தமிழ் கவிதைகள்

தமிழ் கவிதைகள்

கொஞ்சமும்.. சாயல்.. உதவும்

செல்வராஜ் ஜெகதீசன் - அபுதாபி
பொருட்டு!
01.!
கொஞ்சமும்...!
------------------!
கொஞ்சமும்!
எதிர்பார்த்திருக்கவில்லை!
தேநீர்க் குவளையை!
வைக்கும் ஸ்டாண்டாக!
ஒரு கவிதை புத்தகத்தை!
வைத்திருப்பார்!
அந்த புத்தகக் கடைக்காரர்!
என்று.!
02.!
சாயல்...!
-------------!
இரு தளங்களுக்கிடைப்பட்ட!
படிக்கட்டுகளில் வைத்து!
காதலைச் சொன்ன கணம்!
விழிகள் உருட்டி!
மருண்ட உன் முகத்தின்!
சாயலேதுமின்றி!
இருந்தது!
பிரிவதற்காய் நாம்!
தேர்ந்து கொண்ட ஒரு!
பிற்பகல் வேளையில் !
மூடிய லிப்டின் கதவுகள்!
உள் வாங்கிப்போன !
உன் முகம்.!
!
03.!
உதவும் பொருட்டு...!
-------------------------!
லிப்டில்!
ஏறிய ஒருவனுக்கு!
உதவும் பொருட்டு!
விரைவாய் மூடும்!
பொத்தானை அழுத்தினேன்.!
அதுவரை பேசிக்கொண்டிருந்த!
அவன் அலைபேசியின்!
தொடர்பு விட்டுப் போனது

ஒரு நாளேனும்.. கோரிக்கை..தப்பித்தல்

ப.மதியழகன்
ஒரு நாளேனும்..கோரிக்கை.. தப்பித்தல் எளிதல்ல !
01.!
ஒரு நாளேனும் !
----------------------!
இன்னொருவரின் வாழ்க்கையை!
நான் வாழ்ந்தால் என்ன!
அவர் மீது குற்றம் சுமத்தி!
சிறைக்கு அனுப்பியேனும்!
அவரது குழந்தைகளை கடத்திச் சென்று!
அவரது நிம்மதியைக் குலைத்தேனும்!
அவரது மனைவியை கவர்ந்து சென்று!
அவரை பைத்தியமாக்கியேனும்!
அவரது லீலைகளை அம்பலப்படுத்தி!
அவரை தலைகுனிய வைத்தேனும்!
அவரை நிழலாய்ப் பின்தொடர்ந்து!
அவரின் ரகசியங்களை அறிந்து கொண்டேனும்!
அவரை கொலை செய்துவிட்டு!
அவர் போலவே நடித்தேனும்!
நான் தற்கொலை செய்து கொண்டு!
அவர் உடலில் புகுந்தேனும். !
!
02.!
கோரிக்கை !
--------------------!
வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி!
நாம் வைக்க இயலாது!
இன்னொருவரின் அடையாளத்தை!
நாம் பறிக்க இயலாது!
கடந்து சென்ற நிமிடத்தின் மீது!
நமது ஆளுமை எடுபடாது!
சுற்றி நடக்கும் விஷயங்களிலிருந்து!
தப்பிப் பிழைக்க முடியாது!
ஆசையால் துன்பம் என்றாலும்!
ஆனந்தத்தைத் தேடி ஓடாமலிருக்க முடியாது!
கொட்டிவிட்ட வார்த்தைகளை!
திரும்பப் பெற இயலாது!
நகரத்தின் நிர்வாணத்தைக் காண!
நடுநிசியில் வாய்ப்பு கிடைக்குமென்றால்!
ஓடாமலிருக்க முடியாது!
நாக்கின் ருசிக்கு அடிமையாகாமல்!
யாராலும் இருக்க இயலாது!
தயவுசெய்து!
கல்லறையில் தூங்கும் என்னை!
கடவுளைக் கண்டாயா எனக்!
கேட்காதீர்கள். !
!
03.!
தப்பித்தல் எளிதல்ல !
-------------------------!
இப்பூமியிலிருந்து!
வெளியேறும் வழியை!
தேடிக் கொண்டிருக்கிறேன்!
நீங்கள் எப்போதாவது!
வந்த வழியை!
ஞாபகப்படுத்தி பார்த்ததுண்டா!
கண்கள் அமானுஷ்யங்களைக்!
காண்கிறது!
காதுகள் சாத்தானின் குரலைக்!
கேட்கிறது!
எனக்கு மட்டும் ஏன் இப்படி!
என்று எண்ணாத நாளில்லை!
என்னை பகடை காயாக்கி!
என்ன பலனை அடையப் பார்க்கிறார்கள்!
பரமபத ஏணியில் ஏறுவதும்!
பாம்பு தீண்டி கீழே இறங்குவதுமாய்!
இருக்கிறது எனது வாழ்க்கை!
மரணப் புதைகுழியில்!
வலுக்கட்டாயமாக என்னைத்!
தள்ளப் பார்க்கிறார்கள்!
தட்டிக் கொண்டே இருக்கிறேன்!
எந்தக் கதவும் திறக்கப்படவில்லை!
கடவுளிடம் சரணடையும் முன்!
சாத்தானை ஒரு முறை!
சந்தித்துவிட்டு வருகிறேன்

