தமிழ் கவிதைகள்

தமிழ் கவிதைகள்

நட்புக்காலம்

நிஹ்மத்
என் கல்லூரி நாட்களை !
நினைவில் வைத்துக்கொள்ள !
உன் அறிமுகம் !
என்னுள் !
இனிமையுடன் !
கலந்துள்ளது தோழனே ! !
சில நட்பின் !
அளவுகளை !
தூறலுடன் கணக்கிட்டால் !
உன் நட்பு !
என்னில் ஓர் அடைமழை ! !
இதயத்துடிப்புகளை !
காணமுடியாது !
ஆனால் உணர்ந்திடலாம் !
இதைப்போல்தான் ஒரு நட்பின் !
வலியும் உன்னால் உணரப்படுவதற்கு !
எத்தனை நாள் காத்திருந்தது ! !
மழைக்காலங்களில் !
சில தூறல்களில் மட்டுமே !
மண்ணின் வாசனை புலப்படுமே !
அதைப்போல்தான் !
உன் நட்பில் மட்டும் !
என் இதயத்தின் வாசம் !
புலப்பட்டது ! !
உன் ஞாபகங்கள் !
என் வீட்டில் நுழைந்தால்கூட !
சிம்மாசனமிட்டு !
உட்காரச்சொல்லுகிறேன் !
உன் நட்பிற்கான !
மரியாதை இது ! !
எவ்வளவு வெப்பம் !
சூரியனுக்கு வலிக்குமோ... !
இப்படித்தான் இருந்தது !
உன் நட்பின் தாக்கம் ! !
ஓட்டமாய் ஓடிவந்து !
கால் நனைத்துச் !
சென்றுவிடும் !
அலைகள் போலில்லை... !
இதயம் நனைத்து !
இன்றும் மனதில் ஒட்டியபடி !
நீ ! !
------நிஹ்மத் nih

இனியும் பொழியேன்.. அரூபமானவன்

கிண்ணியா பாயிஸா அலி
01.!
இனியும் பொழியேன்!
---------------------------!
கத்தி முனையில் நடப்பதாகவும்!
நொறுங்கும் மெலிதான!
கண்ணாடி இருக்கையில் அமர்வதானதுமான!
நுண்ணிதானங்களோடும் எச்சரிக்கையோடும்!
அலுவலகத்தில் வேணுமென்றால்!
தொடர்பாடலாம்.!
ஆனாலும் உன்னோடுமா..?!
பகலவன் வெம்மையில்!
படியிறக்கங் காணுமொரு பொலித்தீனாய்!
தினந்தினம் வெம்பி வெளுக்கிறதென் மென்மனசு!
உன் தொடர்புறக்கணிப்புகளால்.!
இன்னமும் எத்தனை தடவைகள்தான்!
தன்மானத்தைப் பிணை தருவது?!
என் நிஜ நேசிப்புகளை உனக்குள்ளுணர்த்திட.!
புரிந்து கொள்ளப்படாமலேயே கழிந்துபோன!
இறுதிக்கணங்களில்கூட!
ஒரு வேகஉந்துருளி உதைத்தெறிந்த தெருநாயாய்!
காயங்களின் அனுக்கங்களோடே!
மீளத் திரும்புகிறதென் பிரியங்கள்!
அவமானங்களைச் சொட்டியபடி.!
முன்னைய தடவையும் போலல்லாது!
முடிவு கொள்கிறது மனசு மிகவுமாய்…!
இனியும் பொழியேனென் கிரணங்களை!
வெறுமனேயும்!
இனி!
ஒரு உலர் காட்டில் பரவும்!
பெருந்தீயின் அதிவேகங்களோடே!
புசுபுசுவெனவே துளிர்த்துப் போகட்டுமென்!
பசியவனம்;!
இப்பிரபஞ்சமும் தாண்டியே…!
!
02.!
அரூபமானவன்!
--------------------!
அதீத முயல்வுகளினூடே சுபமாய் முடிவடைவதான!
மிகச்சில நிகழ்வுகளிலும்கூட அரூபமாயெனை!
எதிரீடு செய்யும் கிளைத்து நீண்ட!
கோரநகங்கள் சூடிய பெயரறியாச் சில ஊணுண்ணிகள்.!
வென்றுவிட வேண்டுமே யென்ற பதகளிப்போடு!
வெளியிலே என்றைக்குமே ஓயாத ஆட்டந்தான் அவைகளோடு.!
ஒவ்வோர் தடவையும் அவைகளே வென்றுவென்று!
மிக அகங்காரமாய் தம்துர்க்கரங்களை!
உயர்த்தி உயர்த்தி எம்பியபடியே கூக்குரலிட!
நானோ எப்போதுமே துவண்டு வீழ்வேன் களத்திலேயே.!
நிலம் புதைந்த நீர்க்குழாய்ப் பின்னலிலே!
எங்கோ ஓர் சிறு வெடிப்பு அரூபமாகவே.!
நானறியாமலே நீர் பொசிந்து பொசிந்து!
மண்ணுறிஞ்சிட, உச்சத்திலே இருத்திய!
நிறை கொள்கலனோ காலியாகிற்று!
சப்தமின்றியே.!
நான் சாய்ந்து விடக்கூடாதென்றா!
சட்டென உள்ளிழுத்துக் கொண்டாயுன் தோள்களை.!
என்றைக்கும் என்றைக்கும் போலவே!
என் தொழுகைப்பாய் மட்டுமே!
அளவீடு செய்திற்றென் கண்ணீரின் உப்புச்செறிவை.!
நீ மட்டுமேன் மௌனமாகவே இருக்கிறாய்?!
புலனறியா நிலமிருந்துங் கூட எனைப் பொசுக்கும்!
முரண்கள் நெருக்கீடுகள் போலவே!
நீயுங்கூட அரூபமானவன் என்பதனாலா?

