நீ தீ!
பிறக்கும் பொழுதே!
தொப்புள் கொடியறுத்து பிரிகிறோம்!!
வளரும் பருவத்திலே!
மனதை விட்டு பிரிகிறது!
மழலை பருவ நினைவெல்லாம்!
பள்ளித் தோழரெல்லாம்!
சொல்லிப் பிரிகின்றனர்!
பத்தாவது படிப்புடனே!
கல்லூரி நட்பெல்லாம்!
கலர் கனவுகளாய் பிரிகிறது!
காதலியும் பிரிந்து விட்டாள்!
கல்யாண பத்திரிக்கை கொடுத்து!
திருமணம் முடிந்த பின்னே!
மனதாலே பிரிகிறோம்!
தாய்இ தந்தையை!
சில உயரங்கள் கண்டுவிட்டால்!
உறவுகளும் பிரிகிறது!
ஒன்றில் ஆரம்பித்து!
ஒடுங்கும் வரை!
ஒவ்வொன்றாய் பிரிகிறோம்!
ஒவ்வொரு வயதாய் பிரிகிறோம்!
இளமையை பிரிகிறோம்!
முதுமையில் அறிகிறோம்!
எல்லாம் இங்கே!
இரயில் சிநேகம் போலத்தான்!
பிரிக்க முடியாத பிரிவு!
பிறந்த மண்ணில் புதைவதுதான்!!
!
கவி ஆக்கம்: நீ தீ
நீதீ