லண்டனின் லட்சணம்

சத்தி சக்திதாசன்
சத்தி சக்திதாசன் !
!
சாராமாரியாக பறக்கின்றன !
சத்தத்துடன் வாகனங்கள் !
முற்று முழுதாய் தம்மை உடைகளினால் !
மூடிய மனிதர்கள் !
முழுதாய் விடிவைக் காணாமலே !
மூச்சிறைக்க ஓடும் !
முதல் உலக மாந்தர்கள் !
தேடியும் கிடைக்கா சூரிய ஒளியை !
தேடிப் பூங்காக்களில் தவமிருக்கும் !
தேர்ந்த மக்கள் !
அவசரமான வாழ்வை !
அவசரமாய் வாழ்ந்து !
அவசரமாய் முடித்து !
அடங்கியே விடுவர் !
பனிக்கட்டிகள் தலைமேல் விழுந்தும் !
பக்கெட்டில் வாங்குவார் கட்டி ஜஸை !
மழை பெய்தால் நகரெங்கும் !
மடைதிறந்த வெள்ளம் !
பனிப்பெய்தால் சாலையெங்கும் !
பழுதடைந்து நிற்கும் வாகனங்கள் !
காற்றடித்தால் தெருவெங்கும் !
கட்டையாய் சரிந்திடும் மரங்கள் !
இலையுதிர் காலமென்றால் !
இயங்கமறுக்கும் புகையிரதம் !
இல்லையா இங்கே இனிமையான உணர்வுகள் ? !
இரவிரவாய் மதுவருந்தி , இல்லம் !
இருந்து இரா நிலயில் அவர்க்கு ஓர் மகிழ்ச்சி !
கோடைகாலத்திலே !
கோலங்களைப் பார்க்கணுமே !
உடலை மூடும் உடையெல்லாம் !
உண்மையாக ஒரு முழமே !
அதுவும் ஓர் மகிழ்ச்சி அவ்ர்களுக்கு !
வெப்பம் கூடினால் ஓடிடுவார் !
வெண்மணற் கடற்கரைக்கே !
ஆசிய மக்கள் எமக்கெல்லாம் !
அடிமனதில் !
அடங்காத எண்ணமொன்று !
நிறத்தாலே எமைப் பிரித்து !
நிச்சயமாய் !
நீங்காத வேற்றுமை அளித்திடுவார் !
நினைவெல்லாம் இதுவேதான் !
என்னவென்று சொல்லுவேன் ? !
திறமை உண்டென்றால் தடையின்றி !
திறக்கும் வழி எமக்கு இவ்வூரில் !
கல்வி கற்பதற்கு உள்ள வழிமுறைகள் !
கடைசிவரை !
கைகொடுக்கும் !
உழைத்துவாழ இங்கு !
உண்டாமே பலவழிகள் !
உண்மை மனிதர் பலருண்டு !
உள்ளம் ஒன்றே அவர் சொத்தென்று !
நிறங்கள் பிரிவினை !
நிறைந்ததிங்கென்றால் !
நிறைவாய் வாழும் பல தமிழர் !
நிறைவதன் மர்மமென்ன? !
ஒன்று சொல்வேன் கேளீர் ! !
லண்டன் என்னும் நகர் !
லட்சங்கள் பலவற்றை !
லட்சியத்தோடு வாழும் !
லட்சண மனிதருக்கு அளித்ததுண்டு !
காலநிலை !
கவலைதான் !
நிறப்பிரிவும் நிஜம்தான் !
ஆனாலும் தோழனே !
தாயகத்திற்கடுத்து எமை !
தாலாட்டி வளர்த்த !
தரமான லண்டன் !
தப்பாமல் லட்சணம்தான்