ஏக்கம்

அழகு
கவி ஆக்கம்: அழகு!
விழி மூடிய!
இமைகள்..!
வழி தேடும்!
கண்கள்!
நிலை மாறும்!
உலகில்!
அவள் நிழலில்!
நான் குருடனாய்!
----------------------!
பேச்சு!!
!
முப்பால் பெருமை பேசும்!
தமிழ்ப்பால் குடித்து!
வளர்ந்தவனிடத்தில்!
தொடர்பு எல்லைக்கு!
அப்பால் இருக்கிறார்கள்!
என்று கணிணி பேசுகிறது.!
கவி ஆக்கம்: அழகு!
தொடர்புக்கு: 81608619

மௌனம்

றஹீமா-கல்முனை
வார்த்தைகள்!
வலிக்குமென்று!
மனசு சும்மா இருக்கப்!
பிரியப்படும் ஒரு பொழுது!
மௌனம்.....!
வார்த்தைகளை!
மிச்சம்பிடிக்கிற!
யுத்தியல்ல....இது!
உன்னைப்பற்றி!
உனக்கே!
உணரவைக்கும்!
இன்னுமோருபாஷயின்!
மொழிபெயர்ப்பு...!!!
போதிமரத்தடியில்!
புத்தனை!
புதுப்பித்ததும்!
இந்த மௌனமே!
சுமக்கத்தெரிகிரபோது!
மௌனம் - ஒரு!
சுகமான பயணம்......!!
தொட்டதும்!
சிணுங்குகிற!
சில்லறைகளை விடவும்....!
மௌனமாய் கிடக்கிற!
காகித நோட்டுகளுக்குத்தான்!
கனத்தமரியாதை...!!!
பகலெல்லாம்!
கத்தியலைகிறது....!
காகம்...!!!
இதுபெரிய இழவென்று..!
கடைசியில் !
கல்லெறிகள் விழும்...!
மௌனமாய்!
காத்திருக்கவிட்டு....!
கூவும்!
குயிலோசயில்தான்!
கொள்ளைப்பிரியம்..!!!
வேறுவேலையின்றி!
உளறியபடியே!
கிடக்கும்...!
கடல்..!!
கடைசியில்!
தாகமெடுக்கையில்....!
தண்ணீர்தேடி!
எங்கே போய் முட்டினாய்??!
கடற்கரையிலா???!
மௌனமாய்!
கிடக்கிற!
ஆறு குளம்!
நோக்கித்தானே ஓட்டமெடுத்தாய்!
மௌனம்!
முற்றுப்புள்ளியல்ல...........!
இன்னுமொருதுவக்கத்திர்கான!
அஸ்திவாரம்...!
எல்லா மௌனமும்!
சம்மதத்திற்கான!
அடையாளமாய்!
ஒப்புக்கொண்டு!
தப்புக்கனக்குப்போடாதே...!
எப்படியோ....!
சுமக்கத்தெரிகிரபோது!
மௌனம் - ஒரு!
சுகமான பயணம்

