01.!
தமிழாய் தமிழுக்காய்!
---------------------------!
தமிழாய் தமிழுக்காய் தாழா துழைத்து!
அமிழ்தாய் பொழியு மழகு வழியில்!
மொழியாம் தமிழை முழுதாய் மொழிந்து!
பிழையின்றி வாழப் பழகு.!
சூழவரும் சூழ்ச்சிகள் சூழா தமிழாய் !
வாழ விழைந்திடு; வாழ்த்தும் தமிழர்!
வழிகள் பிறழாது வாழ்வாய் தமிழாய் !
இழியும் பழியும் இழுக்கு.!
ஒழுக்கம் தழுவி அழுக்குக் கழுவி!
விழுப்புண் விழைந்திட வாழ்வாய் தமிழுக்காய்!
வாழும் தமிழென வாழ்த்தும் வழியும்!
சூழும் புகழ்ச்சி சுழலும்.!
மொழியை அழித்தல்; முழியை மழித்தல்!
விழியை இழந்தால் வழியை ஒழிந்தாய்!
மொழியைப் பழித்தல்; மழையை இழந்து!
உழவு ஒழிந்த கழனி. !
!
02.!
ஓ மனிதா..!!!!
--------------------!
தேடுதல் என்று தீரும் நில்லடா!
ஓடுதல் நிற்குமா ஓய்ந்து சொல்லடா!
தேடியும் ஓடியும் திரவியம் பெறும்நீ!
வாடியே கடத்தும் வாழ்வால் பெற்ற!
நன்மை என்ன? நானும் வாழ்வின்!
உண்மைத் தேடி உண்ணவும் உறங்கவும்!
மறந்த வண்ணம் மண்ணிலே அலைகின்றேன்!
பறந்த வண்ணம் பாரெலாம்; நானே!
பிறந்த காரணம் புரியா(த) போழ்து!
திறந்த பூ...மியில் தினமுமே மனிதா...!!!!
தேடும் ஐயம் தீருமா எளிதா...???
கவியன்பன் கலாம்