தொடர்ந்து வரும் முதல் சந்திப்பு

விஷ்ணு
நான்!
அன்றும்!
வழக்கம்போல்!
பேருந்து நிறுத்தத்தில் ...!
பட படக்கும்!
விழிகளோடு!
சிறகடித்து வருகிறாய் ..!
நெருங்கி வர வர!
எனை நோக்கி ...!
மெல்லிய புன்னகை !!!...!
அந்த புன்னகையில்!
சிறிதாக சுருங்கிய!
இந்த பிரபஞ்சம் ...!
இன்றும் சிறிதாகவே ...!
விமோசனமே இன்றி!
விரியாமல் ...!
மீண்டும் மீண்டும்!
சொன்னதையே!
சொல்லிக்கொண்டிருந்தால்!
எதையும்!
எதுவுமாக்கலாம் ...!
தொடர்ந்த!
நம் சந்திப்புகளில் ..!
சொல்லி சொல்லி!
என்னில் நீ!
எதை ..எதுவாக்கினாய் ???..!
இன்றும் எனக்கு!
புரியாத புதிராய் ...!
காலங்கள்!
பல கடந்தும் ...!
மனதில் தினம் சந்திக்கிறேன் ..!
அதே காலை...!
அதே நிறுத்தம் ...!
அனைத்தும்!
அப்படியே ..!
ஆனால் நீ மட்டும்!
முந்தைய!
நாட்களை விட!
அதி அழகாய் ...அன்பாய் ..!
சொன்னதையே!
சொல்லிக்கொண்டு ...!
!
-விஷ்ணு

மண் வாசனை

முத்தாசென் கண்ணா
விமானத்தில் இருந்து !
தூக்கியெறியப்பட்ட!
பொட்டலச்சோறு !
அவமானப்படுத்தியது!
அன்று தாய் மண்ணில் !
பிச்சை எடுத்துப் பிழைத்து!
இன்று வெளி மண்ணில் !
அகதியாய் வந்த ஊனனுக்கு!
-முத்தாசென் கண்ணா

