வெளிக்குநகரும்.. நிலவிலே
தீபச்செல்வன்
பேசுவோம்!
!
01.!
வெளிக்குநகரும் மரங்கள்!
--------------------------------!
எந்த மரங்களும் எனது கையில்லை.!
நிழலுக்கான அதிகாரங்கள்!
பறிபோன நிலையில்!
தோப்பைவிட்டு!
நான் துரத்தப்பட்டுவிட்டேன்.!
எனினும் அந்த மரங்களிலேயே!
எனது இருப்பும் ஆவலும்!
மொய்த்துக்கொண்டிருக்கின்றது.!
நான் எதுவும் செய்யாதிருந்தேன்!
நிழலில்லாத!
வெம்மை வெளிகளில் காலை!
புதைத்தபடி நிற்கின்றேன்.!
தூரத்திலிருந்து தோப்பைப் பார்த்து!
மனதாறிவிட்டோ!
நிழலை ரசித்துவிட்டோ!
வாழமுடியாதிருக்கிறது.!
ஒவ்வொரு இரவிலும்!
ஒவ்வொரு மரமாக!
குறைந்துகொண்டு வருகிறது.!
!
எனது மரங்களின் உயிர் குடிக்கப்பட்டு!
கட்டைகளாகத் தகனம் செய்யப்படுகின்றன.!
நான் எந்த மரங்களையும்!
நாட்டாதவன்!
அந்த மரங்களுக்கும்!
நீர் ஊற்றாதவன்.!
எனக்காக வழங்கப்பட்ட மரங்களே!
பறிபோய் அழிகிறபொழுது!
கோடரிகளைத் தடுக்க இயலாதவன்.!
அப்படியாயின் எனக்கு!
வெம்மை தானே பரிசளிக்கப்படும்.!
நிழல்தீர்ந்த எரிந்த காட்டின்!
தணலில்தான்!
நடக்கவிடப்படுவேன்.!
நாளைக்கு எனது பிள்ளைகள்!
நிழலுக்காகத் துடிக்கிறபொழுது!
நான் எந்தத்தோப்பின் வாசலில் நிற்பேன்!
யாரிடம் நிழலுக்குக் கையேந்துவேன்.!
!
என்னால் அவர்கள் அலையப்போகிறார்கள்!
அவர்களின் தலை!
நிழல் இன்றி கருகிற பொழுது!
இந்த வெம்மையையா வைத்து!
குடைபிடிக்கப்போகின்றேன்!
கோடரிகளை மீறி!
என்னைக் கடந்து!
மரங்கள் வெளிக்கு நகர்கின்றன.!
02.!
நிலவிலே பேசுவோம்!
-----------------------------!
நிலவு உடைந்துவிடவில்லை!
உனது திசை கறுத்திருக்கிறது.!
!
பகிரவேன்டிய சமாச்சாரங்களுக்கு!
அப்பால் சுருங்கிய!
வழியின் இடைநடுவில்!
உனது பயணம் தள்ளாடுகிறது!
!
உனது புன்னகையின்!
கலவரம் புரியாது!
உதடுகளை கணக்கெடுத்த!
குழந்தைகள் முகங்களை!
பொத்திக்கொள்கின்றனர்.!
எங்களுக்கு ஒளிவீசும்!
நிலவுமீது!
கூரிய கத்தியை வீசிவிட்ட!
உனதுதிசை இருளாகிறது.!
உனது குரலில் யதார்த்தமும்!
செயல்களில் கருணையும்!
ஒரு போதும்இருக்கப்போவதில்லை!
இதுவரையிலும்!
உனது செயற்கைமழை!
பெரியளவில்!
அடித்து ஓய்ந்திருக்கிறது.!
எந்தவிதமான குளிச்சியும்!
அடங்கியிருக்காத!
நிரந்தரமும் உறுதியும் இல்லாத!
உனது அதிகாரத்தின்!
செயற்கை மழையில்!
எனது சிறகுகள்!
ஒடுங்கிவிடவிலை!
நான் நேசிக்கும் வழிகள்!
கரைந்து விடவில்லை!
எனது வேர்கள் அழிந்துவிடவில்லை.!
உனது மலைதான் சிதைகிறது.!
வெளிகளை தடைசெய்து!
முகங்களை சிறைப்பிடித்த!
உனது பாரியமலை!
அதிவேகமாக சிதைய!
மிகப் பெரும்கற்கள்!
உனது முகத்தை!
நோக்கியபடி வருகின்றன!
நீ உருவாக்கிய கிளர்ச்சியில்!
உனது இருப்பு வெடித்து சிதறுகிறது.!
எனது அடையாளம் ஒளிர்கிறது!
நம்பிக்கை சிவக்கிறது.!
எந்த பதற்றமுமின்றி!
மிக அமைதியாக இருகிறது!
எங்கள் நிலவு.!
!
இருப்புக்கான புரட்சியுடன்!
நாங்கள் போராடுவோம்!
எங்கள் அழகிய!
விடுதலை பற்றி!
எல்லோருமாக பேசுவோம்!
உரிமையுடன் செயற்படுவோம்!
குற்றமில்லாத நிலவின்!
மிக நீணடவெளி!
எல்லையற்று இருக்கிறது!
அவசியம்!
எங்களுக்கு தேவையான!
கருணைக்கும் விடுதலைக்குமாக.!
-தீபச்செல்வன்