அழுகை அவதாரம்

கோட்டை “பிரபு
அனுதாப அரங்கேற்றங்களாய்!
உணர்ச்சிக் குவியல்களாய்!
ஆற்றாமையின் ஆற்றுமொழியாய்!
இழப்பின் புன்னகையாய்!
ஏமாற்றத்தின் முடிவாய்!
உடலின் இறுதி உறவாய்!
சிசுவின் தேவை வெளிப்பாடாய்!
மகளிரின் மந்திரக்கணையாய்!
மகிழ்வின் எல்லையாய்!
நடிப்பின் அளவுகோலாய்!
உயிர்களின் உடைமையாய்!
பிரிவின் முகவரியாய்!
தேடலின் விரக்தியாய்!
ஊடலின் தொடக்கமாய்!
கூடலின் முடிவாய். என!
என் அவதாரங்கள் தொடரவே செய்கிறது!!
கவிதை: கோட்டை பிரபு

பூனையும்நாயும்... குட்டி மானின்

தீபச்செல்வன்
பூனையும்நாயும்... குட்டி மானின்...!
--------------------------------------------------!
1.பூனையும்நாயும் நிரம்பியவீடு!
என் சப்பாட்டிற்குஅருகில்!
என்பூனை காவலிருக்கிறது!
சாப்பாட்டின் மிகுந்தவாசனையில்!
உடைகள் வேகமாக கழறுகின்றன.!
வீட்டிற்கு வெளியே இப்பொழுதெல்லாம்!
மனிதர்களை சந்திக்கமுடிவதில்லை!
நடமாடித்திரிபவர்களிடம்!
உண்மை முகங்கள்!
மருங்கியிருக்கின்றன!
வீடு வரும்பொழுதெல்லாம்!
அந்த மனிதர்களின்!
பொய்முகங்கள் பின்தொடர்ந்து!
துன்புறுத்துகின்றன.!
பூனை கால்களை உரசும் பொழுதெல்லாம்!
எல்லா வலிகளும் அகலுகின்றன!
நிம்மதியை கெடுக்கிற!
ஒலிகளின் மத்தியில்!
பூனையின் குரல்!
சங்கீதமாய் ஒலிபரப்பாகிறது.!
எங்கள் வீட்டில்!
பூனைக்கும் நாய்க்கும் கூட!
நல்லநெருக்கம் இருக்கிறது!
அவைகளின் தோற்றம் விகாரப்பட்டு!
நெருக்கத்தின் வடிவமாய்!
சேர்ந்து விளையாடிக்கொண்டிருந்தன.!
பூனையும் நாயும்!
எப்பொழுதும் ஞாபகமாயிருக்கின்றன.!
வீட்டில் நெருக்கமும் ஆறுதலும் பரவுகிறது!
அமைதியும் ஒழுங்கும் நிலவுகிறது!
பூனையும் நாயும் கூடிய எனதுவீடு!
எப்பொழுதும்!
எல்லாவற்றுக்குமாக காத்திருக்கிறது.!
!
2.குட்டி மானின் புள்ளிகள்.!
!
அந்த குட்டிமானை யாரோ!
துரத்திக்கொண்டிருக்கிறான்!
துரத்திக்கொண்டு வருபவன்!
இராமனாக இருக்கலாம்!
இரவணனாக இருக்கலாம்!
மான்மீது!
சீதையும் ஆசைப்பட்டிருக்கலாம்!
சூர்ப்பனையும் ஆசைப்பட்டிருக்கலாம்.!
குட்டிமானின் கண்களிள்!
தவிப்பு பெரியளவில்!
ஊறி சிந்திக்கொண்டிருந்தது.!
அந்த மான் மாரீசனாக இருக்கலாம்!
சூர்ப்பனையாக இருக்கலாம்!
சீதையாக இருக்கலாம்.!
இப்பொழுது மானாகவே தெரிகிறது!
மானின் காலடியில்!
பொறிகள் இருக்கலாம்!
கால்சுவடுகளில் பொறிகள் முளைத்திருக்கலாம்.!
மானே பொறியாக இருக்கலாம்.!
கால்கள் இடருப்பட!
கால்களை விரித்து ஒதுக்கி!
மான் வேகமாக ஓடிக்கொண்டிருக்கிறது!
மானகா மாறியவர்களும்!
மானிற்கு ஆசைப்பட்டவர்களும்!
அலைந்து கொண்டிருக்கிறார்கள்.!
காடுகள் நீண்டு பரந்திருக்கின்றன.!
இப்பொழுது!
மானைப்போலவே!
எல்லோருடைய கண்களிலும்!
தவிப்பு பெரியளவில் சிந்துகிறது.!
- தீபச்செல்வன்

