மகா சக்தி.. பூமி சொல்கிறது.. !
கிராமத்து தென்றல் !
01.!
மகா சக்தி!
--------------------!
விழியோரம் வடிகின்ற!
ஒரு நீர்த் துளிதான்!
இந்த உலகத்திலேயே!
சக்தி மிக்கது!!
அணு குண்டை விடவும்!
அபூர்வமானது.!
ஒரு நீர்ச்சுணையருகில்!
நின்று!
தவங்கிடந்தாலும்!
கிடைக்காது… இந்த!
அதிசயத்து நீர்!!
இந்தப் பாரையே!
புறட்டுகின்ற!
பக்குவம் பெற்றது!
கண்ணீர்த் துளிதான்!!
ஆசைப் பட்டால்!
கண்ணீரிலும்!
கப்பல் ஓட்டலாம்…!
அதற்கும் மிஞ்சினால்!
ஒரு துளிக்!
கண்ணீரிலேயே!
அகிலத்தை அடங்க!
வைக்கலாம்… !
02.!
பூமி சொல்கிறது!
-----------------------!
“ஈசனவன் படைத்து விட்டான்…!
இமயங்களைச் சுமத்தி விட்டான்…!
என்னிதயம் மண்ணுக்குள்ளே!
மண்ணவரோ எனக்கு மேலே…,!
மானிடனின் மனசுக்குள்ளே!
எதைப் படைத்தாய்!
என்னிறைவா..?!
எனைச்சுடச்சுட!
வைப்பதேனோ…!
காரிருளும் ஒளிமயமும்!
என் வாழ்க்கை வட்டங்கள்…!
நான் சுமக்கின்ற மானிடர்!
தருமதிப்புகளும் “வட்டங்கள்”!
வாய் திறந்து சொல்லி விட!
என் வாயோ இதயத்தில்!!
எனைச்சுடச்சுட!
வைப்பதேனோ…!
சுடச்சுட வைப்பதேனோ!
எனைச்சூடதனால் சூழ்வதேனோ…!
படப்பட நெகிழுகிறேன்!
மானிடப் பாதம் பட்டதனால்!
பாடுகிறேன்..!”!
!
03.!
கிராமத்து தென்றல் !
-----------------------------!
சொட்டும் தென்றல் சொடக்கெடுத்து!
சோனாமாரி பொழிகிறது….!
போதை கசிந்து உள்ளத்திலே!
ஊழித் தீயாய் எரிகிறது….!
இத்தனை சுவாசங்கள் தாண்டி!
மறுபடி ஜனனம் நடக்கிறது!
இருதயத் துடிப்பைத் தூண்டிவிட்டு!
அழகிய தென்றல் அழைக்கிறது…!
தென்றல் ஊதிய எழில் மிகு தீபம்!
நெஞ்சில் பிடித்து ஒளிர்கிறது….!
ஏதோ மனது பீடித்திங்கு!
பட்டுத் துண்டாய்ப் பறக்கிறது!
இதுவரை நாளும் உயிரின்றி உடலோ!
தனியாய் வாடிக்கிடந்ததிங்கே..!
தென்றலின் தணிக்கரம் தீண்டியதாலே!
முதல் முறை நாடி துடிக்கின்றதே….!
ஒரு சொற்ப முகிலாய்!
மனசுக்குள் புகுந்து!
“சோ”வென மழையாய்ப்!
பொழியுகிறாய்…!
கீழ்த்திசை ஒளியாய் உள்ளத்தில் எழுந்து!
உஷ்ணத் தீயால் வாட்டுகிறாய்…
ஜே.ஜுனைட், இலங்கை