழையின்றி வாழப் பழகு.!
சூழவரும் சூழ்ச்சிகள் சூழா தமிழாய் !
வாழ விழைந்திடு; வாழ்த்தும் தமிழர்!
வழிகள் பிறழாது வாழ்வாய் தமிழாய் !
இழியும் பழியும் இழுக்கு.!
ஒழுக்கம் தழுவி அழுக்குக் கழுவி!
விழுப்புண் விழைந்திட வாழ்வாய் தமிழுக்காய்!
வாழும் தமிழென வாழ்த்தும் வழியும்!
சூழும் புகழ்ச்சி சுழலும்.!
மொழியை அழித்தல்; முழியை மழித்தல்!
விழியை இழந்தால் வழியை ஒழிந்தாய்!
மொழியைப் பழித்தல்; மழையை இழந்து!
உழவு ஒழிந்த கழனி. !
!
02.!
ஓ மனிதா..!!!!
--------------------!
தேடுதல் என்று தீரும் நில்லடா!
ஓடுதல் நிற்குமா ஓய்ந்து சொல்லடா!
தேடியும் ஓடியும் திரவியம் பெறும்நீ!
வாடியே கடத்தும் வாழ்வால் பெற்ற!
நன்மை என்ன? நானும் வாழ்வின்!
உண்மைத் தேடி உண்ணவும் உறங்கவும்!
மறந்த வண்ணம் மண்ணிலே அலைகின்றேன்!
பறந்த வண்ணம் பாரெலாம்; நானே!
பிறந்த காரணம் புரியா(த) போழ்து!
திறந்த பூ...மியில் தினமுமே மனிதா...!!!!
தேடும் ஐயம் தீருமா எளிதா...???