காட்சியாய் சாட்சியாய்

கண்ணப்பு நடராஜ்
இரவின் இரும்புத் திரையை!
என் இமைகளுக்குள் ஆணியடித்துவிட்டமேட்டிமையான!
கோட்டையே நீ கொண்டாடு!!
நாலு திசைகளையும் முடிச்சுப்போடவென!
ஆகாயவெளியை ஆதாயப்படுத்தி அசுத்தப்படுத்தவென..!
ஆலயங்களின் கோபுரங்களிலும்!
பள்ளிக்கூடங்களின் அத்திவாரத்திலும்கல் பெயர்த்து!
உன்னரங்க அடுக்குகள் காவும் தூணையெல்லாம்!
நிலம் துளைத்து நீ பலம் காட்டுகிறாய்...!
ஓ.. ரோமனியப் பேரசன் ரைற்றூஸின் மண்டைக் கனம் போல்!
ஓரு மரணவிளையாட்டு மைதானம் தாங்கிய பெருங் கூரையே..!
நிமிர்ந்த கற்தூண்களே இரும்பு முகத்தில் தலைகவிழ்ந்த ஒருவன் கிளாடியேற்றனாய்..!
றோமின் ஆதாமே நீ எங்கே? றோமூலெஸ் நீ எங்கே?!
டைபர் நதியின் புல்வெளியில் தவழ்ந்துநரிப்பால் குடித்துப் போர்த்தாகம்!
கொண்டவனே நீ எங்கே?!
செவ்வாய்க் கிரகத்தின் கர்ப்பத்தில் தவழ்ந்த!
இரத்தவர்ணம் செந்நிறச் சுடராய்;!
...ரோமின் முதல் பால் ஊட்டி வளர்ந்தபோர்ப்புத்திரனே..நீ எங்கே?!
றோமின் ஆதாமே நீ எங்கே?றோமூலெஸ் நீ எங்கே?!
காய்ச்சிய இரும்புக் கோல்காட்டி என் கண்ணைப் பெயர்த்துப் பொசுக்க.. மைதானம்!
விரட்டும் றோமின் மைந்தர்கள் ஈட்டியோடு..!
றோமின் ஆதாமே நீ எங்கே?றோமூலெஸ் நீ எங்கே?!
பூமித் தாயே பார்!!
உன்னில் உயர்ந்து தலை கவிழ்ந்து நிற்கும் புதைகுழியிது!
அதோ ஆர்ப்பரித்து எழுகின்ற ஆயிரமாயிரமயரமாய்...!
கொண்டாட வந்த அரங்கு நிரப்பிய வெறியர்கள்..!
வறியர்கள் மரணவலியில் மகிழ வந்த!
இந்தச் சந்சோச மனிதர்கள் யார்...?!
கதாநாயகர்களை அடிமையாக்கிபுறமுதுகிட்டு புண் பட்டு வீழ்ந்து;!
கொண்டவர்களின்மரணவலியில் மகிழ வந்த இந்தச் சந்சோச மனிதர்கள் யார்...?!
இதோ இந்த மரணக் கோட்டையில் தான் கதாநாயகர்களைக் காயப்படுத்தி...!
அசீரியாவின் சிங்கங்களைக் கொண்டுவந்து!
எகிப்தின் நீர்யானைகளை நிர்மூலமாக்கி!
தீக்கோழிகளைத் தீர்த்துவிட்டு!
ஆபிரிக்காவின் ஆயிரக்கணக்கான மலையானைகளை சாய்த்துவிட்டு...!
அந்த எலும்புக் குவியலினில் உன் சந்தோசக் கோப்பைகளை சூளைவைத்துவிட்டு,!
மனித எலும்புகளைக் கையிலேந்திக் கொண்டு கொடிக்கம்புகளாக்கி ஆட்டிக்கொள்..!
றோமே றோமே ..!
உன்னைத் துளைத்து உயரத்தெரியும் இந்தக் கோட்டையிலே!
இந்த உயிர்களை நீ விளையாடிய இந்தக் காலம்!
