நண்பனுக்கொரு.. நெஞ்சுக்குள்ளே - சத்தி சக்திதாசன்

Photo by FLY:D on Unsplash

நண்பனுக்கொரு மடல்.. நெஞ்சுக்குள்ளே ஒரு ராகம்!
01.!
நண்பனுக்கொரு மடல்!
---------------------------!
அன்பு நண்பா,!
கண்களுக்குள் உறக்கம் நுழைய!
மறுக்கின்ற வேளையடா!
நெஞ்சத்தின் ஓரங்களில்!
வேதனையின் கீற்றுக்கள்!
நம் தாய்மண்ணின் ஓலம்!
நமைச் சுற்றி ஓயாமல் ஒலிக்கின்றதே!
தீராத போர் என்னும் துன்பம்!
தீர்க்கின்ற உயிர்களின் பாரம்!
தாங்காமல் துவண்டிடும் உள்ளம்!
தூங்காமல் தவித்திடும் நெஞ்சம்!
அங்கொன்றும் இங்கொன்றுமாய்!
அரசியல் பேசிடும் கூட்டம்!
அதுவல்ல மக்களின் நாட்டம்!
அல்லல்கள் தீர்வதே ஈட்டம்!
எண்ணத்தின் பாதி இங்கே!
எழுத்தாக உனைத் தேடி ஓடும்!
சொல்லாத எண்ணங்கள் கோடி!
நெஞ்சுக்குள் புதைந்தேதான் போகும்!
நினைவுகளில் தேந்துளி சிந்தும்!
கனவுகளில் காட்சிகள் மாறும்!
நாம் வாழ்ந்த காலம் நெஞ்சில்!
வந்து வந்தேதான் போகுதடா!
வாலிப வயதில் நாம் கண்ட!
வசந்தங்கள் இன்றங்கில்லை!
கண்களில் நீரோடு ஏக்கத்தின்!
வாசலில் எத்தனை மழலைகள்!
வருத்துது நெஞ்சினை நான் தினம்!
கண்டிடும் கோலங்கள்!
போரில்லா வாழ்வொன்றினைத் தேடி!
கால்நூற்றாண்டுக்கு மேலாய்!
இன்னல்கள் மத்தியில் உழன்றிடும்!
இன்னுயிர் உறவுகளின் எண்ணங்கள்!
இதயத்தைச் சிதைக்குது ஏனோ!
ஈட்டியாய்த் தைக்குது!
சர்வமும் இழந்திட்ட மக்களை!
சர்வதேசமும் கைவிட்டதோ ? சொல்லு!
சந்தையில் விலைப்படும் பலிக்கடாக்களாய்!
சொந்தங்கள் துடித்திடும் பொழுதடா!
போரினி மறையட்டும் நாம் பூமியில்!
போன உயிர்கள் போனதாய் இருக்கட்டும்!
பொழுதொன்று விடியட்டும் எம் மண்ணில்!
புறப்படு தொடர்ந்து நாம் பிரார்த்திப்போம்!
!
02.!
நெஞ்சுக்குள்ளே ஒரு ராகம்!
-----------------------------------!
நெஞ்சுக்குள்ளே ஒரு ராகம்!
நேசத்தோடு கூடும் நேரம்!
நினைவலைகளில் பயணிக்கும்!
கனவுக்கப்பல் கரையேறும்!
தேன் சிந்தும் வானம் அங்கே!
தெளிவாகும் மெய் ஞானம்!
மலர் வீசும் சுகந்தவாடை!
மனம் கொள்ளும் ஆன்ம நிலை!
கணநேரம் மூடும் விழிகள்!
காணுவதோ அழியாக் கோலம்!
கண்கள் இருந்தும் காண்பதில்லை!
காலமிட்ட கோலம் தன்னை!
திரையரங்கில் அரங்கேறும்!
தினம் தினமும் நாடகங்கள்!
திரைச்சீலை விழுந்த பின்னும்!
தொடரும் கதை அறிவாரோ!
இதயமென்னும் காகிதக்கப்பல்!
ஏற்றுவதோ இரும்புச்சுமை!
மறுகரையைச் சேருமுன்னே!
மூழ்கிடுவதே உண்மையன்றோ!
வரும்போதும் எதுவுமில்லை!
விழும்போதும் ஏதுமில்லை!
இடையில் வரும் உடமைகள்!
இதுக்குத்தானா யுத்தங்கள்!
ரத்த ஓட்டம் தளர்ந்ததுமே!
புத்தி கொஞ்சம் விரியுதப்பா!
முத்தியடையும் வேளைதேடி!
சித்தமெல்லாம் தெளியுதப்பா
சத்தி சக்திதாசன்

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in

There are no comments yet.