அவள் விபச்சாரி.. எனது நண்பன்

அசரீரி
அவள் விபச்சாரி..எனது நண்பன் இல்லாமல் !
------------------------------------------------------------------!
01. !
அவள் விபச்சாரி எனப்படுகிறாள்!
-------------------------------------------------!
இரவு மிகவும் குளிர்ந்து போயிருந்ததில்!
ஒதுங்குவதில் அவையிரண்டும்!
அவசரப்பட்டிருக்க வேண்டும்.!
அவள் மிகவும் கலைந்தும்!
அவன் மிகவும் களைத்தும்!
காணப்பட்டதிலிருந்து!
ஊகிக்க முடிந்தது இதை...!
காலை வேகமாக பனிக்குளிப்பு முடிந்து!
சூரியனை உடுத்தத் தொடங்கும் போதே!
அவை தம்மை விடுவித்துக் கொண்டன!
மேக அதி நே!
தவ சீயக் தென்ட என்பதே!
புணர்வின் இறுதியின் பின் அவள்!
தொடங்கிய முனகலாயிருந்தது!
ஒன்றுமே தெரியாதது போல!
ஒன்றுமே நடவாதது போல!
சிங்களமே தெரியாதது போல!
அவன் நடந்து போனான்!
கெரி வேசிகே புதா!
ரேயட ஒயா என்ட!
மங் பலாகன்னம்!
என்ற படி!
நேற்றுக் குளித்த பின்!
எடுத்து வைத்த!
சிரிப்பை உதட்டிலிருந்தும்!
பூவைத்தலையிலிருந்தும்!
களற்றி வைத்து விட்டு!
பொதுக்கிணற்றுப்பக்கம் போனாள்!
இரவைக்கு முன்பதாக!
மீண்டும்!
தொற்றுநீக்கிக் கொள்ளவென..!
02.!
எனது நண்பன் இல்லாமல் போய்விட்ட பின்னிருந்து..!
--------------------------------------------------------------------------!
ஏற்கவே முடியாத!
பிரிவின் துயரமொன்றை!
ஒரு பெரும் மலைப்பாம்பு போல!
என்னில் சுமத்துவதாகவே!
அவனது பயணம் எனக்குள்!
இறுகியிருக்கிறது இன்னும்.!
தூக்கியெடுக்கவே முடியாத!
ஒரு கலர் நிழல் போலதான்!
என் அன்றாடத்தின் ஒவ்வொரு அசைவோடும்!
அவன் படிந்திருந்தான்!
அவனின் சிகரத்தின் மேல் நானும்!
எனதின் மேல் அவனுமாக!
ஏறியிருந்து கதைப்பதை வாய்பார்ப்பதில்!
அலைகளுக்குத்தான் என்ன கொள்ளை விருப்பம்..!
இப்படியாயிருந்தவனின்!
வெற்றிடத்தின் ஆழத்துக்குள் தான்!
அந்த மலைப்பாம்பு!
என் எலும்புகள் நொறுங்குமாறு!
இறுக்கி நோவடிக்கிறது!
அவன் இல்லாததைக்!
குத்திக்காட்ட வரும் காற்றின் உராஞ்சுதலில்!
பாதியில் நின்று போகும் பெருமூச்சும்,!
பெருஞ் சத்தமாய் வெடித்து அழச்சொல்லும்!
வெப்புசாரமுமாய்!
என் மனம் பிய்ந்து போகும்!
ஆனாலும்!
கொஞ்சமும் இரக்கமில்லை!
இந்தக் காற்றுக்கு..!
அவன் இருக்கிறான் என்பது பற்றியோ,!
அவனாகத்தான் இருக்கிறான் என்பது பற்றியோ,!
அவனின் ஞாபகங்களில் நான் வருவது பற்றியோ,!
எதையுமே இப்போது!
கொண்டு வருவதை நிறுத்திற்று!
கடல் தாண்டி வர!
செரியான மாய்ச்சலும்,!
சோம்பேறித்தனமும் அதற்கு!
!
-அசரீரி

எங்கள் குழந்தைகள்

துவாரகன்
எங்கள் குழந்தைகள்!
வீடுகளைத் தொலைத்து விட்டார்கள்!
எங்கள் குழந்தைகள்!
வீதிகளைத் தொலைத்து விட்டார்கள்!
எங்கள் குழந்தைகள்!
சிரிப்புகளைத் தொலைத்து விட்டார்கள்!
இனியும்!
அவற்றைத் தேடிக் கொள்வோம் என்ற நம்பிக்கை!
எங்கள் கைகளை விட்டுத்!
தூரப் போய்விட்டன.!
படகோட்டி தன் துடுப்பைத் தொலைத்து விட்டதுபோல்!
இப்போ எங்கள் குழந்தைகளுக்குத் தேவை!
வானவில்லும் நட்சத்திரங்களும் அல்ல!
நடந்த களைப்புத் தீர!
ஒரு முள்ளில்லாப் பற்றை!
தாகம் தீர்ப்பதற்குக்!
கொஞ்சம் குடிதண்ணீர்!
-துவாரகன்

நியாயமா...மானிடா

வைகறை நிலா
மேகம் தந்தேன்!
மழை தர...!
அதனையும் கலைத்திட!
கற்றுக்கொண்டாய் நீ!
உலோகம் தந்தேன்!
நற்கருவிகள் செய்திட..!
தீய கருவிகள் செய்தாய் நீ!
தீவிரவாதம் வளர்க்க...!
செடிகள் மரங்கள்!
செழிக்க வைத்தேன் நான்..!
அத்தனையும் அழித்துவிட்டு!
மழையில்லை!
கடவுளுக்கு கண்ணில்லை என்கிறாய்!
இயற்கை செல்வத்தோடு!
மழையை பொழிந்தேன் நான்!
கடலில் விட்டுவிட்டு;!
வறட்சி வந்ததும்!
கடவுளுக்கு கருணையில்லை என்கிறாய்!
தவறெல்லாம் உன்மீது!
பழிமட்டும் என்மீதா..!
நியாயமா..மானிடா..?!
- வைகறை நிலா

