சத்தி சக்திதாசன் !
என்னிதயக் கதவுகளை மெல்லத்தட்டு !
ஓசையைக் கேட்கும் பலம் !
ஏனொ இதயச் சுவர்களின் !
கற்களுக்கு இல்லை !
உன் கேள்வி நன்றாகவே !
எனக்குப் புரிகிறது !
கைகோர்த்து நடந்து !
பழக்கமற்றவன் வாழ்க்கையெல்லாம் !
எப்படி தோழனாவாய் என்று !
சின்னப்பெண்ணே மெல்லத்தட்டு !
உன் கழுத்தில் நாணேற்றி !
நானுனக்கு கணவனாய் பதவியேற !
சந்தர்ப்பம் தா , அங்கே நான் நிகழ்விக்கும் !
சம்பவங்கள் என்னை உன் !
தோழனாக்கும் !
பலர் தட்டிய போதும் திறக்காத !
என்னிதயம் !
தட்டவென நீ கைகளை உயர்த்தியபோதே !
திறந்து கொண்டதே !
இதுதான் பூர்வஜென்மப் !
பலனென்பரோ !
பூங்காற்றே நான் மலரிதழ் !
மெல்லத்தட்டு இல்லையேல் !
உதிர்ந்து விடுவேன் !
தேன்வண்டே மெதுவாக !
சிறகை விரி !
அதன் சலசலப்பில் என் !
சப்த நாடியும் !
ஒடுங்கிவிடும் !
பொன்வண்டு வளர்க்கும் ஆசை உனக்கு !
பறக்கும் என்மனதைப் பிடித்து !
உன்னிதயக் கூட்டில் !
அடைத்து விட்டாய் !
பருவ மழையே நனைந்தால் !
ஜீரமேறி நலிந்துவிடுவேன் !
மெல்லத்தட்டு !
உள்ளத்தை !
உன்வீட்டு முற்றத்தில் !
தொலைத்து விட்டேன் !
உன் மனமெனும் பற்றைக்குள் !
விழுந்ததுவோ !
காதலை எனக்கு !
கல்லூரியின்றிக் !
கற்பித்தவளே !
காலமெல்லாம் நான் என் !
காதோடு ஒரு கவிதை சொல்லி எனைக் !
கைதாக்கி உனதாக்கி எனைத்தாக்கியது போதும் !
இனி வரும் வேளையிலே !
உன் பூமுகத்தின் மென்மைப்போல் !
என் இதயக் கதவுகளை !
மெல்லத்தட்டு மேகம் விலகும்
சத்தி சக்திதாசன்