நிழல் தேடும் மரங்கள் - சாந்தினி வரதராஐன்

Photo by FLY:D on Unsplash

விதைத்த விதை வெடித்து !
விருட்சமாக வளர்ந்து !
விழுதுகளை பரப்பி !
நிழலை அளித்த மரங்கள் !
துளிர்த்த இலைகள் பழுத்து !
நிலத்தில் விழும்பொழுது !
நிஜத்தை மறந்த மனித !
மனதை தேடும் மரங்கள். !
மண்ணில் அன்று குழந்தை !
வளர்ந்த பின்பு மனிதன் !
தன்னை வளர்த்த மண்ணை !
சுவடு பதித்த நினைவை !
எண்ணி பார்க்க இன்று !
இதயம் இல்லா மனிதன். !
உலாவரும் நிலவைப்போல !
உருகிவாடும் மரங்கள் !
நிலாவிடம் தூது செல்லும் !
தம் நிஜத்தை உரைக்கச் சொல்லும் !
தேய்ந்திடும் மதிகளெல்லாம் !
தேயும் காலம் கழிந்த பின்னும் !
வளர்ந்திடுவோம் என்ற எண்ணம் !
மனதில் எண்ணிக்களிக்கும் !
மதிகெட்ட மனிதம் மட்டும் !
வயது எல்லை கடந்த பின்னும் !
புதிதாய் பிறப்பதில்லை !
பு£¤ந்து கொள்வாய் மனிதா! !
கடந்ததை எண்ணி எண்ணி !
புலம்பும் நிலையை நீயும் கடந்து !
நிஜங்களை தேடித் தேடி !
நீட்சமாய் செல்வாய் மனிதா. !
ஏற்றமுடன் நல் கருத்து !
என்னுள் எழும் பொழுது !
தேற்றமுடன் நானும் !
எடுத்துரைக்கும் மரம் நான் !
வாட்டமின்றி தமை வருத்தி !
உமை வளர்த்த மரங்கள் !
தம் நிழலை தேடித் தேடி !
அலையும் நிலையை அறிந்தும் !
அறியா மனதம் இன்று !
அகதியாக இங்கு.............. !
!
சாந்தினி வரதராஜன் !
ஜேர்மனி
சாந்தினி வரதராஐன்

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in

There are no comments yet.