இயற்கை மருந்து

சத்தி சக்திதாசன்
வெண்ணிலவே கொஞ்சம் நில் !
வேதனையால் வெந்த என் நெஞ்சத்தை உறங்க வைக்கும் !
குளிர்மை எங்கிருந்து பெற்றாய் சொல் !
தென்றலோடு உறவாடும் மல்லிகையே ! !
தூங்க மறுத்து சோகத்தில் தள்ளாடும் என்னிதயத்தை ஓர் நொடியில் !
மகிழ்விக்கும் சுகந்தத்தை யார் கொடுத்தார் !
நீலவானில் பவனி வரும் வெண்மேகங்களே ! !
காலகாலமாய் மாறாத காயத்தின் வடுக்களை கணத்தினிலே ஆற வைக்கும் !
தூய்மையான வெண்மையை எவ்விடத்தே பெற்றீர் !
இரவின் இருளைச் சுட்டுப் பொசுக்கும் சூரியனே ! !
உன் ஒளியைக் கொண்டு என் மன இருளை விலக்கும் !
ஆற்றல் நீ அடைந்தது எப்போ சொல் !
புவியில் பசி போக்கும் அரிசியைத் தாங்கி நிற்கும் நெற்கதிரே ! !
புண்ணான என் எண்ணங்களை ஒரு நொடியேனும் !
பூவாக்கும் அந்த பச்சை வண்ணத்தை எங்கே வாங்கினாய் !
இறைவா அடுக்கடுக்காய் நீ கொடுத்தாய் சோதனைகள் கருணையோடு !
இயற்கைதனை என்னருகில் இருத்தி உரையாடும் மனத்தை நீ எனக்கு !
ஈன்றதனால் மட்டுமே இன்றும் நான் இவ்வுலகில் தவழ்கின்றேன் !
-- சத்தி சக்திதாசன்