கரிகாலம் என்று வெட்கப்படு...!
காடுகளின் களஞ்சியங்களைக் கொள்ளையிட்டுக்!
இந்தப் பூமியின் உயிர்க்குடும்பத்தின் உச்சியிலே கொள்ளிவைத்து விட்டதாய்க்!
கொக்கரி...!
76 நுழைவாயில்கள் எல்லா ஊரும் எழுந்து ஊர்ந்து வரும்!
விழுந்து போகும் மரணவலிக்கு வழிகள்!
போதையில் பிசாசுகளாய்..!
விழும் பிணம் கண்டு கணக்கெழுதும்..!
இந்த வாயில்களைப் பிணம் தின்னும் பேய்கள் காக்கும்...!
ஓஓஓஓஓஓஓ!
மானிடம் செல்லாத வாசலைத் தாங்கிய!
கொலேசெயக் கொலைக் கூடாரமே!
கொட்டுண்டு கிடக்குது இங்கே தொலைந்த அடிமைகள் இரத்தம்..!
ஐயகோ..!
இடுப்பை இறுக வரிந்துகொண்டு மனதில் ஒரு கேள்வியோடு உயிர் மொட்டு மலராதா?!
வெளிச்சம் வெடிக்காதா ?ஆயிரம் ஆண்டுகளாய் ஆளப்படும் அடிமை மனைவியரின்!
முக்காட்டு முனகல்கள்!
என் தேசத்தின் நேசத்தின் வலியாய்..!
றோமே றோமே விழித்துக் கொள்!
எம் வலியைக் காணவரும் இந்த வாயில்களிலெல்லாம்!
உன் சந்தோசம் தொலைந்ததாய்ச் சொல்..!
நாம் அழ நீ சிரியாதே...!
திராட்சை ரசம் வழியும் விருந்துகள்!
வியர்வையில் ஒட்டாத பட்டாடைகள்!
கையுறையும் மார்க்கவசமும்!
ஓ.. இரும்பை இரண்டாவது கவசமாக்கி!
போரைப் பேராக்கி வாள் மனிதானாய் ...!
மூச்சற்று நான் உன்னில் விழுவேன் மரணவலியில் நான்!
சூலம் தாக்கிடத் துடிப்பேன்..!
கிளாடியேற்றன் கைதூக்கி!
உன் இரக்கத்திற்காய் இந்தப் பெரு உயிரின் உன் சகோதரன் நிற்க..!
பெருவிரலைக் கவிழ்த்து நீ நிராகரிப்பாய்..!
பேச்சற்று நிற்கும் என் வீடு!
நீண்டு வீழ்ந்து கிடக்கும் வலி கொண்ட என்னோடுயாரும் வரார்..!
தோல்வி கண்ட அடிமையைப் பெரும் பேரலையாய்கேலிகள்...!
பின்தலையில் !
சம்மட்டி மோதும்!
இந்த அடிமைத் தலையில்!
அந்த மனிதம் செத்த மனிதர்களின்!
சிரிப்பும்கோசங்களும் சம்மட்டியாய் மோதும்..!
இதோ இந்த பிடரியெலும்பில்!
கனத்த சூலம் துளைக்க நாளைய சாட்ச்சிக்காய்!
நான் றோமின் கதாநாயகன்விதைக்கப்படுகின்றேன்..!
காலங்களைக் கடந்து கதிராய்க் கவிதை கொண்டு தினமும் சூரியனோடும் சுத்த!
விண்மீன்களோடும் பிறப்பேன்...!
நான் பிறப்பேன்..!
கொலேசயத்தைத் தூக்கிப்பிடிக்கும் கற்தூணே!
என்றும் இந்த இருளை உன்னில் ஆணியடித்து..!
இடிந்து!
மானிடம் செத்த காலத்தின் அவலத்தின் தொல்பொருள் காட்சியாய் ..சாட்சியாய்...!
-நடராசா கண்ணப்பு

