எந்த வெள்ளை புறா!
நடந்து சென்ற பாத சுவடுகள்!
இந்த நட்சத்திரங்கள்?!!
வானம் இரவு நேரங்களில்!
போர்த்திக் கொள்ளும்!
பொத்தல் நிறைந்த போர்வையா!
இந்த நட்சத்திரங்கள்?!!
பால் நிலா தோட்டத்தில்!
பூத்திருக்கும்!
தேன் மல்லிப் பூக்களா!
இந்த நட்சத்திரங்கள்?!!
வானம் சுத்தம்!
செய்யப்படுவதற்காய்!
தெளிக்கப்பட்ட சோப்பு நுரைகளா!
இந்த நட்சத்திரங்கள்?!!
மேக தேவதைகளின்!
உறக்கத்திற்காய்!
வான் மெத்தை மேல்!
துவப்பட்ட வெள்ளிப் பூக்களா!
இந்த நட்சத்திரங்கள்?!!
நிலாவிற்கு!
வர்ணம் பூசினப்போது!
சிந்தின துளிகளா!
இந்த நட்சத்திரங்கள்?!!
விதியினை எழுதும் எழுதுகோலில்!
மை உள்ளதா என்று!
இறைவன் உதறிப் பார்த்த துளிகளா!
இந்த நட்சத்திரங்கள்?!!
வானம் இரவு நேரங்களில்!
கீழே விழுந்து விடாமலிருக்க!
குத்தப்பட்ட குணடூசிகளா!
இந்த நட்சத்திரங்கள்?!!
நட்சத்திரங்களிடமே கேட்டேன்?!!
விடை கிடைக்குமுன்பே!
விடை பெற்றுக்கொண்டது;!
என் நட்சத்திர கனவு!
அலாரத்தின் கதறலால்.....!
ஷீ-நிசி

ஷீ-நிசி