தொராண்டோவின் இரவுப் பொழுதொன்றில்

வ.ந.கிரிதரன்
1.!
கவிந்து கிடக்குமிரவின் அமைதியில்!
இளவேனிற்பொழுதொன்றின்!
துணையுடன் கழியுமொரு பொழுதொன்றில்!
'டொராண்டோ'ப் பெருநகரின் நடைபாதைகளில்!
'இடவெளி' வீடுகளில் முடங்கிக் கிடக்கின்றனர்!
வீடற்றவாசிகள் சிலர்.!
விரிந்து கிடக்கிறது வெளி.!
எதற்கிந்த முடக்கம்?!
தாராளமாகவே உங்கள் கால்களைக் கைகளை நீட்டி,!
நிமிர்ந்து, ஆசுவாசமாகத் துயில்வதற்குமா!
தயக்கம் வேண்டிக் கிடக்கிறது.!
2.!
பகலவனாட்சியில்!
பல்வகை வாகனங்கள்!!
பல்லின மானிடர்கள்!!
விளங்குமிப் பெருநகரின்!
குணம்!
இரவுகளில்தான்!
எவ்விதமெல்லாம்!
மாறிவிடுகிறது!!
மாடப்புறாக்களே!!
நள்ளிரவில் துஞ்சுதல் தவிர்த்து!
இன்னும் இரைதேடுவீர்!!
உமதியல்புகளை!
எவ்விதம் மாற்றிக் கொண்டீர்?!
நகரத்துப் புறாக்களா?!
இரவுப் புறாக்களா?!
சூழல் மாறிடினும்!
கலங்கிடாப் பட்சிகளே!!
உம் வல்லமைகண்டு!
பிரமித்துத்தான் போகின்றதென்!
மனம்.!
3.!
நகரில் துஞ்சாமலிருப்பவை!
இவை மட்டும்தானென்பதில்லை!!
துஞ்சாமலிருப்பவர்களும்!
நிறைந்துதான் இருக்கிறார்கள்.!
ஆலைத் தொழிலாளர், ஓரின,!
பல்லினப் புணர்வுகளுக்காய்!
வலைவிரிக்கும்!
வனிதையர், வாலிபர்.!
'மருந்து'விற்கும் போதை!
வர்த்தகர்கள்,!
திருடர்கள், காவலர்கள்....!
துஞ்சாதிருத்தல் பெருநகரப்!
பண்புகளிலொன்றன்றோ!!
4.!
இவ்விதமானதொரு,!
வழக்கமானதொரு!
பெருநகரத்தின்!
இரவுப் பொழுதொன்றில்,!
'பின்இல்' புல்வெளியில்!
சாய்கதிரை விரித்ததில்!
சாய்ந்திருக்கின்றேன்.!
பெருநகரத்தின் இடவெளியில்!
ஒளிந்திருக்கும் இயற்கையைச்!
சுகிப்பதற்காக.!
சிறுவயதில்!
'முன்இல்' தந்தையின்!
'சாறத்'தொட்டிலில்!
இயற்கையைச் சுகித்ததின்!
நீட்சியிது.!
பல்வகைக் கூகைகள் (கோட்டான்கள், நத்துகள்)!
சப்திக்கும் இரவுகளில், விண்சுடர் ரசித்தல்!
பால்யத்துப் பிராயத்து!
வழக்கம்.!
இன்னும் தொடரும் -அப்!
பழக்கம்.!
தோடஞ்சுளையென!
அடிவானில்!
கா(ல)ல்மதி!!
அந்தரத்தில் தொங்குமந்த!
மதி!!
அதனெழிலில் தெரிகிறது!
வெளிதொங்குமென்னிருப்பின்!
கதி!!
!
5.!
பெருநகரத்துப் பரந்த 'காங்ரீட்' வனத்தின்!
மத்தியில் ஒளிந்திருக்கும் இயற்கைக்!
கன்னியின் வனப்பினை!
இவ்விதமான இரவுப் பொழுதுகளில்தான்!
ஆறுதலாக, உணர்ந்து, சிந்தித்து,!
இரசிக்க முடிகிறது.!
சில சமயங்களில் நகரத்தின்!
மயானங்களினருகில்!
நரிகளைக் கண்டு வியந்திருக்கின்றேன்.!
பள்ளத்தாக்குப் பகுதிகளில்!
மானினங்களைக் கண்டிருக்கின்றேன்.!
குழிமுயல்களை, இன்னும் பல!
உயிரினங்களையெல்லாம்!
இத்தகைய இரவுப் பொழுதுகளில்!
கண்டிருக்கின்றேன்.!
அப்பொழுதெல்லாம்!
வ்ளைகளுக்குள் வாழ்ந்து!
இரவுகளில்!
இந்தக் 'காங்ரீட்' வனத்தினுள்!
சஞ்சரிக்கும் அவற்றின்!
படைப்பின் நேர்த்தியில்!
மனதிழந்திருக்கின்றேன்.!
6.!
வெளியில் விரைமொரு!
வாயுக் குமிழி! - உள்!
உயிர்!
ஆடும் ஆட்டம்தான்!
என்னே!!
ஒளியாண்டுத் தனிமை!!
வெறுமை! -உணராத!
ஆட்டம்!!
பேயாட்டம்!!
இந்தத்!
- தனிமையெல்லாம்,!
- வெறுமையெல்லாம்,!
- தொலைவெல்லாம்,!
ஒளியணங்கின் ஓயாத!
நாட்டியமோ! - மாய!
நாட்டியமோ?.!
ஆயின்,!
விழியிழந்த குருடருக்கு!
அவை!
ஒலியணங்கின்!
சாகசமோ?!!
7.!
இந்தப் பெருநகரத்திருப்பில்!
நான் சுகிக்கும் பொழுதுகளில்!
இந்த இரவுப் பொழுதுகள்!
சிறப்பு மிக்கவை.!
ஏனெனில் -அவை!
எப்பொழுதுமே!
என் சிந்தையின்!
- விரிதலை,!
- புரிதலை!
- அறிதலை!
அதிகரிக்க வைப்பவை;!
அதனால்தான்