என் கவிதைகளில்!
ஒன்றும் இல்லை!
வெறும் செடிகளும் மலர்களுமே...!
சில மரங்களும் நட்டு வைக்கிறேன்!
பறவைகள் வரும் என...!
இரத்தம் தோய்ந்த சுவடுகளும்!
முலாம் பூசிய முகங்களும்!
என்னோடு சினேகம் கொண்ட!
நாட்கள் மறக்க முடியாமல்...!
ஒற்றை வழி பாதையில்!
என் பயணம்!
குளிர் தரும் நிழலில்!
மனம் மட்டும் பாலையின் நினைவுகளில்...!
நினைக்க கூட வலி தான்!
சில உறவுகளும்!
சில நினைவுகளும்!
இருந்தும் நினைப்பதில்!
தான் இருக்கிறது!
வாழ்வின் ரகசியம்....!
நோய் பட்டவுடன் வெட்ட படும்!
செடி போல சுலபம் இல்லை!
மனங்களின் துண்டாடல்!
இருந்தும் வெட்ட படுகிறது!
வார்த்தைகளால்....!
எனவே தான் நான்!
என் கவிதைகளில்!
வெறும் செடிகளும்!
மலர்களுமே வைத்திருக்கிறேன்!
சில மரங்களும் நட்டு வைக்கிறேன்!
பறவைகள் வரும் என

சம்பத்குமார்