இயல்பு.. முகமூடிகளோடு

எம்.தனபாலன், மலேசியா
01.!
இயல்பு!
---------!
வாழுதலில்!
இவ்வளவு சிக்கல்!
எனத் தெரிந்தும்!
சிக்கென!
விடுப்பட முடியவில்லை!
ஒரு போதும்...!
உடலைத் தின்றுவிடும்!
அவசரத்தில்!
மண் மட்டும் அல்ல!
அழுகிய நினைவுகளும்....!
எல்லாம்!
துடைக்க த் துடைக்கத்!
துருப் பிடித்துப் போகிறது!
உள்ளம்...!
இருந் தும்!
விடைக் கொடுக்கும்!
இயல்பும்!
விடைப்பெறும்!
பொறுமையும்!
வாய்த்ததில்லை!
ஒரு நாளும்...!
02. !
முகமூடிகளோடு...!
-----------------!
வெளுத்து ப் போகும்!
என அறியாமையில்!
வெந்து சாகிறது!
மனம்..!
தேடி தேடி!
அலைந்ததில்!
கண்டெடுத்தவை!
கனவுகள் மட்டும்..!
நிஜங்கள்!
இன்னும்!
நிர்வாணமாய்.....!
முகமூடிகளோடு!
வாழத்தெரியவில்லை!
கீறல்களைச் சுமந்துக்!
கொண்டு....!
காயங்கள் இன்னும்!
தழும்போடு!
நிரந்தரமாய் வலிகளைக்!
கற்பித்துக் கொண்டே

உணர்ச்சி விடியல்

கச்சை துரைம
உன்னை நினைக்கையில்!
உணர்ச்சிகள் என்னைத் தின்னுகின்றன!
உன்னோடு உறவாடுகையில்!
என்னை அறியாமல் புதுப்புதுப் உணர்வுகள்!
பூனை போல் ஊர்கின்றன!
உன் தேகம் தொட்டவுடன்!
பூத்துக் குலுங்குகிறது!
என் பூப்பெய்திய புல்லாங்குழல் உடம்பு!
இப்டியே இருந்து விட்டால்!
இந்த யுகம் என் யோனிக்கக் கிடைத்த!
இன்ப யுகம்!
இன்னும் என்னை அணைத்துக்கொள்!
இறுக்கம் என் உடலில் !
சிற்சில அறிவியல் மாற்றத்தை உண்டாக்குகிறது!
என் மார்புக் கலகங்கள்!
உன் புஜத்தைப் புரட்டிப் போடுகின்றன!
என்னிலிருந்து விடுபடாத உன் தேகம்!
உடலின் பல இடங்களில் முத்தமழை பொழிகிறது!
இவ்வாறே நீண்ட இரவு!
திடீரென விடிகிறது !
விடியல் விளையாட்டும் போதும் !
வினையைத்தேடு என்றது

கவிமதி கவிதை -சித்திரை

கவிமதி
களப்பணியில் !
சாகவேண்டுமென் !
சகலமும் !
தூசுகளுக்கல்ல !
துவக்கிற்கஞ்சாதவை !
எமது கவிகள் !
பூஞ்சையற்றதல்ல !
எம் புணர்சென்மம் !
வன்மம் !
வாங்கி வாங்கி !
இருத்தலில் !
கிடையாதெங்கள் !
வலி !
மறுத்தபொழுதினும் !
மாசற்ற வீரம் !
எமதுவீரம் !
எமக்கு !
மறுபிறவியென்பதே !
மண்ணறையில் தொடங்கும் !
பெருத்த விலையில் !
பொருமி விடியுமெங்கள் !
காலம். !
!
பிச்சைபாத்திரத்திற்கு !
ஏங்குமென்கிறபோது !
அட்சயப்பாத்திரங்கள் !
அருகருகே !
அடுக்கப்பட்டிருந்தும் !
திரைவிலகும் !
திசையிற்கழியும் !
கத்தை கத்தையான !
காலம் !
அந்திமக்குமரிகள் !
கூடியடிக்கும் !
கும்மிகளுக்கிடையில் !
சிதறி தெரிக்கும் !
காற்று பிசிரென !
கணபொழுதுளில் !
சறுக்கித்தான் போகிறதெம் !
உச்சவரம்பின் !
பிடிவாதங்கள் !
!
உத்திரவாதம் !
கொடுக்கப்பட்ட !
வேலையில் !
அடக்கமாட்டாது !
கணுப்பிதுக்கி !
வெளிச்சப்பட்டதெம் !
கொளுந்து !
உச்சபட்ச !
இறப்பிற்கு !
பொய்க்கும் !
எந்த உயிர்க்கும் !
சந்ததி வளர்க்கும் !
சமப்பொழுகளின்றும் !
விட்டுவிலகி !
விசுக்கென !
பறக்கிறதெம் !
தும்பிக்கூட்டம் !
-கவிமதி (அசன்பசர்) !
!
*** நான் எனது பெயரினை (அசன்பசர்) மாற்றிவிட்டு தமிழ் பெயரான கவிமதி எனும் பெயரினை ஏகமனதாக அறிவித்துள்ளேன்